Tuesday, February 21, 2017

ஊடகங்களின் செயல்பாடு மழலையின் மரணத்தை விட கொடூரமானது

https://youtu.be/BOu4YGU1HFU



தமிழக செய்திகளை தமிழக ஊடகங்களை காட்டிலும் வெளிநாட்டு ஊடகங்களே உண்மையினை சொல்கின்றன‌


ஜெயா சாவு மர்மத்தினை வெளிமாநில பத்திரிகைகளும், வெளிநாட்டு பத்திரிகைகளும் பெரும் விவாதமாக அடித்து சொல்கின்றன, தமிழக ஊடகங்கள் எல்லாம் மூச், ஒன்றிரண்டை தவிர‌


அப்படித்தான் மகா பாதக செயலான எண்ணூர் சிறுமி ரித்விகா செய்திகளும் மறைக்கபடுகின்றன‌


உண்மையில் அது ராஜேஸ் என்ற மிருகத்தின் பாலியல் வக்கிரத்தில் நடந்த கொலை என்கின்றது அந்த ஊடகங்கள்,


நம் ஊடகங்களோ அது நகைக்காக என சொல்லி பலவற்றை மறைக்கின்றன‌


மழலையின் மரணத்தை விட கொடூரமானது, இந்த ஊடகங்களின் செயல்பாடு


சிறார் பாலியல் வன்முறை என்பது மிகுந்திருக்கும் சமூக சீர்கேடான மாநிலம் தமிழகம் என்பது புரிகின்றது, அதிர்ச்சிதான்.பெரும்பாலும் வெளிவருவதில்லை, புகார்களும் கொடுக்கபடாது,


ஆனால் நாள்தோறும் நடைபெற்றுகொண்டுதான் இருக்கின்றது


பெரும் பாதக கொலைகளிலே மட்டும்தான் இவ்வக்கிரம் வெளிதெரிகின்றது


ஏன் இப்படி ஆகிவிட்டது என்றால் அடிப்படை விஷயங்கள் அப்படி


பாலியல் பிரச்சினைகளையும், மதுவினையும் எந்த சட்டத்தாலும் நிறுத்திவிடமுடியாது என்பது உலகநாடுகள் உணர்ந்துவிட்ட சமாச்சாரம்


சில மிகுந்த கட்டுபாட்டில் வைக்கின்றன, சில இரண்டிற்கும் வரிபோட்டுவிட்டு அதன் போக்கில் இயங்குகின்றன‌


இரண்டாவது தான் இன்றைய பெரும்பாலான உலக நிலைப்பாடு


நமது சமூக அமைப்பில் மது என்பது அரசாங்கத்தால் அங்கீகரிக்கபட்டுவிட்டது, ஆனால் பாலியல் சமாச்சாரங்களுக்கு இன்னும் ஒரு தீர்வும் இல்லை


விளைவு இம்மாதிரி மனக்கோறாறு பிடித்த கேஸ்கள், பிஞ்சுகளை நசுக்கிவிடுகின்றன, இவர்கள் எல்லாம் மானிடர்கள் அல்ல மாறாக மனம் கோளாறாகிவிட்ட மிருகங்கள்


இவர்களுக்கு பெரும் தண்டனை அவசியம், பைத்தியங்கள்தான் ஆனால் சிகிச்சையிலும் திருந்தாத பைத்தியங்களை என்ன செய்ய? திருந்தமாட்டார்கள், அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்பலாம்


வருங்காலத்தில் இம்மாதிரியான விஷயங்களை களைய பாலியல் கல்வியே அவசியம், அது ஒன்றால் மட்டுமே இம்மாதிரி விஷயங்களை கட்டுபடுத்தலாம்


மதுகடைகள் இனி தவிர்க்கமுடியாதவை எனும் அளவிற்கு நிலமை சென்றபின் பாலியல் கல்வியினை மட்டும் தொடங்காதது ஏன்?


