Saturday, February 18, 2017

சட்டசபையில் இருந்து...

https://youtu.be/6a2Lnz02bOQ



மிஸ்டர் தனபால்


இப்படித்தான் சட்டமனற்றத்தில் பால் ஊற்றுவார்கள், இதனை கூட சமாளிக்க முடியாதா? வெட்கமாக இல்லை.


எல்லோரும் குனிந்து நிற்க அது என்ன அதிமுக பொதுசெயலாளர் தேர்தலா?




இது சட்டசபை, இது இப்படித்தான் இருக்கும். இப்படி பெரும் புயலினை எல்லாம் எதிர்கொள்ளவேண்டும்


முடிந்தால், நியாயமாக சமாளிக்கமுடிந்தால் சமாளியுங்கள், இல்லை என்றால் கட்சி கலாச்சாரபடி அம்மா சமாதி, ரமாவரம் தோட்டம் என தியானம் செய்யுங்கள்


இது உங்கள் கட்சி தலமை நினைத்தபடி நடக்க என்ன கூவத்தூர் ரிசார்ட்டா?


ஆக முடிந்தால் கோரிக்கைகளை பரிசீலித்து நல்ல முடிவு கொடுங்கள், இல்லை என்றால் அம்மா சமாதி சென்று ஆழ்ந்ந்த தியானத்தில் இறங்குங்கள்


இப்படி அழுது தமிழக மாண்பினை கெடுக்காதீர்கள்


சபாநாயருக்கான தகுதி இல்லை என்றால் ஏன் அங்கு இருக்க வேண்டும்?


போயஸ் கார்டனில் குனிந்து நிற்பதற்கும், சபாநாயகர் பதவிக்கும் வித்தியாசம் உண்டு என சொன்னால் அதற்கெல்லாம் அழுவீர்களா?


சீ..சீ


ஏற்கனவே மிரட்டபட்டு எம் எல் ஏக்கள் அழைத்துவரபட்டிருக்கின்றார்கள், சபாநாயகரோ அழுதுகொண்டிருக்கின்றார்


இன்னும் ஆளுநருக்கு என்ன சாட்சி வேண்டும்?


கலைத்துவிட்டு கழுதைகளை தொகுதிபக்கம் விரட்டியடிக்க வேண்டாமா?









இந்த களபேரத்திற்கு காரணம் யார்?


நிச்சயமாக பழனிச்சாமியினை அழைத்த கவர்ணர், அவர்தான் ஆட்டத்தை டாஸ் போட்டு தொடங்கிவைத்தவர்


ஆனால் ஆட்டம் நடக்காமல் , கலவரம் நடக்கின்றது


கவர்ணரே இனி என்ன? ஆட்சியினை கலைப்பதற்கு ஒரு அறிக்கையினை டெல்லிக்கு அனுப்பிவிட்டு மும்பைக்கு செல்லுங்கள்


ஆட்டத்தை தொடங்கி வைத்தீர்கள் அல்லவா, முடித்து வைத்துவிட்டும் செல்லுங்கள்






என்னை அவமானபடுத்துகின்றீர்கள், நான் எங்கே சென்று முறையிடுவேன்? : சபாநாயகர் அழுகை


என்னது? இதற்கெல்லாம் அழுகையா? இவ்வளவுதான் பயிற்சியா?


அவர்தான் என்ன செய்வார் பாவம், "அம்மா வாழ்க", "இதய தெய்வம்""எங்கள் சாமி" என கானம் மட்டும் கேட்டுகொண்டிருந்த அவருக்கு முதன் முதலாக ரணகளத்தினை காணும்பொழுது அழுகை வருகின்றது


அது எத்தனை ரணகளத்தினை கண்ட சபை, இதே மன்றத்தில் அவர்களின் ஜெயலலிதா கும்பல் பி.எச் பாண்டியனை படுத்தாத பாடா?


