Wednesday, February 22, 2017

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்கின்றது

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்கின்றது


ஏதாவது செய்து சரிந்து கிடக்கும் கட்சி செல்வாக்கினை நிமிர்த்தமுடியாதா என ஏங்கி கிடக்கின்றது அதிமுக, அதனால் மக்களுக்கு எல்லா சலுகைகளும் செய்ய தயார்


இதோ அரசு ஊழியரின் சம்பளத்தை உயர்த்தபோகின்றார்களாம்,
இதனால் என்னாகும்? அரசின் செலவு கூடும். அரசு எங்கே கை வைக்கும்? மாநிலத்தில் விலைவாசி கூடும்.




அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து அவர்களை தேர்தல் நேரத்தில் "பயன்படுத்தி" கொள்வதெல்லாம் கலைஞரின் அரசியல், பின் எம்ஜிஆர் அதனை செவ்வனே செய்தார்


ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ஜெயலலிதா இவ்விஷயத்தில் மிக கறாறாக இருந்தார். மாநில மக்களின் வருமானத்தை ஒப்பிடும்பொழுது அரசு ஊழியர்களின் சம்பளம் பெரும் அதிகம் என்பதும், "இதர" வகையில் அவர்களுக்கு வருமானம் குவிவதும் அவருக்கு நன்கு புரிந்தது


அதனால்தான் அரசு ஊழியர்களை அவர் பெரிதும் ரசிக்கவில்லை, ஒரே இரவில் அவர்களை வீட்டிற்கு அனுப்பவும் துணிந்தார்


அரசு ஊழியர் வோட்டு தனக்கு கிடைக்காது என்பதும், பாமர மக்களின் வோட்டுதான் அதிமுகவினை தாங்குகின்றது என்பதும் அவரின் கணக்கு


ஆக இந்த பழனிச்சாமி அரசு, ஜெயா வழியில் ஆட்சி என சொல்லிவிட்டு அவருக்கு அறவே பிடிக்காத காரியங்களை செய்கின்றது


சுருக்கமாக சொன்னால் அதிமுகவின் பழனிச்சாமி, திமுக கலைஞர் கண்ட கனவினை, அவர் வழியில் நனவாக்கிகொண்டிருக்கின்றார்






கொசுறு


உளவுதுறை முகநூலை கண்காணிக்கின்றது : செய்தி


நல்ல பதிவுகளுக்கு லைக் போடாமலா சென்றுவிடுவார்கள்?,


அவர்களும் தமிழக மக்களில் ஒருவர்தானே. .நிச்சயம் நம்மில் ஒருவராக கலந்துவிடுவார்கள்








No comments:

Post a Comment