Wednesday, February 15, 2017

தீபா கட்சிக்கு என்ன செய்தார்?

தீபா கட்சிக்கு என்ன செய்தார்? அவரை எப்படி ஏற்கலாம் என சிலர் கொந்தளிக்கின்றார்களாம்


அந்த கட்சியின் வரலாறு தெரியாமல் பேசுகின்றார்கள் அய்யோ பாவம்


எம்ஜிஆரோடு கட்சி தொடங்கிய 7 பேரில் ஒருவரையா அடுத்த வாரிசு என 1987ல் தேர்ந்தெடுத்தார்கள்?




கணபதியின் முன்னாள் மனைவியும் அண்ணா யாரென்றே சரியாக தெரியாத ஜாணகியினை முதல்வராக்கினார்கள், அவருக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு?


இன்னொரு கோஷ்டி 1972 முதல் 1977 வரை கட்சியினை ரத்த அடிபட்டு வளர்த்த சீனியர்களை விட்டு விட்டு ஜெயலலிதாவினை முதல்வராக்கியது


ஆக கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களையும், சீனியர்களையும் என்று அக்கட்சி மதித்தது? என்று தலைவராக்கியது


எம்ஜிஆரின் கைபிள்ளையான பண்ருட்டி ராமசந்திரன் முதல் எத்தனையோ பெரும் சீனியர்கள் அங்கு உண்டு, அது பற்றி பேசுவார்களா என்றால் இல்லை


அக்கட்சி ஒரு வகையான கவர்ச்சி கட்சி, வசீகர முகங்கள் அதற்கு வேண்டும்


அது எம்ஜிஆர், ஜெயா, தீபா என்றாலும் சரி, ஷர்மிலி, ஷகிலா என்றாலும் சரி, சிக்கலே இல்லை


அது அம்மாதிரியான கட்சி


இதில் தீபா வந்தது குற்றமாம், சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்


கட்சி வரலாறு சுத்தமாக தெரியவில்லை அவனுக்கு..


கட்சியின் கலாச்சாரமும், ஆதார கொள்கையும் இதுதானே..



No comments:

Post a Comment