Saturday, February 11, 2017

மீட்போம் தமிழகத்தை, காப்போம் ஜனநாயகத்தை


ka






அதிமுகவினரின் சிரிப்பு கேள்விக்கு கலைஞர் பதில் இப்படித்தான் இருந்திருக்கும்


ஸ்டாலினும் பன்னீரும் சிரித்துகொண்டிருந்தார்கள் என அம்மையார் சீறுவதை நினைத்து எனக்கே சிரிப்பு வருகின்றது


சிரிப்பதும் இவர்கள் கட்சியில் குற்றமா?





நடிகையாக ஜெயா இருக்கும் பொழுது பல மேடைகளில் அவர் என்னை பார்த்து சிரிக்காத சிரிப்பா? ஏன் நானும் எம்ஜிஆரும் சிரிக்காத சிரிப்பா?

இன்னும் எம்ஜிஆரும், ஜெயாவும் சிரித்த சிரிப்புகளை சொன்னால் சந்தி சிரித்துவிடும்,

எனினும் கட்சியினருக்கு அதிகவினரை பார்த்து சிரிக்க வேண்டாம், என கேட்டு கொள்கின்றேன், மறுபடியும் சொல்லிகொள்கின்றேன் சிரிக்கவே வேண்டாம்

ஆம், உலகமே அவர்களை பார்த்து சிரிக்கும்பொழுது நாம் ஏன் சிரிக்க வேண்டும்


 






உடன்பிறப்பே


அம்மையாரின் அம்மியொன்று பொறுமையின் உச்சத்தில் அலறியிருப்பதை கவனித்தாயா?, அந்த உறுமல் யாருக்கென்று புரிகின்றதா?


நடைபெறும் தமிழக குழப்பங்களை உலகே அறிந்திருக்கும் பொழுது நீ அறிந்திருக்கமாட்டாயா, நொடிக்கொரு அறிவுப்புகள் , நொடிக்கொரு திருப்பங்கள், மணிக்கொரு முறை அவர்கள் தெய்வம் உறங்கும் சமாதியில் தரினங்கள்


இந்நிலையில் எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு, என அவர்கள் சீறியிருப்பது யாரை நோக்கி தெரியுமா?


அது ஆளுநரை நோக்கி, ஆளுநர் என்பவர் இந்திய அரசின் பிரதிநிதி, அதாவது இவர்கள் கத்துவதன் அர்த்தம் என்னவென்றால் "எங்களை ஆளவிடுகின்றாயா?, அல்லது நாங்கள் யாரென்று காட்டட்டுமா?"


அதாவது இவ்வளவு நாளும் தோட்டத்தில் குதித்தாடிய குரங்கு கூட்டமொன்று மொத்த தமிழகத்திலும் குதித்தாட முயல்கின்றது


நாமெல்லாம் இருக்கும் வரை, அமைதியினை விரும்பும் மக்கள் இருக்கும் வரை இவர்கள் எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது என்பது சொல்லியா தெரியவேண்டும்?


ஆளுநர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என இவர்கள் சீறிகொண்டிருக்க, அவர் என்ன செய்துகொண்டிருந்திருப்பார் தெரியுமா தம்பி


இவர்களின் பராக்கிரமங்கள், ஆசிட் வீச்சு முதல் ஆட்டோவில் அனுப்பி கால் உடைப்பது வரைக்கும், எல்லாவித கொலைபாதகங்களுக்கும் அஞ்சாதவர்கள் என்ற அவர்களின் சாதனைகளை படித்திருப்பார்.


பஸ் எரித்தல், மிரட்டுதல், ரவுடிகளை பராமரித்தல் என அவர்கள் அராஜகம் எல்லா அதிகாரிகளின் கோப்புகளிலும் முதல் இடத்தில் உண்டு


இப்பொழுது தமிழகத்தை காக்கும் பொறுப்பு அவருக்கு இருப்பதால்தான் சென்னையில் இன்று சமூக விரோதிகள், தமிழர் ரத்தம் குடிக்க தயாராக இருந்த ஓநாய்கள் எல்லோரையும் கைது செய்து , சென்னையில் பெரும் கலவத்தை தடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ள செய்திகள் வருகின்றன‌


என் பொறுமைக்கும் எல்லை உண்டு என அவர்கள் சொன்னதை கவனித்தாயா? அவர் என்ன காந்தியா? காமராஜரா? அண்ணாவா? அல்லது 60 ஆண்டுகளில் நாம் காட்டாத பொறுமையா?