அப்படி அழுபவர் அந்த பிஎச் பாண்டியனிடம் ஒரு ஆலோசனை கேட்டால்தான் என்ன?


எப்படிபட்ட விசித்திரங்கள் எல்லாம் நடந்தது? ஆளுநர் அறிக்கை கேட்காமல் கூட கலைஞர் ஆட்சியினை கலைத்துபோட்ட கொடுமைகள் எல்லாம் நடந்தது


அவர் யாரிடம் முறையிட என அழுதுகொண்டா சென்றார்?


அப்படி இந்த தனபால் இப்படி மூக்கினை சீந்துவதை விட்டுவிட்டு பழைய சபாநாயர்களிடம் அனுபவம் கேட்பது நல்லது


ஆக அதிமுகவினரே, உங்கள் கட்சியினை உங்கள் ஜெயலலிதாவும், சின்னம்மாவும் எப்படி கெடுத்துவைத்திருக்கின்றார்கள் பார்த்தர்களா?


உங்களை ஒரு சட்டமன்ற எதிர்ப்பினை கூட தெரிவிக்கமுடியாத, ஒரு போராட்ட குணமும் இல்லா மண் பொம்மைகளாக, பிராய்லர் கோழிகளாக வளர்த்திருக்கின்றார்கள்


ஆனால் திமுக எப்படி நிற்கின்றது பார்த்தீர்களா? தலைவன் அப்படி


அதனால் நீங்கள் நேரே அம்மா சமாதி சென்று, இப்படிபட்ட கோழைகளாக எங்களை உருவாக்கிவிட்டாயே அம்மா, என சொல்லி ஓங்கி அடித்து அழுங்கள்,


மும்முறை அடித்து அழுங்கள்...






முகம் துடைத்டுவிட்டு, குடிநீர் குடித்துவிட்டு சற்று ஆசுவாசபடுத்திய பிரேக் முடிந்து மறுபடியும் கோதாவுற்குள் வந்தாயிற்று


ஆட்டம் விறுவிறுப்பாக செல்கின்றது


இந்த ரவுண்டில் முதல் குத்து யாரிடம் இருந்து வரும் என தமிழகமே ஆவலாய் இருக்கின்றது





சே.. தாமரைகனி, வீரபாண்டி ஆறுமுகம் இந்த நேரம் இல்லாமல் போனது நமது துரதிருஷ்டம்

ஆனால் என்ன? பல அனுபவசாலிகள் உள்ளேதான் இருக்கின்றார்கள்

அந்த 130 பேரையும் ரிசார்ட் அனுப்புவதற்கு பதிலாக "இறுதிசுற்று" மாதவன் போல ஒருவரிடம் அனுப்பியிருக்கலாமோ என சசிகலா தரப்பு யோசித்து கொண்டிருக்கலாம்...





அய்யயோ ஆம்புலன்ஸ் சட்டமன்றம் செல்கின்றதாம்


நாம் கணித்தது இப்படி எல்லாம் நடக்கின்றதா?


முந்தைய பதிவில்தான் எழுதினோம், பெரும் கொந்தளிப்புகள் வரலாம், அனுபவம் இல்லாத அதிமுகவினருக்கு தாங்கிகொள்ளமுடியாமல் ஆம்புலன்ஸில் ஏறும் நிலைவரலாம் , சட்டபேரவைக்குள்
ஆம்புலன்ஸ் கூட செல்லும் நிலைவரலாம் என,




அதற்குள் வந்தே விட்டதா?


எப்படி நம்மால் முன்னமே சொல்ல முடிந்தது??


எமோஷனல் ஏகாம்பரம் விவேக் போல என்னை நொக்கி நானே ஒரு வியப்பான பார்வை பார்த்து கொண்டிருக்கின்றேன்..


அப்படியானால் குஷ்பூ தமிழக காங்கிரஸ் தலைவராகிவிடுவாரா?


ஆகட்டும் ஆகட்டும்... :)








No comments:

Post a Comment