Sunday, February 19, 2017

ராக்கெட் விடுவதனால் என்ன கிடைத்துவிடும்?? : நடிகர் சிவகுமார்



Image may contain: 1 person


ராக்கெட் விடுவதனால் என்ன கிடைத்துவிடும்??, அதனை தூக்கி வீசவேண்டும், நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன : நடிகர் சிவகுமார்


இந்த மனிதர் மீதான பிம்பம் இன்றுமுதல் சுக்கு நூறாக உடைகின்றது


நிரம்ப படிப்பவர், அடக்கமானவர், பல இடங்களில் மாணவர்களுக்கு போதிப்பவர் என எவ்வளவு பெரிய மரியாதை இவர் மீது இருந்தது


சிந்து பைரவி குடிகார சிவகுமாராக புத்தி பேதலித்து நிற்கின்றார், என்ன ஆனது இவருக்கு?


இப்படியா உளறி கொட்டுவார்?


உலக நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு தேசமும் மாற வேண்டும், மாறியே தீரவேண்டும், இல்லை என்றால் போட்டு சாத்துவார்கள்.


ராக்கெட் விடுவது என்பது விளையாட அல்ல, அந்த அனுபவத்தில்தான் ஏவுகனைகள் செய்ய முடியும், அந்த செயற்கைகோள்களை நிறுத்துவதால்தான் நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், தொலைகாட்சி, தொலைதொடர்பு என சகலத்தையும் இயக்கமுடியும்


மொத்தத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக வானத்திலிருந்து பூமியினை விஞ்ஞான ரீதியாக இயக்குபவை இந்த செயற்கைகோள்கள், அவற்றை நிறுத்த செய்வது இந்த ராக்கெட்டுகள்


விண்வெளியில் ஒரு நாடு அடையும் வெற்றியும் அனுபவமே அவற்றை ராணுவ ரீதியாக பலமடைய செய்யும். அவை அன்றி ஒன்றும் செய்யமுடியாது


இன்னொன்று 104 செயற்கைகோளை ஏவியிருக்கின்றோமே, இவற்றால் எவ்வளவு வருமானம் தெரியுமா? அவை இந்த தேசத்தின் அந்நிய செலாவணி அல்லவா?


பாதுகாப்பு, வருமானம், உலக அரங்கில் மதிப்பு என எவ்வளவு சாதனைகளை செய்திருக்கும் காரியத்தினை இப்படியா விமர்சிப்பார்?


சரி சினிமா நாட்டிற்கு தேவையா?


இவரும் நடித்து, இவர் மகன்களையும் பெரும் நடிகர்களாக்கி, இவர் மருமகளும் நடிகை என்பது ஏன்?


அந்த சினிமா இந்த சமூகத்தினை சீரழிக்கின்றது, இந்த தமிழக சீரழிவுக்கு காரணமே சினிமா என இவர் ஏன் சொல்லவில்லை?


இம்மனிதர் தானொரு அரைகுறை நடிகர், நடிகர் மட்டுமே என்பதை நிரூபித்துவிட்டார்


தனக்கு சுத்தமாக நாட்டுபற்றோ, விஞ்ஞான அறிவோ, உலக அறிவொ இல்லை என்பதை சொல்லிவிட்டார்


டை அடித்துகொண்டு சினிமா இமேஜை காப்பாற்ற வளையவரும் இவரிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்?


ஆக தமிழகத்து பள்ளிகளே, கல்லூரிகளே


ஒரு மாபெரும் சாதனையினை, அமெரிக்காவும் பிரான்சும், ரஷ்யாவும் வரவேற்கும் பெரும் சாதனையினை கொஞ்சமும் அறிவின்றி கொச்சைபடுத்தும் இவரை


உங்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பேச அழைப்பதற்கு பதிலாக, சசிகலா கோஷ்டிகளில் ஒன்றை அழைக்கலாம்


ஆம், இருவரும் உங்கள் மாணவசெல்வங்களை முட்டாளாகவே மாற்றுவார்கள்


இந்தியாவின் மாபெரும் விண்வெளி பாய்ச்சலுக்கு காரணமான அப்துல்கலாம் பிறந்த மண்ணில்தான், இம்மாதிரி அரைகுறைகளும் பிறந்திருக்கின்றன.


விக்ரம் சார்பாய், சதிஷ் தவான், அப்துல் கலாம் என எத்தனை மேதைகள் தங்கள் வாழ்வினை அர்பணித்து பெற்ற வெற்றி அது


எத்தனை வல்லரசுகள் தடுத்தும், மிரட்டியும், ஏளனம் செய்தாலும் அதனையும் மீறி இந்த பாமர தேசம் சாதித்த சாதனை அது


எவ்வளவு அவமானபட்டிருக்கின்றோம், எவ்வளவு இழந்திருக்கின்றோம்?


எப்படிபட்ட பெரும் போராட்டம் போராடி அதனை சாதித்திருக்கின்றோம்


ஒரு நடிகனுக்கு ராக்கெட் விஞ்ஞானம் எப்படி புரியும்?


ஒரு மேக் அப் நடிகனிடம் பெரும் மாமேதை போல எதிர்பார்த்து, பல இடங்களுக்கு பேச அழைத்தது நிச்சயம் தமிழக தவறு


இனியாவது தமிழகம் திருந்தட்டும்


இம்மனிதர் நிச்சயம் திருந்தபோவதில்லை


கல்வி நிலையங்களே நீங்கள் திருந்திகொள்ளுங்கள், மாணவர்களுக்கு இம்மாதிரி அரைகுறைகளை அறிமுகபடுத்தி பெரும் பாவம் செய்துவிடாதீர்கள்...


தண்ணீர் பஞ்சம் உள்ள நாட்டில் இப்படி பணங்களை வீணடிக்க கூடாதாம், அன்னாருக்கு வேதனை


கூவத்தூர் ரிசார்ட்டிலும் 122 எம் எல் ஏக்களுக்கும் செலவழித்து இன்று ஆட்சி அமைக்கபட்டிருக்கின்றதே, அந்த பணம் பற்றி இவர் கேட்பாரா? இல்லை


ஆனால் விஞ்ஞான திட்டங்களுக்கு செலவழித்த பணம் என்றால் அன்னார் கேட்பார்.


கொஞ்சம் நாட்டுபற்றும், சிந்தனையும் , விண்வெளி அறிவும் இருந்தால் இப்படி பேசுவாரா?


மிஸ்டர் சிவகுமார், தூக்கி எறியவேண்டியது நாட்டின் பெரும் விஞ்ஞான சாதனையான ராக்கெட்டுகளை அல்ல,


உங்களை போன்ற அரைகுறைகளைத்தான்











 


 

No comments:

Post a Comment