Monday, December 5, 2016

அப்போலோ அப்டேட்ஸ்




 தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகின்றது , எங்கும் ஒரு வித பதற்றம், ஒரு விதமான பரபரப்புடன் எதிர்பார்ப்பு


இதனை யார் எதிர்பார்த்தார்களோ இல்லையோ, அவர் எதிர்பார்த்துதான் அவர் இன்னொரு மருத்துவமனையில் சென்று அமர்ந்தாரோ என்னமோ?

இந்த சூழலில் அவர் அங்கு இருப்பதுதான் அவருக்கும் நல்லது.

ஆனால் எப்படி சென்றார்?

முன்னெச்செரிக்கையில் மகா கெட்டிக்காரர்தான், இந்த அளவிற்கா என்பதில்தான் வியந்து பார்க்கவேண்டி இருக்கின்றது

பல விஷயங்கள் புரியவில்லை. புரியவும் புரியாது விட்டுவிடலாம்.



மிக மோசமான கட்டத்தில் ஜெ.  : அப்பல்லோ அறிக்கை


ஏனோ மனம் அவரை சுற்றி சுற்றியே வருகின்றது, வேறு எங்கும் சிந்தனை செல்ல மறுக்கின்றது.


அந்த 36 ஆண்டு காலமும் கண்களுக்குள் மின்னலென வந்து செல்கின்றது.





அந்த புன்சிரிப்புடன் கண்களில் தன்னம்பிக்கை மிளிர முகத்தில் மறைத்து வைத்த வைராக்கியத்துடன் அவர் வலம் வந்த காட்சிகள் மாறி மாறி வருகின்றன..

மனதில் கனத்த வலியுடம் மவுனமும் வந்து அமர்கின்றது,

தனியொருத்தியாக அரசியலை போராடி ஆட்டிபடைத்த அவர், தனி ஒருத்தியாக மருத்துவ கருவிகளுடன் தனியாக போராடி கொண்டிருக்கின்றார்

எத்தனையோ கோடி மக்களை வசீகரித்த ஒருவருக்காய் மருத்துவ உலகம் இறுதிபோராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றது

இறைவன் அவருக்கான‌ "அந்த " நொடியினை நெடுங்காலம் தள்ளிபோடட்டும் என மனம் இறைஞ்சுகின்றது

ஆள அனுமதித்த இறைவன் அவர் வாழவும் அனுமதிக்கட்டும்..









அப்பல்லோவில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், அழைப்பு வந்ததால் சென்றனர்


பறக்கும் குதிரை முன்பாகவோ அதாவது எம்ஜிஆர் சமாதியிலோ, கட்சி அலுவலகத்திலோ, சட்டமன்றத்திலோ கூடினால் அர்த்தமுண்டு


அப்பல்லோவில் கூடவேண்டிய அவசியமென்ன? டாக்டர்களை அருகில் வைத்துகொண்டு சொல்லபடவேண்டிய அதிர்ச்சி செய்தியோ?




அதிர்ச்சி செய்தி என்றால், மொத்தமாக ராஜினாமா செய்துவிடுங்கள் என அறிவித்துவிடுவார்களோ?, உடனே நெஞ்சை பிடிக்கும் எம்எல்ஏக்களை அப்படியே தூக்கி படுக்க வைக்க இந்த ஏற்பாடாக இருக்கலாம்.


ஒவ்வொரு எம் எல் ஏவும் அள்ளிவிட்ட பணம் என்ன? நெஞ்சு வலிக்காதா?


ரெட்டி ரொட்டியாகும் நேரம்...










தமிழக அரசு கேட்டுக்கொண்டால் ஜெயா சிகிச்சைக்கு மத்திய அரசு உதவ தயாராக உள்ளது : மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு

இவர் எப்படி அமைச்சரானார்? இங்கு தமிழக அரசே இல்லையே, அது அப்பல்லோவில் ஐசியூ வார்டில் இருக்கின்றது,

பின் எப்படி அதுவாக கேட்கும்?









1 comment:

  1. அவர் சிறந்த முதல்வரா
    இல்லையா தெரியாது,
    அவர் கொண்டுவந்த திட்டங்கள்
    எல்லாம் மக்களுக்கு பலனளித்தனவா
    தெரியாது, எம்ஜிஆர் அளவுக்கு
    நற்காரியங்களை செய்திருக்கிறார
    ா தெரியாது, கலைஞரை விட அரசியல்
    ஞானம் கொண்டவரா
    தெரியாது, தமிழகத்தின் மேல்
    உண்மையிலேயே பற்று கொண்டவரா
    தெரியாது,
    இது எதுவுமே
    தெரியாமல் போனாலும்
    ஒன்று மட்டும் நன்றாகத்தெரியும்,
    இத்தனை ஆண் சிங்கங்கள் நடமாடும்
    அரசியல் காட்டுக்குள் ஒற்றை
    பெண்சிங்கமாய் உள்ளே நுழைந்து
    தனியொரு பெண்மணியாய்
    பல ஆண்டுகளாக ராஜ தர்பார்
    செய்தவர்!
    இவர்களை போன்ற ராஜதந்திரிகளுக்கு
    மத்தியில் வேறொரு
    பெண்ணால் இப்படி சாதிக்க
    முடியுமா என்றால் நிச்சயம் பெருத்த
    சந்தேகம் தான்! கணவனோடும் குடும்பத்தோடும்
    சிறு சிறு பிரச்சனைகள் என்றாலே உடைந்து
    போவதும், சிதைந்து போவதும்,
    செத்துப்போவதுமாய் இருக்கின்ற
    பெண்களுக்கு மத்தியில் கடைசிவரை
    போர்களத்தில் நின்று, வென்றாலும்
    வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நடந்து
    எல்லோரையும் அதிரவைத்த அந்த தைரியத்தை
    ஒவ்வொரு பெண்ணும்
    கற்றுக்கொள்ள வேண்டும்!
    சம காலத்தில் வாழ்ந்த இதைவிட சிறந்த
    சாதனை பெண்மணி வேறு யாருமில்லை!
    அவர் வருவாரோ மாட்டாரோ
    தெரியாது, ஆனால் அவருடைய
    வாழ்க்கை நெருப்பின் ஊடே நிகழ்ந்த
    நெடும் வெற்றிப்பயணம்! அந்த
    நெருப்பு பயணத்தை நினைவில்
    வைத்துக்கொண்டாலே போதும்
    ஒவ்வொரு பெண்ணுக்கும்
    ஓராயிரம் கைதாங்கும் பலம் வந்து
    கஷ்டங்களை கடந்துவிடுவார்கள்! குறைகள்
    பல இருந்தாலும் பெருமைப்பட நிறைய
    விஷயங்கள் இருக்கிறது!

    ReplyDelete