Sunday, February 19, 2017

அடுத்து சந்தேகமே இல்லாமல் டெல்லி...

அரசியல் நெருக்கடி முடிந்தது என சொல்லிகொண்டாலும், தமிழக மக்கள் மனம் குமுறிகொண்டுதான் இருக்கின்றது, இந்த குமுறலுக்கு என்ன காரணம்?


ஜெயலலிதா மகா சுத்தமான கரங்களுக்கு சொந்தக்காரர் என வாக்களித்த தமிழகம்தான் முதல் காரணம், தமிழகம் யாருக்கு வோட்டளித்தால் எங்களுக்கு என்ன?. ஆனால் நாங்கள் மட்டும்தான் தான் ஆட்சி செய்வோம் என அடம்பிடிக்கும் சசிகலா கும்பல் இன்னொரு காரணம்.


அடுத்து சந்தேகமே இல்லாமல் டெல்லி


எப்படி டெல்லி?


முன்பே சொன்னது போல டெல்லி அவ்வப்போது டெல்லி சூனியம் வைத்துகொண்டே இருக்கும், ஏன் வைக்கும்?


1967ல் இருந்தே தமிழகம் டெல்லிக்கு உவப்பானதல்ல, திராவிட கட்சிகளின் வெற்றி அதனை அப்படி ஆக்கியிருந்தது, எந்த சமாதியில் சத்தியம் எடுத்தார்களோ தெரியாது, ஆனால் இப்படி எடுத்திருக்கலாம்


தமிழகத்தில் ஒரு நாளும் அரசியல் அமைதி நிலவ விட மாட்டோம், ஏதாவது ஒரு வகையில் யாரையாவது தூண்டிவிட்டு ஆடிகொண்டே இருப்போம்.


யாரையாவது வளர்த்துவிடுவோம், பின் அவர்களை திடீரென கைவிடுவோம், பின் இன்னொரு கோஷ்டியினை வளர்ப்போம் இருவரையும் மோத வைப்போம், திடீரென ஒன்றை அடிப்போம் இன்னொன்றை தூக்கிவிடுவோம் என்ற மாதிரியான குழப்பம் அது


அதாவது அமெரிக்கா சில நாடுகளில் செய்யும் அரசியல் போன்றது, அப்படி டெல்லியும் தமிழகத்திறகாக சத்தியம் செய்திருக்கின்றது.


இந்த சத்தியம் எப்பொழுது நடைமுறைக்கு வருமென்றால், எப்பொழுதெல்லாம் டெல்லியில் வலுவான அரசு அமைகின்றதோ அப்பொழுதெல்லாம் வரும்


அப்படித்தான் இந்திரா காலங்களில் 2 முறையும், ராஜிவ் காலத்தில் 2 முறையும் தமிழக அரசு டெல்லியால் நேரடியாகவே கலைக்கபட்டது,


டெல்லியில் கூட்டணி ஆட்சி அமையும் காலங்களில் எல்லாம் இந்த சத்தியத்தினை செங்கோட்டையின் கிணறுகளில் ஒன்றில் தூக்கி போட்டுவிடுவார்கள், அது தூங்கும்


இப்பொழுது மோடிக்கு பெரும் பலம் கொண்ட ஆட்சி அல்லவா? வேறு என்ன செய்வார்கள். அதே தான் தூங்கிகொண்டிருந்த டெல்லி சூனியம் தொடங்கபட்டது


டெல்லியின் அஜண்டா என்னவென்றால் ஆளும் கட்சிக்கு எப்படியாவது சோதனை கொடுத்துகொண்டே இருப்பது, சோதனை கொடுக்க எதிராளி இல்லா பட்சத்தில் கட்சியினை உடைத்தே சோதனை கொடுப்பது


இதனை முதன் முதலில் சந்தித்தவர் கலைஞர், எப்படியோ இத்தனை காலம் தாங்கி அவர் ஓடியும் முடித்துவிட்டார்,


எம்ஜிஆருக்கு பின் அது அதிமுகவில் வெடித்தது, டெல்லி காங்கிரசு ஆதரவுடன் ஆட்டம்போட்ட ஜே பின்னாளில் அவர்களின் எதிரியாகவே ஆனார், ஆனால் கட்சியினை பாஜக ஆதரவு என சொல்லி காத்துகொண்டார்


