Saturday, February 25, 2017

உதயமானது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை...

https://youtu.be/wLActdnkFlg




யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கும் ஜனநாயக நாடு இது, பிரபல ரவுடிகள் கூட கட்சி நடத்துவார்கள்


அப்படிபட்ட நாட்டில் ஜெயலலிதாவின் உறவொன்று கட்சி தொடங்குவதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்


எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என ஒன்றை தொடங்கியிருக்கின்றார் அம்மணி, நிச்சயம் இது ஆட்சியினை எல்லாம் பிடிக்காது, ஆனால் வோட்டுகளை சிதறடிக்கும்





தமிழனுக்கு பெரும் சென்டிமெண்ட் உண்டு, எம்ஜிஆருக்கு மட்டும் ஒரு வாரிசு இருந்திருந்தால் இன்று நாமெல்லாம் வடகொரியர்கள் போல அமர்ந்துவிட வேண்டியதுதான்

எம்ஜிஆருக்கும், ஜெயாவிற்கும் அப்படி இல்லை என்பது இன்னொரு கோணம், ஆனால் தீபா ஜெயாபோலவே இருப்பது ஒரு வகை சென்டிமென்டினை தமிழகத்தில் ஏற்படுத்தலாம், காலம் காட்டும்

எப்படியோ அதிமுகவில் இப்பொழுது கட்டு உடைக்கபட்டிருக்கின்றது, இப்பொழுதெல்லாம் எல்லோரும் பேசுகின்றார்கள், வாய் திறந்து பேசுகின்றார்கள்

முன்பெல்லாம் கட்சியினை விட்டு எங்கே செல்வது என வருத்தத்தில் இருந்தார்கள். இப்பொழுது அப்படி அல்ல அதிமுக பிடிக்காவிட்டால் பன்னீர் அல்லது தீபா என ஓடி ஓடி
விளையாடலாம்

எங்கு சென்றாலும் எம்ஜிஆர் ஏக்கம், அம்மா கனவு என கொள்கை மாறாமல் பேசலாம் என்பது கூடுதல் வசதி

என்ன? அதிமுகவில் இருந்தால் பன்னீர், தீபாவோடு திமுகவினை திட்டவேண்டும், ஆனால் இக்கோஷ்டியில் இருந்தால் சசிகலாவினை மட்டும் திட்டிகொள்ளலாம்

இன்னும் ஒரு கட்சி உதயமாகிவிட்டது, இதன் கொடையாளி யார்? தீபாவிற்கு செலவழிப்பது யார்? என்றெல்லாம் யாரும் கேட்க முடியாது இது அரசியல்

அங்கிள் சைமனே கட்சி தொடங்கும்பொழுது, தீபா தொடங்க என்ன?

ஆம், அங்கிள் சைமன் உங்களிடம் ஒரு கேள்வி

கன்னட ஜெயகுமாருக்கு பிறந்த கன்னடச்சியான தீபா, இது என் அத்தாச்சியின் கட்சி, அதற்கு நானே அட்சாச்சி என வந்து தமிழகத்தில் கட்சியே தொடங்கியிருக்கின்றார்

ஆண்டாண்டு காலம் நம்மோடு வாழ்ந்த வம்சத்தி வந்தவர்களைவே வந்தேறி, வடுகர் தெலுங்கர் என்றெல்லாம் சீறிய நீங்கள், இந்த கன்னட தீபாவினை எதிர்காதது ஏன்?

ஆக அங்கிள் சைமனுக்கு தெலுங்கர்கள் என்றால்தான் எதிரிகள், அவர்களுடன் போர் நடத்துவார்

ஆனால் கன்னடர்கள் என்றால் தமிழர்களில் ஒருவர் என அமைதியாகிவிடுவார் பொலும்..

ஒரு கன்னட சாமியார் தமிழகத்தில் ஆசிரமம் தொடங்கி கல்லா கட்டுகின்றார், ஒரு கன்னட பெண் அரசியல் கட்சி தொடங்கி இருக்கின்றார்

இதிலெல்லாம் அங்கிள் சைமனின் தமிழ் முழக்கம் கேட்காது

ஏன் கேட்காது? அவர் அப்படித்தான்..

தீபா தான் அடுத்த ஜெயா என களம்புகுந்துவிட்டார், தமிழகமோ அப்படியானால் அடுத்த சசிகலா யார்? என தேட ஆரம்பித்துவிட்டது.




 

 



 

No comments:

Post a Comment