Tuesday, February 21, 2017

ஸ்டாலின் முதல்வாராவதை, சசிகலா செய்யபோகின்றார்.

சட்டசபையின் முறைகேடான நிகழ்வுகளை கண்டித்து இன்று ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டம்


அன்றைய சட்டசபை நிகழ்வுகளை தொடர்ந்து அவர் மெரினாவில் போராட்டம் தொடங்கினார், கட்சி அபிமானங்களை தாண்டி மக்கள் கூடியது தெரிந்தது


கூடிய மக்கள் எல்லாம் திமுக என சொல்லிவிட வாய்பிருக்கின்றது என அஞ்சிய அரசு அவரை கைது செய்தது, வெளியில் வந்ததும் ஸ்டாலின் போராட்டத்தை விடாது தொடர்ந்திருக்கவேண்டும், ஏன் இடைவெளி விட்டார் என்பது தெரியவில்லை




அந்த இடைவெளி விழுந்திருக்க கூடாது


வாக்கெடுப்பு குறித்து திமுக வழக்கு தொடர்ந்திருப்பதும், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் என இறங்குவதும் சரியான முயற்சிகள்


அதில் இன்று உண்ணாவிரதம், திமுகவினர் திரள்வார்கள். பொதுமக்கள் ஆதரவும் பெருவாரியாக இருக்கும்.


இந்த அரசுக்கெதிரான கோபம் மக்களிடையே அப்படியே இருக்கின்றது 122 அடியார்களுக்கு சொர்க்கவாசல் திறந்தபின்னும் தொகுதிக்குள் செல்ல முடியவில்லை


தொகுதியில் எதிர்ப்பு கடுமையாக இருக்கின்றது, தேனி பக்கம் ஒரு அடியார், பன்னீர் செல்வத்தை சேர்த்துகொள்வோம் என சொல்லிவிட்டு தொகுதிக்குள் ஓணான் போல தலையினை நீட்டிபார்க்கு அளவிற்கு நிலமை மோசமாகி இருக்கின்றது


குடியாத்தம் தொகுதி அதிமுகவினரோ மக்களோடு சேர்ந்து போஸ்டர் அடித்து மிரட்டுகின்றனர்


அடியார்களின் நிலை கிட்டதட்ட ஆமை போல இருக்கின்றது, தலையினை நீட்டி பார்த்துவிட்டு எதிர்ப்புகளை கண்டுவிட்டு உள்ளெடுத்து கொள்கின்றார்கள்


முக ஸ்டாலின் தலமையில் திமுக போராடுகின்றது, கட்சி அபிமானம் தாண்டி ஆதரவளிக்கும் பொதுமக்களை கூட அக்கட்சியினர் திமுக என முடிவு செய்வார்கள் சரி


ஆனால் தொகுதிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் அதிமுகவினர் என்ன கட்சி அவர்களும் திமுகவா?


அப்படியானால் அதிமுகவில் மொத்த எண்ணிக்கை 122+ சசிகலா+ மன்னார்குடி + வளர்மதி,செங்கோட்டையன், கோகுல இந்திரா என மொத்தமே 200 பேர்தானா?


எப்படியும் விரைவில் ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவது என சசிகலா கும்பல் மிக தீவிரமாக வேலை செய்வது தெரிகின்றது,


ஏன் வேலை செய்யவேண்டும்? சசிகலா அரசியல் காட்சிகளில் இருக்கும் வரை ஸ்டாலினுக்கு சுக்கிர திசை


கலைஞரால் செய்யமுடியாத விஷயத்தை, அதாவது ஸ்டாலின் முதல்வாராவதை, சசிகலா ஸ்டாலினுக்கு செய்யபோகின்றார்.



No comments:

Post a Comment