Thursday, February 16, 2017

சிறையிலும் சுருட்டல்தான், விதி அப்படி.

சிறையில் மெழுகுவர்த்தி செய்கின்றார் சசிகலா


பின்ன? நேரு , காந்தி , கலைஞர் போல சிறையில் இருந்து காலத்தை வென்ற கட்டுரைகளா இவரால் எழுத முடியும்?


இல்லை எழுததான் தெரியுமா?




என்ன தெரியும்? எதனையாவது சுருட்ட தெரியும்


அப்படி கைகளால் மெழுவர்த்தி சுருட்டிகொண்டிருக்கின்றார்,


சிறையிலும் சுருட்டல்தான், விதி அப்படி.






சசிகலா படித்த பள்ளி எது தெரியுமா?


இப்படி ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கின்றது விகடன்


ஏதோ சசிகலா நாசாவில் பயிற்சிபெற்று விண்வெளிக்கு சென்றது போலவும், பொருளாதரத்தில் பின்னி எடுத்து அமெரிக்க வங்கி அழைத்தது போலவும், ஐன்ஸ்டீனின் கொள்கையினை மறுத்து நோபல் வாங்கியது போலவும் அவர் படித்த பள்ளியினை தேடியிருக்கின்றார்கள்




செய்திருப்பது மகா மோசடி, அவர் மீதான பிம்பம் உலகில் தாவூத் இப்ராஹிமிற்கு அடுத்தபடியானது, மிக மிக மர்மாமான நபர் என சொல்லபடும் ஒருவர் படித்த பள்ளியினை யாராவது தேடுவார்களா?


அப்படி தேடினாலும் அப்பள்ளி, சசிகலா படித்தபள்ளி இது என சொல்லுமா? அந்த அவமானத்தை தேடிகொள்ளுமா?


ஆனாலும் மிக பரிதாபத்தில் இருந்த அந்த பள்ளி, ஆம் இதுதான் அவர் ஒன்று இரண்டு என எண்ண தொடங்கிய இடம், இங்கு எண்ண தொடங்கிய அவர்தான் பின் எண்ணமுடியாத பணங்களை எண்ணி பின் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றார் என சொல்லியிருக்கின்றது


மொத்தம் 200 பேர்தான் படிக்கின்றார்களாம்


சசிகலா படித்த பள்ளி என சொன்னபின் அந்த 200ம் விரைவில் போய்விடும்


மூட வேண்டிய பள்ளிதான் அது.









No comments:

Post a Comment