அந்த பொறுமையில் 1000ல் ஒரு பங்கு இந்த அவசர அரசியல்வாதிக்கு தெரியுமா?


அவர் பொறுமை என்பது அவர் போட்டிருக்கும் ஒப்பனை போன்றது போல, மிக மிக அவரசமாக கரைந்துவிடுகின்றது அய்யோ பாவம்


இன்னொரு விஷயம் கேள்விபட்டிருப்பாய், பன்னீர் செல்வத்தை நாம் தூண்டிவிடுகின்றோமா?


அன்று எம்ஜிஆரை நாமா கட்சி தொடங்க சொன்னோம்?, எம்ஜிஆர் மறைந்தபொழுது ஜாணகி கட்சியினை நாம் ஆதரித்தோமா? அல்லது ஜெயா கட்சியினை நாம் ஆதரித்தோமா?


தம்பி அன்றே அதிமுகவில் ஓரம்கட்டபட்ட ஜெயலலிதா திமுகவில் இணைய இருந்தது, இவர்கள் ஒரு காலமும் நம்ப தகாதவர்கள் என நாம் சிந்தித்து ஏற்க மறுத்ததும் உலகிற்கு தெரியாதது அல்ல‌


ஜெயா எழுதிய கடிதமும், அதற்கு அன்றைய என் மன்சாட்சி மாறன் கொடுத்த பதிலும் அன்றைய சரித்திரங்கள்


ஆக ஜெயலலிதாவினையே ஏற்க துணியாத நாமா பன்னீரை ஏற்றுகொள்வோம்?


ஜெயா இருக்கும்பொழுது இந்த மன்னார்குடி மாபியாவினை மீறி அவரிடம் பேசமுடியாதவர்கள் எல்லாம் இன்று அவர் அவர் ஆன்மாவோடு பேசிகொண்டு ஏதோ சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


என் விதியினை கண்டாயா? அண்ணாவின் இதயத்தோடு அவர் கண்ட தன்மான திராவிட கழகத்தை நடத்தி வருபவர் நாம்


ஆனால் நம்மை திட்டியே ஆட்சி செய்தவர் நண்பர் எம்ஜிஆர், பின் அவரின் வாரிசு ஜெயாவும் அதனையே செய்தார்.


நம்மை எதிர்ப்பது மட்டுமே அவர்கள் அரசியல், நாம் இல்லாவிட்டால் அவர்கள் ஏது? அவர்கள் அரசியல் ஏது அய்யோ பாவம்


ஆனால் அந்த நன்றிகடனும் இன்றி திமுக எங்களை பிளக்கின்றது என சொல்லிகொண்டிருப்பதுதான் வேதனை, கொஞ்சமேனும் நன்றி இல்லையா?


இந்த கருணாநிதியும் திமுகவும் இல்லை என்றால் யாரை திட்டுவீர்கள் அறிவிலிகளே?


எந்த கட்சினை திமுக உடைத்திருக்கின்றது?


தமிழக காங்கிரசினை உடைத்தோமா, கம்யூனிஸ்ட் கட்சியினை உடைத்தோமா, இல்லை எம்ஜிஆர் கட்சியினை உடைத்தோமா?


நம்மைத்தான் எல்லோரும் உடைத்தார்கள், முயன்றார்கள், இன்னும் முயற்சிக்கின்றார்களே தவிர நாம் யார் குடியும் கெடுத்தவர்கள் அல்ல‌


இன்று அனாதையாக அலையும் கோபால் சாமி கட்சியினை நாம் உடைத்தொமா, கோபால்சாமியின் அல்லக்கை சம்பத்தினை நாமா சேர்த்துகொண்டோம்?