இப்பொழுது டெல்லியின் சனி பார்வை ஜெயா இல்லாத அதிமுக மீது விழுந்திருக்கின்றது


சசிகலாவினை முறைத்தார்கள், தீபா திடீரென வந்தார் பல பரப்புகள் கூடிற்று


திடீரென எட்டாம் உலக அதிசயமாக பன்னீருக்கே கோபம் வந்து அவர் தனி ஆட்டம் போட டெல்லி புன்னகைத்தது, இனி பன்னீர் வளர்ந்துவிடுவார் என நோக்கும்பொழுது


பன்னீரும் தீபாவும் ஓரணி, அப்பக்கம் சசிகலா உள்ளே செல்லட்டு என அது ஊக்கமும் கொடுத்தது


சரி இனி இப்படியே விட்டால் பன்னீர் கோஷ்டி பலமாகிவிடும் ம்ம்ம்ம் கூடாது, சரி சசிகலா கோஷ்டி கொஞ்சம் ஆடட்டும் என அது பழனிச்சாமியினை முதல்வராக்க விட்டிருக்கின்றது


இந்த ஆட்டத்தில் அவர்களுக்கான சுயநலமும் இருக்கின்றது


வடக்கே நடைபெறும் தேர்தல்களில் முழுகவனம் செலுத்தியிருக்கும் பாஜக, தமிழக நிலையினை கொஞ்சம் ஆறபோடலாம் என நினைத்து பழனிச்சாமியினை அனுமதித்திருக்கின்றது


அப்படியே இன்னும் சில மாதங்களில் வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக அதிமுகவின் வாக்குகளை கூவத்தூர் ஸ்டைலில் வாங்கியும் வைத்திருக்கலாம்


அதனால் பன்னீரை சற்று ஒதுங்கி இரும் பிள்ளாய் என சொல்லியிருக்கலாம்


இனி வடக்கு தேர்தல் முடிவுகள் வந்து, ஜனாதிபதி தேர்தலுக்கும் வழி செய்துவிட்டால் அதன் பின் பாஜக பிரீ


அதன் பின் தமிழகத்தை மீண்டும் நொறுக்க ஆரம்பிப்பார்கள், இப்பொழுது விழுந்த அடிகளை விட அது மிக ஆக்ரோஷமாக இருக்கலாம்


பன்னீர் எல்லாம் அப்படியே ஒதுங்கவும் மாட்டார், சசிகலா கும்பல் எல்லாம் பெரும் ஆட்டம் போட்டுவிடவும் முடியாது


இன்னொன்று அதிமுக அரசு இனி தன் விரலில் ஆடும் பொம்மை என்பதை ஜெயா மருத்துவமனையில் இருக்கும் பொழுதே டெல்லி முடிவுசெய்தாயிற்று


தான் தூணில் கட்டி வைத்திருக்கும் அடிமையினை எப்பொழுதும் அடிக்கலாம், இப்பொழுது கொஞ்சம் பிசி இனி பின்னால் அடிக்கலாம் என அது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கின்றது அவ்வளவுதான்


ஏன் டெல்லி அப்படி இருக்கின்றது என்றால், அரசியல் அப்படித்தான்


பழனிச்சாமிக்கான பஞ்சாமிர்தம் ஏற்கனவே டெல்லியில் தயாராக இருக்கும், நேரம் வரும்பொழுது ஊட்டிவிடுவார்கள்


அப்படியே விபூதி அடிக்கபட்டிருக்கும் பன்னீருக்கும் , அதனை துடைத்துவிட வருவார்கள்


ஆக இவை எல்லாம் ஓயாது, ஓயவும் விடமாட்டார்கள் ஆற போட்டு அடிப்பார்கள், அடித்துகொண்டே இருப்பார்கள்


அதனால் விரைவில் பல விசித்திரமான காட்சிகளை தமிழகம் காணத்தான் போகின்றது


ஜெயாவிற்கு பின்னால் இருந்து மகா நிம்மதியாக ஆண்ட அந்த பொன்னான காலம் இனி சசிகும்பலுக்கு வராது, இனி ஒரு இரவு கூட அவர்களுக்கு நிம்மதியான தூக்கம் இல்லை

No comments:

Post a Comment