Saturday, February 18, 2017

ஜெயா நினைவிடத்தில் பழனிச்சாமி அஞ்சலி...

https://youtu.be/SO9_iAxpAs0

ஜெயா நினைவிடத்தில் பழனிச்சாமி அமைச்சர்களோடு அஞ்சலி


நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கபட்ட ஒரு குற்றவாளியின் கல்லறையில் மாநில முதல்வர் அஞ்சலி செலுத்துகின்றார்


அதோடு சிறையில் இருக்கும் இன்னொரு குற்றவாளி வாழ்க என அவரின் அமைச்சரவை கும்பல்கள் கத்துகின்றன‌




இதனை எப்படி இந்திய அரசியல் சட்டமும், உச்ச அதிகாரமும் அனுமதிக்கின்றன?


ஏதோ காந்தி சமாதியிலும், காமராஜர் சமாதியிலும் வீர முழக்கம் எடுப்பது போல எடுத்துகொண்டிருக்கின்றார்கள்


ஒரு மாநில‌ முதல்வர் வீரப்பன் சமாதியில் அஞ்சலி செலுத்தினால்? இன்னொரு முதல்வர் அயோத்தி குப்பம் வீரமணி சமாதியிலோ இல்லை கொலைகார குற்றவாளிள் சமாதியிலோ அஞ்சலி செலுத்தினால் எப்படி இருக்கும்?


பஞ்சாப் முதல்வர் பிந்ரன்வாலே சமாதியிலும், காஷ்மீர் முதல்வர் அங்கு அழிச்சாட்டியம் செய்த தீவிரவாதிகள் கல்லறையிலும் அஞ்சலி செலுத்தினால் எப்படி இருக்கும்?


இங்கு அதுதான் நடந்துகொண்டிருக்கின்றது


எப்படி இதனை ஆளுநரும், உள்துறை அமைச்சும் அனுமதிக்கின்றது?


தனிபட்ட முறையில் அவர்கள் அவர் கல்லறையில் தலைகீழாக தொங்கட்டும் தடுப்பது யார்?


ஆனால் மாநில முதல்வர் ஒரு குற்றவாளி கல்லறையில் நின்று வணங்கி, இன்னொரு குற்றவாளி வாழ்க என சொல்வதும் என்ன விதம்?


இதனை அனுமதிக்கும் நாடு எப்படி இருக்கும்? எப்படி உருப்படும்?


இனி அடுத்தமுதல்வர் வீரப்பன் சமாதியிலோ, ஆட்டோ சங்கர் சமாதியிலோ அஞ்சலி செலுத்தும் கொடுமை நடக்காமல் இருக்கட்டும்



No comments:

Post a Comment