
தமிழகத்தின் தனிபெரும் சாதனையாளர்களில் ஒருவரும், உலக நாடுகளில் எல்லாம் பெரும் மரியாதையினையும் பெற்றுவிட்டவருமான அவர், தன் வாழ்நாள் சாதனை, இந்த சமூகத்திற்கு தான் சொல்லும் அறிவுரைகள் என எல்லாவற்றையும் புத்தகமாக எழுதியிருக்கின்றாராம்
யார் அந்த சாதனையாளர்?, சமீபத்தில் நோபல் பரிசினை நூலிழையில் தவற விட்ட ஐஸ்வர்யா தனுஷ். ரஜினியின் மகளான அதே ஐஸ்வர்யா.
தான் சிறந்த இயக்குநர், நடனக்காரர், மிக சிறந்த பாடகி என உலகிற்கு நிரூபித்துவிட்ட அவருக்கு தான் பெரும் எழுத்தாளர் என நிரூபித்து காட்ட வேண்டுமாம்
புத்தகம் விரைவில் வெளிவருமாம், அதில் தான் கடந்து வந்த மகா சிரமான பாதை(?), துயரம், துக்கம், துரோகம், வெறுப்பு எல்லாம் பதிவு செய்திருக்கின்றாராம், புத்தகம் வரும் 12ம் தேதி ரஜினி பிறந்த நாள் அன்று வெளியிடபடுமாம்
அவர் எதனையும் சொல்லட்டும், ஆனால் துரோகம், வெறுப்பு என சில விஷயங்களை சொல்கின்றாராம், அவர் வாழ்வில் துரோகம், வெறுப்பு என்றவுடன் எல்லோரும் கையினை உயர்த்தி சிம்பு என கத்துகின்றார்கள், நிச்சயமாக அது சிம்பு பற்றி வரும் என்கின்றார்கள்
புத்தகம் வரட்டும் தெரிந்துவிடும்
இதுபற்றி சிம்பு இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. அவர் தெரிவிக்காமல் இருப்பது வரை நல்லது, புத்தகம் வரட்டும் என காத்திருக்கலாம்.
No comments:
Post a Comment