Friday, December 2, 2016

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும்..

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்கள், அப்படி நடந்திருப்பது மூவேந்தர் மூவிஸ் மதன் என்பவருக்கு


மனிதரின் தொடர்புகளும், அவரின் நடவடிக்கைகள் விசாரணையும் பெரும் பரபரப்பானவை, சினிமா உலகின் பெரும் கைகள், கழுத்துகள் வரை அது செல்கின்றது


இன்றைய பணம் மாற்றுதல், தங்க கட்டுப்பாடு என பெரும் சர்ச்சைகள் இருப்பதால் அன்னாரின் சாகசங்களும் பராக்கிரமங்களும் அதிகம் பேசபடுவதில்லை




இதுவே மற்ற நாட்கள் என்றால் இந்நேரம் இன்னொரு கன்னட பிரசாத் எனும் அளவிற்கு போட்டு தாக்கி இருப்பார்கள், உச்சிமுடி நடிகை முதல் தேங்காய் மூடி நடிகை சகல அடைமொழிகளிலும் எழுதி கிழித்திருப்பார்கள்


மோடி மீதான பரபரப்பில் இவை எல்லாம் ஓரம்கட்டிவிட்டன‌


அதனாம் மதனும் வர்ஷாவும், அவர் சம்பந்தபட்ட திரையுலக பிரமுகர்களும் மோடி படத்தினை சாஷ்டாங்கமாக வணங்கி அவருக்கு நன்றி தெரிவித்துகொண்டே இருப்பார்கள்.






அப்பல்லோவில் சோ’வை சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்


தன்னை பார்க்க வந்த ஸ்டாலினிடம், கலைஞர் எப்படி இருக்கின்றார்? என விசாரித்திருக்கின்றார் சோ ராமசாமி


மேலோட்டமாக பார்த்தால் அரசியல் நாகரீகம் என சொல்லிவிட்டு செல்லலாம்,




ஆனால் ஆழமாக நோக்கினால் சோ என்றுமே குறுப்புக்காரர்தான்









No comments:

Post a Comment