Monday, December 5, 2016

சொன்னதை செய்வேன், சொல்லாததையும் செய்வேன் : மிஸ்டர் ட்ரம்ப்

"நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்" என சொல்லிவிட்டு, திடீரென‌ மதுக்கடைகளை திறந்து வைப்பது திராவிட அரசியலாக இருக்கலாம்


நான் சொன்னதை செய்வேன், சொல்லாததையும் செய்வேன் என களம் இறங்கி இருக்கின்றார் மிஸ்டர் டிரம்ப். மனிதர் ஒரு வகையாகத்தான் அறிவிப்பினை விட்டுகொண்டிருக்கின்றார்


காஸ்ட்ரோவினை வாழ்த்திய கன்னட பிரதமரை வழக்கமான அமெரிக்க அடிப்பொடிகளுடன் சேர்ந்து விளாசினார், அதுவாவது அரசியல்




திடீரென ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஏதோ சொல்ல, உலக பெரும் சக்தியான அமெரிக்க சி.ஐ.ஏ இயக்குநரே தலையில் அடித்துகொண்டு புலம்பும் காட்சி நடக்கின்றது, அதோடு விட்டாரா?


சீனாவினை சீண்ட ஆரம்பித்துவிட்டார்


அதாவது சீனா அபர்த்துவிட்ட நாடு திபெத், விழுங்க சமயம் பார்க்கும் நாடு தைவான். தலாய்லாமாவை யாரும் சந்தித்தாலோ,, தைவானுடன் கை குலுக்கினாலோ சீனா சீறுவது கொஞ்சமல்ல‌


தலாய்லாமாவிற்காக இந்தியாவோடு யுத்தமே நடத்தியது சீனா, அவரோ இன்றளவும் உலகெல்லாம் அழுது திரிகின்றார். முன்பெல்லாம் கடும் ஆதரவு வழங்கிய இந்தியா இப்பொழுதெல்லாம் சீனாவினை பகைக்க விரும்பாமல் அவரை கொஞ்சம் தள்ளி வைக்கின்றது


தைவான் சிறிய நாடு ஆனால் அமெரிக்க ஆதரவில் சீனாவிற்கு அசால்ட்டாக சவால் விடும், தைவான் சீனாவின் ஒரு பகுதி என சீனா அறிவித்தால், "நாங்கள் தான் ஒரிஜினல் சைனா நீ டூப்ளிகேட்.." என சீனாவிற்கு சவால் விடுவது தைவான்


தைவானின் பெரும் பலம் அமெரிக்கா எனினும் நிதானமான ஒபாமா காலத்தில் கொஞ்சம் உறவு மந்தமே, சில ஆயுதங்களை கூட சீன நெருக்கடியால் அமெரிக்கா கொடுக்கவில்லை


இப்பொழுது இங்குதான் களத்திற்கு வருகின்றார் டிரம்ப்


ஹாய் தலாய்லாமா ஹவ் ஆர் யூ, உங்கள் போராட்டம் எப்படி செல்கிறது என அவருக்கு ஒரு போன், தைவான் அதிபருக்கு "எப்பொழுது என்னோடு டின்னர் சாப்பிட வருவீர்" என ஒரு போன் என பொளந்து கட்டுகின்றார்


கடும் கோபத்தில் இருக்கின்றது சீனா, உறுமுகின்றது.


வியாபாரத்தை விட்டுவிட்டு முழுநேர அமெரிக்க அதிபர் நான் என சொன்ன டிரம்ப், அந்த அமெரிக்க அதிபருக்கான உலக நாட்டாமை துண்டை தோக்கி தோளில் போட்டுவிட்டார்


இனி நாற்காலியில் அமர்ந்து துண்டை உதறி தீர்ப்பு சொல்வது மட்டும்தான் பாக்கி


மனிதர் இன்னும் என்னவெல்லாம் செய்வாரோ??



No comments:

Post a Comment