Thursday, February 16, 2017

இந்தியாவே தமிழகத்தை பார்த்து சிரிக்காதா?





"முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்கக்கூடாது" ‍ : மு க ஸ்டாலின்


இதுதான் கலைஞர் ஸ்டைல், இதில் கொஞ்சம் தேறுகின்றார் ஸ்டாலின்


வரிபுலிக்கு பிறந்த குட்டிக்கு சில வரிகள் குறைவாக இருக்கலாம், ஆனாலும் புலிதான்






உச்ச நீதிமன்றம் மண்டையில் தட்டி உள்ளே தள்ளியிருக்கும் ஒரு பொருளாதார குற்றவாளியினை, ஒரு மாநில முதல்வராக பழனிச்சாமி சந்திக்க முடியுமா?


ஆனால் இவர் நிச்சயம் செல்வார்.


அப்படி சந்தித்தால் மொத்த இந்தியாவும் என்ன நினைக்கும்? ஒரு குற்றவாளியினை ஒரு மாநில முதல்வர் சிறை சென்று சந்திப்பதை பற்றி சட்டமோ அல்லது உச்ச நிர்வாகமோ எப்படி எடுத்துகொள்ளும்?





எப்படியும் இவர்கள் செல்வார்கள், சர்ச்சை வரும்

ஆனால் அதற்கு இவர்கள் வழக்கம் போல் பதில் சொன்னால் என்ன ஆகும்?, வழக்கம் போல என்றால் எப்படி?

இது மாநில உரிமை, இந்த உரிமையில் மத்திய அரசு தலையிட முடியாது. இது தமிழக உரிமை, தமிழக சுதந்திரம். இந்த சுதந்திரத்தில் யாரும் தலையிட விடமாட்டோம் என்பார்கள்.

அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள்

எது கொள்ளைக்காரியினை காப்பதா மாநில சுதந்திரம்? என இந்தியாவே தமிழகத்தை பார்த்து சிரிக்காதா?









 நாம் முகநூலில் எழுதும் சில பதிவுகள், எங்கோ சுற்றி நம் வாட்சப் குழுவிலே இன்னொருவன் பெயரோடு பகிர்ந்துகொள்ளபடுதை பார்க்கும் பொழுது ஒரு திகைப்பாகத்தான் இருக்கின்றது

அதுவும் நாம் எழுதியதையே, இதை நீ படித்தே ஆகவேண்டும் என நமக்கே சிலர் பார்வேர்டு செய்கின்றார்கள்


ஆக நம்மையும் சிலர் கவனித்து , பதிவுகளை தன் பெயரில் மாற்றி உலாவவிட்டு கொண்டே இருக்கின்றார்கள்





தமிழ்நாட்டில் நிறைய சீமான்கள் இருப்பார்கள் போலிருக்கின்றது






 



 

No comments:

Post a Comment