Tuesday, February 14, 2017

எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவினை நானே பாதுகாத்தேன் : சசிகலா





"எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவினை நானே பாதுகாத்தேன், கட்சியினை வழிநடத்தினேன்


அன்று எம்ஜிஆருக்கு ஜெயா உதவியாளராக இருந்து அவர் மறைவுக்கு பின் ஒதுங்க நினைத்தபொழுது நானே அவரை தடுத்தேன், கட்சிக்காக உழைத்தேன், கட்சியினை நடத்தினேன்


அன்று எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயா எந்த நிலையில் இருந்தாரோ அதே நிலையில்தான் நானும் இருகின்றேன்" : சசிகலா





இதன் மூலம் சின்னம்மா சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், அரசியலிலிருந்து விலக நினைத்த ஜெயலலிதாவினை பிடித்து அரசியலில் திணித்து அவரை முதல்வராக்கியது இவர்தான்

மறைமுகமாக சொல்லிகொள்வது என்னவென்றால் ஜெயலலிதாவினை பொம்மையாக வைத்து ஆட்சி செய்தது, கட்சியினை நிர்வகித்தது எல்லாமே நான், அதனால் ஜெயாவின் சிறைவாசம் முதல் எல்லா அவமானங்களுக்கும் நானே காரணம்

இது தமிழகத்தில் யாருக்கு தெரியாது??, எனினும் ஒப்புதல் வாக்குமூலம் இது

நமக்கு புரியாத விஷயம் என்னவென்றால், ஜெயா மறைவுக்கு பின் இவர் ஜெயலலிதாவினை ஆட்சியில் அமர்த்தினார் சரி, அதே நிலைதான் எனக்கும் என இவர் பகிரங்கமாக சொல்லும் பொழுது, இவரை இன்று வலுகட்டாயமாக ஆட்சியில் அமர்த்துவது யார்?

ஆக ஜெயாவிற்கொரு சசிகலா போல, சசிகலாவிற்கும் ஒரு சின்ன சசிகலா யாரோ இருக்கின்றார் என்பது உறுதி

அது பன்னீர் செல்வமாக இருக்க முடியாது அல்லவா? பின் யார்? அதனை தெரிந்துகொள்ள சின்ன அம்மா காலம் முடியும் வரை தமிழகம் காத்திருக்க வேண்டும்.




 

 



 

No comments:

Post a Comment