Sunday, February 26, 2017

தமிழகத்தில் பாஜக....




இப்பொழுதெல்லாம் தமிழக பாஜகவினர் நிறைய பேசுகின்றார்கள், முன்பு அடங்கிகிடந்த அவர்களிடம் பெரும் மாற்றம் தெரிகின்றது


ஜெயா மறைந்து அதிமுக அரசினை தன் இஷ்டம் போல குட்டிகரணம் அடிக்க வைக்க மத்திய அரசு தொடங்கிய பின்னரே இவர்களின் பேச்சு 200% அதிகரித்திருக்கின்றது, மாநில அரசினை ஆள்வது மத்திய பிஜேபி என்பது அவர்களின் பேச்சிலே தெரிகின்றது


மீத்தேன் எனும் பழைய கள்ளை, ஹைட்ரோ கார்பன் எனும் புது மொந்தையில் பாஜக நுழைக்கின்றது, திட்டம் அதே தான்


இதில் பொன்னார், தமிழிசை, எச்.ராசா என வழக்கமானவர்கள் புதிய உற்சாகத்துடன் எட்டுகட்டையில் கச்சேரி நடத்துகின்றனர்


இல.கணேசன் நாட்டிற்காக ஒரு மாநிலத்தையே தியாகம் செய்யலாம் என மனுநீதி பேசிகொண்டிருக்கின்றார்


முன்பு கூடங்குள பிரச்சினையிலும் இதனையே சொன்னார், மாநிலத்திற்காக ஒரு மாவட்டத்தை இழக்கலாம் என்றார்


பின் நியூட்ரினோ பிரச்சினையிலும், கெயில் பிரச்சினையிலும் இதே பொன்மொழிதான் உதிர்த்தார்


இணையம் கடற்கரை சர்ச்சையிலும் இதே தான் உதிர்க்கபட்டது


அதாவது முன்பு மாநிலத்திற்காக ஒரு மாவட்டம் இழந்தால் என்ன? என கேட்டவர்கள். எல்லா மாவட்டங்களும் பாதிக்கபட்ட நிலையில் நாட்டிற்காக மாநிலத்தை இழந்தால் என்ன என கேட்கும் அளவிற்கு சென்றுவிட்டார்கள்


எப்படி?


இங்கு கேள்வி கேட்க யாருமில்லை, எதிர்கட்சி என் சட்டையினை கிழித்துவிட்டார்கள் என அழுதுகொண்டிருக்கின்றது


ஆளும் கட்சி என ஒன்று உண்டு, ஆனால் அது அடித்து கட்டபட்டு , இல்லை கிட்டதட்ட கொல்லபட்டு எகிப்து மம்மி போல ஆக்கபடுவிட்டது


அந்த பொம்மையினை அரியணையில் வைத்துகொண்டு மத்திய அரசு ஆளுகின்றது, அக்கட்சியினர் மம்மி மம்மி என அழுவதன் அர்த்தம் இதுதான், புரியவேண்டியவர்களுக்கு புரியும்


ஆக மனுநீதி ஆட்சியினை தமிழகத்தில் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள், அதனடிப்படையில் நாடு வளம்பெற ஒரு மாநிலம் பலிகொடுக்கபட்டால் என்ன என கேட்க தொடங்கிவிட்டார்கள்


மனுநீதி சொன்னது இருக்கட்டும், ஜனநாயக நீதி என ஒன்று உண்டு


பல்லின மக்கள் வாழும் நாட்டில் பல கட்சிகள் இருக்கும், அதில் எந்தகட்சி நாட்டை குட்டிசுவராக்குகின்றதோ, அதனை பலிகொடுப்பது குற்றமல்ல‌


நாட்டின் அமைதிக்கும், வளப்பத்திற்கும் ஒரு கட்சியினை பலிகொடுக்கலாம்


தமிழகத்தை பொறுத்தவரை அது பாஜக என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை


