Friday, February 24, 2017

ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று..



Image may contain: 1 person, selfie and close-up


முதலில் எம்ஜிஆரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று


எம்ஜிஆர் தான் சினிமாவில் திரட்டிய மக்கள் சக்தியினை அவரிடமே விட்டுசென்றார். ஜெயா கட்சியினை சிரமபட்டு வளர்த்தவரோ அதற்காக போராடியவரோ அல்ல‌


உருப்படியான ஒரு மக்கள் நல போராட்டத்தை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அவர் நடத்தியதில்லை..


எங்கிருந்தோ வந்த அவருக்கு கட்சி சிக்கிகொண்டது,
இந்திராவும், ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு அவர் ஜாதகத்தில் கட்டம் இருந்தது.


அதுவும் ராஜிவ் செத்து அந்த அனுதாபத்தில் அவர் முதல்வராகும் அளவிற்கு விதி அவருக்கு ஒத்துழைத்தது


அதன் பின்னும் அவரின் பிறவிபலன் அவருக்கு வாய்ப்புகளை கொடுத்துகொண்டே இருந்தது, கிட்டதட்ட மகாராணி ஸ்தானத்திற்கு உயர்ந்தார் ஜெயலலிதா


இல்லை உயர்த்தபட்டார்


ம் என்றால் சிறைவாசம் , ஏன் என்றால் வனவாசம் எனும் அளவிற்கு அவருக்கு காலம் அவரை சக்தியாக்கி வைத்திருந்தது


ஏராளமான சர்ச்சைகளுக்கு சொந்தகாரியானார், ஆனால் எந்த இடத்திலும் அதனை பற்றி பேசியதில்லை. நான் அப்படித்தான் என்பது போல அவரின் தோரணை இருந்தது.


அவர் யாரையும் தேடி சென்றதாக தெரியாது, எல்லோரும் அவரை தேடித்தான் சென்று வணங்கி நின்றார்கள், அப்படியும் காலம் இருந்தது


காலம் தமிழக மக்களின் அறியாமையில் அவருக்கு வாய்ப்பளித்தது


இப்படி எல்லாம் பெரும் உயரத்தில் பெரும் ராணிக்கு நிகரான வாழ்வினை வாழ்ந்தார் ஜெயா, பிரச்சாரத்திற்கு இந்த சிறிய தமிழகத்தில் ஹெலிகாப்டரில் பறந்த முதல் மற்றும் கடைசியான கட்சி தலைவி அவர்தான்


வாழ ஒரு காலம் உண்டென்றால் அடிவாங்க ஒரு காலம் உண்டல்லவா?


சொத்துகுவிப்பு வழக்கில் அவரால் தப்ப இயலவில்லை, குமாரசாமி வடிவில் விதி வெளியில் விட்டாலும், அவர் மகிழ்ச்சியடையவில்லை


பெரும் எண்ணிக்கை எம்பிக்களை பெற்று பிரதமராகிவிட்டால் தன் வழக்குகளை இந்திரா ஸ்டைலில் புதைத்துவிடலாம் எனும் கனவும் மோடி வடிவில் தகர்ந்தது


அதன்பின் ஜெயலலிதாவிடம் உற்சாகம் குறைந்தது, அதாவது அவர் ஜாதகம் தென்னிந்தியாவில் பலித்தது, வட இந்தியாவில் முடியவில்லை


தொடர்ந்து இரண்டாம் முறை முதல்வரானாலும் அவர் பெரும்பாலும் வெளிவரவில்லை, இந்நிலையில்தான் அவரின் எம்பி சசிகலா புஷ்பா என்னை ஜெயலலிதா அடித்தார் என பாராளுமன்றத்தில் அழுதார்


அதன் பின் காட்சிகள் மாறின, இதனை எதிர்பார்க்காத ஜெயலலிதா குழம்பினார், குழப்பத்திலே அப்பல்லோவில் அனுமதிகபட்டார்


அதன் பின் அப்பல்லோ டாக்டர்களை தவிர யாரும் ஜெயாவினை பார்க்கவில்லை, அவர்களுக்கு அடுத்து பார்த்தது லண்டன் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்


அங்கே வாழ்வு முடிந்து வெளிவந்தார் ஜெயா.


கட்சி ஆடியது, அவருக்கு பின் யார் என்ற குழப்பம் கட்சியில் ஒடிகொண்டிருக்கும் பொழுதே தீர்ப்பு வந்தது


அவர் கல்லறை இப்பொழுது ஒரு குற்றவாளியின் கல்லறை என அடையாளபடுத்தபடுகின்றது


அவர் நெடுநாள் சிறைவாசம் பெற்று, ஆட்சி நீங்கும் நிலைக்கும் அவர் விதி ஒப்புகொள்ளவில்லை, காப்பாற்றி இருக்கின்றது


ஜெயலலிதா எங்கும் தன் உணர்ச்சிகளை காட்டுபவர் அல்ல, கண்ணீரோ கத்தலோ பொதுஇடத்த்தில் அவரிடம் இருக்காது, எல்லா அவமானங்களையும், நக்கல்களையும் மனதில்தான் வாங்கிகொண்டிருப்பார்


எம்ஜிஆர் சமாதியில் அடித்து சத்தியம் செய்தார், கோபத்தில் சிரித்தார், ஒரு மாதிரி பேசினார் என எங்காவது ஜெயா வாழ்வில் பார்க்க முடியுமா?


அப்படியே பாறைபோல முகபாவம் இருக்கும், உதடுகள் மட்டும் அசையும்


மொத்தத்தில் கிட்டதட்ட 25 ஆண்டுகாலம் தமிழக அரசியலை ஆட்டுவிக்க அன்றொரு ஆன்மா இந்த பூமிக்கு வந்த நாள் இது


முதலில் எம்ஜிஆரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று, மற்றபடி ஒன்றுமில்லை


எம்.என் ராஜம் போல, சரோஜா தேவி போல, சச்சு போல ஒரு நடிகையாக வாழ்ந்திருக்கவேண்டிய ஜெயாவினை, இன்று மிஞ்சி போனால் கே.ஆர் விஜயா போல டிவி தொடர் நடிகையாக வாழ்ந்திருக்க வேண்டிய அவரை...


பெரும் மகாராணி ஆக்குவதற்கு தமிழக பாமர நிலை அப்படி ஒத்துழைத்திருக்கின்றது என்பதுதான் ஆச்சரியம்..


ஜெயாவின் பிறந்தநாளில் அவரை அல்ல, அவரை கொண்டாடிய தமிழக அறியாமையினைத்தான் நினைக்க வேண்டி இருக்கின்றது













 


 

No comments:

Post a Comment