நம் சொற்படி கேட்காமல் இன்று பாதிக்கபட்டிருக்கும் தம்பி விஜயகாந்த் கட்சியினை நாமா உடைத்தோம்,


இப்படி நம்மை பற்றி உலகம் அறியும், நம் பொறுமை பற்றியும் உலகம் அறியும்.


இப்பொழுதும் 130 எம் எல் ஏக்கள் எங்கே என நீதிமன்றம் கேட்கின்றது, காவல்துறை தேடுகின்றது, நடக்கும் ஜனநாயக கேலி கூத்துக்களை பார்த்து தேசமே சிரிக்கின்றது,


சில அமைச்சர்களையே காணவில்லையாம், இப்படியான கேலி கூத்து தீவிரவாதிகள் அட்டகாசம் செய்யும் காஷ்மீர், அசாம் மாநிலங்களில் கூட நடக்குமா?


முதல்வரே என்னை மிரட்டினார்கள் என சொல்கின்றார், ஜெயா சாவில் மர்மம் உண்டு என சொல்லி கமிஷன் அமைக்கபடும் என்கின்றார்


இதோ இன்றோரு மருத்துவர் ஜெயா சடலமாகத்தான் அப்பல்லோ வந்தார் என அதிர்ச்சி குண்டினை வீசுகின்றார். ஆனால் அதே ஜெயலலிதா 1991ல் சடலமாகத்தான் தமிழக முதலமைச்சராகத்தான் இருந்தார் என்பது என்னை போன்றவர்களுக்கு தெரியும்


மூன்று முறையும் அவர் பிணம் போலத்தான் ஆட்சியில் இருந்தார், ஆண்டது எல்லாம் பின்னால் இருந்து அவருக்கு மேக் அப் போட்ட கும்பல்கள்


இதனை எல்லாம் நாம் அப்பொழுதே சொன்னோம், எல்லா பத்திரிகைகளும் எழுதின..


இதனால்தான் அப்பல்லோ மர்மங்கள் எல்லாம் நம்மை பாதிக்கவில்லை, இது இப்படித்தான் நடக்கும் என்று வலம்புரி ஜாண் போன்றவர்கள் என்றோ சொன்னார்கள்.


ஆயினும் உண்மையினை உலகிற்கு சொல்ல வேண்டியது அரசின் கடமை அல்லவா?


ஒரு முதல்வர் சாவில் மர்மம் இருக்கின்றது, இன்னொரு முதல்வர் என்னை மிரட்டினார்கள் என அலறுகின்றார். இதனை எல்லாம் கண்டுபிடிக்கவேண்டிய காவல்துறை, சமூக வலைதளம் முதல் டீக்கடை வரை தமிழக அரசினை பற்றி பேசினால் கைது என சொல்லிகொண்டிருக்கின்றது


எப்படி இருக்கின்றது பார்த்தாயா?


தமிழக சட்டம் ஒழுங்கு அப்படி நாசமாக போய்விட்டது என்பதை தவிர என்ன சொல்ல முடியும்?


நான் கூட இப்படி முதல்வாரகவில்லை என லாலுவின் மனைவி ராப்ரிதேவி கூட தலையில் அடித்துகொண்டு சிரித்துகொண்டிருக்கின்றாராம்


எந்த தவறினை ஒரு அரசியல்வாதி செய்ய கூடாது என அந்த வசந்தசேனையிடம் இருந்து இந்தியாவே படித்துகொண்டிருக்கின்றது


இப்படி எல்லாம் அல்லி தர்பார், லேடி துக்ளக் தர்பார் எல்லாம் நடத்தி அக்கட்சியினை அவர்களே அழித்துகொண்டிருக்கின்றார்கள்


தமிழக ஆட்சி தொங்கலில் இருப்பதை நாம் சுட்டிகாட்டினால், எங்கள் மீது உங்களுக்கு என்ன அக்கறை என சீறுகின்றார்கள்.


