Thursday, February 23, 2017

ஐரோப்பிய நாடுகள் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றன‌

ஐரோப்பிய நாடுகள் ஒருவித பதற்றத்தில் இருக்கின்றன‌


அதாகபட்டது தெற்கே அட்லாண்டிக் பகுதி அமெரிக்காவிற்கும் வடக்கே அர்டிக் பகுதி ரஷ்யாவிற்கும் என்பது வல்லோர்கள் வகுத்த விதி


இவர்களின் அணு ஆயுத சங்கதிகள் எல்லாம் இங்குதான் பரிசோதிக்கபடும், அப்படி சமீபத்தில் ரஷ்யா ஒரு அணுகுண்டினை ஆர்டிக்கில் பரிசோதித்ததாகவும் அதன் துகள்கள் ஐரோப்பாவில் பரவுவதாகவும் ஒரு பரபரப்பு




அத்துகள்கள் புற்றுநோயினை ஏற்படுத்தும் என்பதால் வெளியில் தெரிந்தல், மக்கள் தமிழர்களை போல அல்ல மாறாக பொங்கி எழுவார்கள் என்பதாலும் ஐரோப்பிய அரசுகள் திகைக்கின்றன‌


சில ரகசிய சோதனைகள் நடந்ததாகவும் செய்திகள் உண்டு


செய்தி உறுதியானாலும் என்ன நடக்கும்? ரஷ்யா மறுக்கத்தான் செய்யும், அதன் இயல்பு அப்படி


அணு அழிவு என்பதெல்லாம் அவர்களுக்கு சாதரணம், செர்னோபில் எனும் பெரும் அழிவினையே மறைக்கமுயன்றவர்கள் அவர்கள்.


இது நிரூபிக்கபட்டால் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் மறுபரீசிலனை செய்யும்


அமெரிக்க திட்டமே அதுதான் என்பது இன்னொரு கோணம்


ஆனாலும் எதற்கும் அசராதவர்கள் ரஷ்யர்கள், குறிப்பாக அவர்கள் தலைவர் புட்டீன், ஆனானபட்ட டிரம்பிற்கே டிரம்ப் கார்டு வைத்திருப்பவர், ஏதும் பிரச்சினை என்றால் அவர் அதிரடி வேறுமாதிரி இருக்கலாம்..



No comments:

Post a Comment