இது பண்பாடு, கலாச்சாரத்தை கெடுபதாகாது


நம் கலாச்சாரங்கள் அஜந்தா, எல்லோரா குகைகளிலும், ஆலய கோபுரங்களிலும், காடுகளில் வாழ்ந்த முனிவர்களின் ஆராய்ச்சியிலும் நன்றாக தெரிகின்றது


அக்காலத்தில் வாழ்வின் அங்கமாகவே பாலியல் கல்வி பகிரங்கமாக இருந்திருக்கின்றது, பின் தொலைக்கபட்டிருக்கின்றது


மீட்டுகொண்டு வருவதில் பெரும் பிழை இல்லை, கொண்டுவந்தால் வருங்கால சந்ததிகள் பாதுகாக்கபடலாம்


இந்த ஹாசினி, ரித்விகா போன்ற பிஞ்சுகளை நாசம் செய்து கொன்றவர்கள் நிச்சயம் இச்சமூகத்தில் வாழ தகுதி இல்லாதவர்கள், சட்டம் என்னமும் சொல்லட்டும், ஆனால் எல்லோர் மனசாட்சியும் சொல்வது இதுதான்


அதுவும் ரித்விகாவின் மரணம் அப்படியே நம்மை அழவைக்கின்றது, இப்படி எல்லாம் கொடூர மனம் படைத்தவர்கள் உண்டா? என அஞ்ச வைக்கின்றது


3 வயதான அந்த பிஞ்சு தன் சக தோழியுடன் விளையாட சென்றிருக்கின்றாள், அத்தோழியின் தாயின் கள்ளகாதலன் இந்த மாபாதகத்தை நிகழ்த்தியிருக்கின்றான்


அந்த குழந்தையின் தாயும் அருகில்தான் இருந்திருக்கின்றாள்


எக்குழந்தையினை பார்த்தாலும் தன் குழந்தையாக கொஞ்சும் பெண்கள் மத்தியில் இந்த மிருகம் அந்த மிருகத்தின் செயலை கண்டு காணமல் இருந்திருக்கின்றது


மனம் அப்படியே வெடிக்கும் நிகழ்வு, சப்தநாடிகளும் ஒடுங்கும் நேரம்


இந்த பாழ்பட்ட சமூகத்தில் பிறந்து பிஞ்சிலே கருகி போன அந்த ரித்விகாவிற்காக கண்ணீர் விட்டு அழலாம்


ஒரு பெண் குழந்தையின் தகப்பனாக அந்த பெற்றோரின் வேதனையினை இதயத்தில் வாங்கி அழலாம், இறைவன் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கட்டும்


பெண் குழந்தைகளை வைத்திருப்போர் எத்தனை பொறுப்புடன் இருக்கவேண்டும் என்பதனை நமக்கெல்லாம் சொல்லிவிட்டு சென்ற அந்த தேவதையினை நினைத்து இரவெல்லாம் தூக்கமில்லை


இந்த காரியத்தை தமிழகத்திற்கு சொல்லவே, இன்னும் அவள் போல சொல்லணா சித்திரவதைகளை அனுபவிக்கும் பிஞ்சுகளின் நிலையினை சொல்லவே அவள் வாழ்வு முடிந்திருக்கின்றது


பாலியல் கல்வி கொடுத்து வருங்கால சமூகத்தை நெறிபடுத்து கடமை இந்த சமூகத்திற்கு உண்டு என்பதை உணரும் நேரமிது


மழலைகளின் தியாகியாகியிருக்கின்றாள் அந்த ரித்விகா, அந்த தியாகத்தால் ஏராளமான குழந்தைகள் காப்பாறபடட்டும் , அவள் சாவிற்கு ஒரு அர்த்தம் இருக்கட்டும்


நடப்பது என்ன ஆட்சியாகவும் இருக்கட்டும், ராவணன் ராமன் எமன் பிள்ளையார் என யாரும் ஆளட்டும்


ஆனால் இந்த பிஞ்சின் கதறலுக்கு உரிய நியாயம் கிடைக்கட்டும


அந்த அபலை பெற்றோரின் பெருங்காயத்திற்கு ஒரு ஒத்தடமாவது கிடைக்கட்டும்




 

 



 

No comments:

Post a Comment