அட சூனிய கும்பலே, தமிழக ஆட்சி முடங்கி கிடக்கும் பொழுது அதனை பற்றி சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு, அதுவும் முன்னாள் முதல்வர், வருங்கால முதல்வர் என்ற வகையில் எங்குளுக்கு அதிக உரிமை உண்டு


ஏதும் பேச கூடாது என்பதற்கு இது என்ன வடகொரியாவா? அல்லது இடி அமீனின் உகாண்டாவா?


அல்லது கூவத்தூர் உல்லாச தளமா?


காந்தி முதல் மோடி வரை எத்தனையோ பேரிடம் மல்லுகட்டிய இந்த இயக்கம் உங்களிடம் எப்படி ஒதுங்கிபோகும் என எதிர்பாக்கின்றீர்கள்


கட்சி நடத்துவது என்பது எளிதல்ல, அன்றே அதாவது 1972ல் ராமசந்திரன் தனிகட்சி பிடித்தபொழுது நாம் சொன்னோம், அக்கட்சிக்கு கொள்கை, கோட்பாடு என எதுவுமில்லை, அது ஒரு நடிகனின் கவர்ச்சி விரைவில் அது போய்விடும் என்றோம்


அது 10 ஆண்டுகள் நீடித்து, தன் வேஷம் கலைந்துகொண்டிருக்கும் பொழுதே அவர் காலமானார்.
அதன்பின் இரு நடிகைகள் மோதிகொண்டு ஒரு நடிகை அதில் வெற்றிபெற்றி அந்த கவர்ச்சியினை கலையாமல் வைத்திருந்தார்.


இன்று நடிகனும் இல்லாமல் நடிகையும் இல்லாமல் அக்கட்சி அழிந்து வருகின்றது என்பதுதான் உண்மை. நல்ல நடிகர்கள் இன்றி அக்கட்சியினை நடத்த முடியாது


இது அக்கட்சியின் விதி , அல்லது சாபம். அவர்கள் கட்சிக்கு இன்னொரு நல்ல நடிகை அல்லது நடிகன் தேவை. அந்த குறையினை , அந்த பலகீனத்தை சொல்லாமல் திமுக கட்சியினை உடைக்கின்றது என சொல்லி கொண்டிருக்கின்றார்கள், அறிவிலிகள்


அரசியலில் பொறுமை மிக பெரிது, எத்தனை காலம் நாமெல்லாம் உழைத்து பெரியாரிடமும் பின் அண்ணாவிடமும் அரசியல் பயின்று, அண்ணாவிடம் அமைச்சராகி, அதன் பின் அவர் இல்லாத இடத்தில் நாம் முதல்வரானோம்


அதன் பின் எத்தனை சோதனைகள், எத்தனை தடங்கல்கள், அப்பொழுதெல்லாம் நாம் எவ்வளவு பொறுமை காத்தோம்


எத்தனை முறை நம் கழக அரசு அநியாயமாக கலைக்கபட்டபொழுது நாம் தூக்கு கயிற்றோடும், கழுத்தில் கத்தியோடும் ஆளுநரை மிரட்டினோமா?


எத்தனை பெரும் சோதனைகள் வந்த பொழுதும் எப்படி எல்லாம் பொறுமை காத்தோம் என்பதை தமிழக வரலாறு தன்னகத்தே கொண்டிருக்கின்றது


அப்படிபட்ட நாமெல்லாம் அரசியலும், ஆட்சியும் செய்த தமிழகத்தில்தான் திடீர் திலோத்தமைகள், பவுடர் மாமிகள் , கோமளவல்லி கொண்டைக்காரிகள் எல்லாம் என் பொறுமைக்கு எல்லை உண்டு என மிரட்டுகின்றார்கள்


அவர்களுக்கு அரசியல் பொறுமை என்னவென்று தெரியாவிட்டால், அதனை கற்றுகொடுக்க பெரியார், காமராஜர், நேரு, அண்ணா, இந்திரா, எம்ஜிஆர் என எத்தனையோ பேரிடம் பொறுமையினை கற்ற நாம் தயாராவே இருக்கின்றோம்


