Tuesday, March 14, 2017

கச்சத்தீவை தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் கொடுத்தார் : சுப்பிரமணியன் சுவாமி

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் கொடுத்தார் : சுப்பிரமணியன் சுவாமி


ராஜிவினை கொல்ல புலிகளுக்கு உதவியாக கருப்புபூனை படையினை வாபஸ்பெற இவர் எவ்வளவு வாங்கினார் என்றோ,


அன்று சசிகலா மீதே வழக்கு தொடர்ந்த இவர், இன்று சசிகலாவிற்கு வரிந்துகட்டி உதவ எவ்வளவு வாங்கினார் என்றோ யார் கேட்கபோகின்றார்கள்??




இந்தி எதிர்ப்பு முதல் எத்தனையோ போராட்டங்களை திமுக நடத்தியபொழுது பணம் கொடுத்தா இந்திரா முடித்தார்?


மிசா காலத்தில் ஏன் கலைக்க போகின்றார், பணம் கொடுத்து கலைஞரை அரியணையில் அமரவைக்க முடியாதா?


பணம் கொடுத்து கலைஞரை சமாளிக்கமுடியுமென்றால் திமுகவினையே இந்திரா வாங்கியிருக்கமாட்டாரா?


ஏன் ராமசந்திரன் என்றொருவரை உருவாக்கி அழகுபார்த்திருக்க போகின்றார்?


பணம் கொடுத்த குற்றசாட்டு சொல்லவேண்டுமென்றால், கலைஞரை எதிர்த்தவர்கள் மேல் சொல்லலாம், இவர்கள் பணம் வாங்கிகொண்டு கலைஞரை எதிர்த்தார்கள்..


அதில் ஒரு உண்மையும் இருக்கலாம்


ஆனால் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, கலைஞருக்கே பணம் கொடுத்தார்கள் என்றா புலம்புவார்?


விலை போவதென்று முடிவுகட்டியிருந்தால் இந்நாள் வரை அக்கட்சி நிலைத்து நிற்க முடியுமா?..


பணத்திற்கு விலைபோக அது என்ன சு.சாமியின் ஜனதா கட்சியா?


சு.சாமி, ச்சீ...ச்சேய்.. சாமியாகி கொண்டிருக்கின்றார்.



No comments:

Post a Comment