Wednesday, February 22, 2017

தமிழக அரசியல் பதிவுகள் போரடித்துவிட்டது...

தமிழக அரசியல் பதிவுகள் போரடித்துவிட்டது, இனி குறைத்துகொள்ளவேண்டும்


அதிமுக திமுகவினை இந்த களபேரத்தில் அலசியாகிவிட்டது, பெரும் ஆளுமை மறையும்பொழுது அடுத்த தலைவர்கள் கட்சியினை பிடிக்கும்பொழுது குழப்பம் வரும்


அண்ணா மறைந்தபொழுது கலைஞர் அடுத்த தலைவர் என யாரும் எதிர்பார்க்கவிலை, விரும்பவும் இல்லை. பெரும் எழுத்தாளர் என்றாலும் பல விஷயங்களில் அவர் இமேஜ் சரிந்திருந்தது




சசிகலா அளவிற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் அதில் முக்கால்வாசி இருந்தது, எத்தனையோ பேர் முகம் சுளிக்கத்தான் செய்தார்கள், கட்சி அழிந்துவிடும் என்றார்கள்


ஆனால் என்ன வித்தை செய்தாரோ தெரியாது, மிக நுட்பமாக கட்சியினை கைபற்றினார்


திமுக அழிந்தாவிட்டது?, இதுதான் அரசியல்.


ஜெயலலிதா போராடி கைபற்றினார்


சசிகலாவிற்கு ஜெயா போல, கலைஞர் போல கட்சியினை கைபற்ற‌ சிக்கல் எல்லாம் இல்லை, ஜெயா மறைந்தவுடன் கட்சி தானகவே அவருக்கு சென்றுவிட்டது, இன்னும் 122 எம் எல் ஏக்களை 20 எம்பிகளை அவரால் கட்டுபடுத்தமுடிகின்றது


எப்படி முடிகின்றது? அந்த சம்பவத்தை சொன்னால் எல்லாம் விளங்கும்


அதாவது சம்பத் திமுகவில் இருந்து பிரிந்தார். சினிமாகாரர் ஆதிக்கம், பொய்யான கவர்ச்சி, காமராஜர் எதிர்ப்பு என அவருக்கு பல விஷயங்கள் பிடிக்கவில்லை, கட்சிக்குள் சர்ச்சை வந்தது


அப்பொழுது அன்பழகன் இப்படி அழுதார் என்பார்கள்


"உனக்கு நிறைய சொத்து இருக்கின்றது சம்பத், எங்களுக்கு என்ன இருக்கின்றது?"


அந்த திமுகவின் வழியில் வந்த அதிமுக இப்படித்தான் இருக்கும், பின் எப்படி இருக்கும்?


கூவத்தூரில் எல்லோரும் குனிந்து இருந்ததும் இந்த அடிப்படையில்தான், இன்னும் குனிவார்கள், தரை தடுக்குமட்டும் குனிவார்கள்.


ஆக, இந்த தமிழக அரசியலை இனி அதிகம் கவனிக்க கூடாது, இப்போதைக்கு எதுவும் சுவாரஸ்யமல்ல, அப்படி நடப்பதாகவும் தெரியவில்லை


போரடிக்க ஆரம்பித்துவிட்டது அதனால் இதனை விட்டுவிட்டு வேறு விஷயங்களை ரசிக்கலாம்..






"தொலைதொடர்பு சேவையில் பொறுப்புணர்வு வேண்டும்" : பிரதர் மோடி


இவர் நேற்று அமரிக்காவிற்கு பொறுப்புவேண்டும் என்றார், இன்று தொலைதொடர்பு துறைக்கு பொறுப்புவேண்டும் என்கின்றார்


ஆனால் சாமியார்களுக்கும், பிரதமருக்கும் பொறுப்பு கொஞ்சமும் இருக்க கூடாது என்பது இவரின் கொள்கைகளில் ஒன்றுபோல் தெரிகின்றது.








No comments:

Post a Comment