தம்பி ஸ்டாலினை எவ்வளவு பொறுமையானவராக உருவாகியிருக்கின்றோம் என்பதே நாம் எவ்வளவு பொறுமையானவர்கள் என்பதற்கு பெரும் சாட்சி


ஆக உடன் பிறப்பே, அவர்கள் ஆளுநரையே மிரட்ட துணிந்துவிட்டார்கள், தமிழகத்தினை ரத்த காடாக்க துணிந்துவிட்டார்கள்


அக்காலத்தில் பார்ப்பண ஆதிக்கத்தில் நாம் வாங்காத அடிகளா, மிசா காலத்தில் நாம் பார்க்காத போராட்டங்களா? அதற்கெல்லாம் அஞ்சியிருந்தால், பயந்திருந்தால் நாம் இன்று இந்த இடத்தில் இருக்க முடியுமா?


எத்தனை பெரும் மிரட்டல்களை எதிர்கொண்ட நமக்கு இந்த பவுடர் பங்கஜம் மிரட்டலை எல்லாம் நினைத்தால் சிரிப்புதான் வருகின்றது.


அதுவும் ஸ்டாலினும் பன்னீரும் சிரித்துகொண்டிருந்தார்கள் என அம்மையார் சீறுவதை நினைத்து எனக்கே சிரிப்பு வருகின்றது


சிரிப்பதும் இவர்கள் கட்சியில் குற்றமா?


நடிகையாக ஜெயா இருக்கும் பொழுது பல மேடைகளில் அவர் என்னை பார்த்து சிரிக்காத சிரிப்பா? ஏன் நானும் எம்ஜிஆரும் சிரிக்காத சிரிப்பா?


இன்னும் எம்ஜிஆரும், ஜெயாவும் சிரித்த சிரிப்புகளை சொன்னால் சந்தி சிரித்துவிடும், ஆனாலும் இந்த சிறுபிள்ளைதனமான குற்றசாட்டுகளை கண்டு தமிழகமே சிரிக்கின்றது


சிரித்து கொண்டே சூழ்நிலையினை கவனித்துகொண்டிருக்கின்றோம், எந்த சூழ்நிலையும் பொறுமையாக சந்திக்க நீ தயாராகு உடன்பிறப்பே


அது அசாத்திய சூழலோ, பெரும் அச்சமூட்டும் சம்பவங்களோ எதுவானாலும் எதனையும் தாங்கும் இதயத்தோடு சந்திக்க தயாராகு


அது தேர்தல் என்றால் இன்னும் மகிழ்ச்சியோடு களம் காண தயாராக இரு


1972ல் ஒரு சினிமா கவர்ச்சியில் தொடங்கபட்ட கட்சி, இன்று அக்கவர்ச்சி தலைவர்கள் இல்லாமல் அழிந்துகொண்டிருகின்றது


தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும் என்றான் பாரதி


தமிழக அரசியலிலும் அந்த தர்மத்தை சூது வென்று சில ஆண்டுகள் ஆண்டிருக்கலாம், இப்பொழுது சூது தொல்வியுற்று தர்மம் துலங்கிகொண்டிருக்கின்றது


அந்த தர்ம தேவன் தமிழக மக்கள் மூலமாக நம் கட்சியினை அரியணையில் அமர்த்தும் காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது.


அவர்கள் பொறுமைக்கு எல்லை உண்டு எனும் பொழுது, தமிழக பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?


அதனை அந்த வசந்த சேனை வசதியாக மறந்துவிட்டார் போலும்..


ஆக உடன்பிறப்பே, விழித்திரு, களம்காண நம் கொள்கை கவசத்தை அணிந்திடு, கடமை வேலை ஏந்திடு


கழக உத்தரவு கிடைத்தால் களம்புக தயாராக இரு..


மீட்போம் தமிழகத்தை, காப்போம் ஜனநாயகத்தை








 

No comments:

Post a Comment