Thursday, February 2, 2017

ஊரில் ஒரு சீமான் அடிப்பொடியினை சந்திக்க நேர்ந்தது...

ஊரில் ஒரு சீமான் அடிப்பொடியினை சந்திக்க முடிந்தது, மனிதர் கொஞ்சம் அமைதியாகத்தான் பேசினார்.


சீமான் இப்பொழுதெல்லாம் ஈழம் அமைத்துவிட்டு, எரிதிரியா பக்கம் அழுது கொண்டிருந்த இருந்த பிரபாகரனை அழைத்து பொறுப்பினை கொடுத்துவிட்டதால் அவர் பார்வை தமிழகம் மீது விழுந்திருக்கின்றது,


இப்பொழுது தமிழகத்தை மீட்க போராடுகின்றாராம் சைமன். ஜல்லிகட்டினை சீமான் மீட்டாராம், இனி பாரம்பரியங்களை மீட்பாராம். இவரும் அந்த போராளியாம்.




அதாவது இவர் சீமான் வழியில் போராடுவாராம், பெப்சி கோக் எல்லாம் புறக்கணிப்பாராம். தமிழக இயற்கை பானம் மட்டும் குடிப்பாராம்


"சரி பெப்சி போன்ற பானத்தை எல்லாம் விரட்டவேண்டும், அதனை எப்படி ஒழிக்கலாம் என்றேன்


அதனை குடிப்பவன் தமிழின துரோகி என அறிவிப்போம் என்றார்


அப்படியானால் விற்பவன் யார்?


அவனும் பெரிய துரோகி


அப்படியா, வா அதோ அந்த பிரபல தொழிலதிபர்தான் மாவட்ட பெப்சி கோக் டீலராம். அந்த பணத்தில் கமிஷன் பெற்றுகொண்டிருக்கின்றாராம். அவரை தமிழின துரோகியாக்குவோம் என்றேன்


அவரா? ஹிஹிஹிஹி நாம் வாங்கவில்லை என்றால் அவர் எப்படி விற்பார், அதனால் பெப்சியில் சம்பாதிக்கும் அவரை போன்றவர்கள் துரோகி ஆகமாட்டார்கள்.


அப்படியானால் பெப்சி குடிப்பவன் தமிழின துரோகியா?


ஆம்


பெப்சி விற்கும் தமிழன்?


அவன் துரோகி அல்ல, அவன் சூழ்நிலை அப்படி என்றுதான் நாம் பார்க்கவேண்டும்


ஏன் உங்கள் கட்சிக்கு அவர்தான் கொடையாளி என்பதாலா? பெப்சி வேண்டாம், ஆனால் அதனை விற்றவன் காசு வேண்டுமா?


"நீர் பிரச்சினையினை திசை திருப்புகின்றீர், சீமான் பின்னால் அணி திரளும் எங்களை பார்த்து உங்களுக்கு பொறாமை.."


என சொல்லிவிட்டு ஓடினார்


எங்கு ஓடினார் என்றால் அருகிலிருக்கும் கடையில் பிரியாணி வெட்டிகொண்டிருந்தார்


ஏன் பிரியாணி? இது முகலாய உணவல்லவா? தமிழரின் தயிர்சோறு அங்கிருக்கின்றதே?, அதனை உண்ணாத நீர் தமிழின துரோகி என்றாலும் அவர் கண்டுகொள்ளவில்லை


ஐரோப்பிய இறக்குமதியான பிராய்லர் கோழியினை, பஞ்சாபின் பாசுமதி அரிசி சோற்றோடு தின்றுகொண்டிருந்தார் அந்த பச்சை தமிழர்.


அதன் பின் ஹோண்டா எனும் ஜப்பானிய எஞ்சின் பொறுத்தபட்ட பைக்கில், சாம்சுங் எனும் தென்கொரிய போனில் யாருடனோ பேசியபடி சென்றார்.



No comments:

Post a Comment