பெரியார் இம்மாநிலத்தில் பெரும் நெருப்பினை மூட்டினார், அண்ணா அதனை ஆட்சி ஜோதியாக மாற்றினார்


கலைஞரின் 1975 வரை பெரும் அநீதிகள் இம்மண்ணில் மத்திய அரசால் இழைக்கமுடியவில்லை, கச்சதீவு இந்த அளவு சிக்கல் இல்லை


என்று அந்த ராமசந்திரன் டெல்லியால் உருவாக்கபட்டு அரியணை ஏறினாரோ அன்றுமுதல் எல்லா அட்டகாசங்களும் தமிழகத்தில் தொடங்கின‌


அதுவரை டெல்லியினை எதிர்த்து நின்ற திமுக பின் மகோராவுடனும் , ஜெயுடனும் மல்லுகட்டுவதிலே தன் காலத்தை கடத்தியது


அதாவது மாநில நலனை விட்டு, தன் நலனை காக்கும் கட்டாயத்திற்கு அக்கட்சி தள்ளபட்டது.
இப்படி திமுக பலகீனமான நேரத்தில்தான், கல்பாக்கம், கூடங்குள அணுவுலை முதல் இன்னும் பல நாசகார திட்டங்கள் எல்லாம் அதிமுக காலத்தில்தான் உருவானது


அப்படி டெல்லியின் கைப்பாவையாகவே அக்கட்சி இருந்தது


இன்று ஜெயா வீழ்த்தப்ட்டு அக்கட்சி இன்று பாஜகவின் மாநில கிளையாகவே ஆகிவிட்டது


கலைஞரும் ஓய்ந்துவிட்டார்,


இனி நம்மை கேட்க யாருமில்லை என மெதுவாக தன் தலையினை தூக்கி அந்த கும்பல் முணகி பார்த்தது, பின் உறுமி பார்க்கின்றது


இந்த மாநிலம் அடங்கிவிட்டது, இங்கு நமக்கு எதிரி யாருமில்லை என அது சிந்திக்க தொடங்கி பேசவும் வந்துவிட்டது


வரலாறுகளை புரட்டினால் ஒன்று விளங்கும்


இம்மாநிலம் அந்த கும்பல் தலையெடுக்கும் பொழுதெல்லாம் அதற்கு பதிலடி கொடுத்தே வந்திருக்கின்றது


அது பிரமணன் அல்லாதோர் சங்கம், நீதிகட்சி, சுய மரியாதை கட்சி, திராவிட கட்சி என காலத்திற்கு ஏற்ப தன் எதிர்ப்பினை காட்டியே வந்திருக்கின்றது


திராவிட கட்சிகள் மட்டுமே அவற்றின் எதிரி என்பதல்ல, காரணம் காலத்தை பொறுத்து எதிர்ப்புகள் அமையும், அப்படி அந்த காலத்தில் உருவானது திராவிட கட்சி


இனி அக்கும்பலை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வருமானால் இன்னொரு கட்சியோ, இல்லை மக்கள் சக்தியோ நிச்சயம் எழும்பும்


காலமே அதனை செய்யும்


இவர்கள் இப்படி மாநிலத்தை பலிகொடுக்கலாம் என பேச பேச, இன்னொரு பெரும் புரட்சி வெடிக்கும் என்பதே உண்மை


தமிழகத்தின் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது, இங்கு இருக்கும் எதார்த்தம் அப்படியானது


ஒருநாளும் வடக்கத்திய கும்பல் இங்கு பெரும் அழிச்சாட்டியம் செய்ய முடியாது. இது காந்திக்கு புரிந்தது, நேருவிற்கு புரிந்தது


இந்திராவிற்கும், ராஜிவிற்கும் கடைசிகாலங்களில் புரிந்தது


இந்த பாஜக என்பது இப்பொழுதுதான் களத்திற்கு வந்திருக்கின்றது, இனி அதற்கும் விரைவில் புரியும்




 

 



 

No comments:

Post a Comment