Saturday, February 18, 2017

தவறுக்கு மேல் தவறு செய்கின்றது அந்த தரப்பு

https://youtu.be/kuhGgbwAWXI


தவறுக்கு மேல் தவறு செய்கின்றது அந்த தரப்பு


மு.க ஸ்டாலின் கைது என செய்திகள் சொல்கின்றன‌


அதாகபட்டது நாங்கள் இப்படித்தான் செய்வோம், அராஜகம் மேல் அராஜகம் செய்வோம் என்பதுபோல் இருக்கின்றது அவர்கள் செயல்பாடு




அந்த அக்கிரமகாரனுக்கும் கடைசிகட்டத்திலும் வாய்ப்புகள் உண்டு


ராவணன் அப்படித்தான் இன்றுபோய் நாளைவா என அனுப்பபட்டான்


இறுதிநொடிவரை துரியோதனுக்கு வாய்ப்பளித்தான் கண்ணன், அர்ச்சுணன் அழும் அந்த நொடிகூட துரியன் மனதை மாற்றும் என்ற நம்பிக்கை கண்ணனுக்கு இருந்தது


ஆனால் அழியும் விதிகொண்ட ராவணனும், துரியனும் இறுதிநொடியில் கூட திருந்தவில்லை


மொத்தமாக அழிந்தார்கள்


அதே நிலையில், இறுதிநிலையிலும் திருந்தமாட்டோம் என தமிழகத்திற்கு சொல்லிகொண்டிருப்பது அத்தரப்பு


தர்மத்தை மீறி நின்று ஆனானபட்ட அவர்களெல்லாம் அழிந்த பூமியில் இந்த அராஜகர்களின் ஆட்டம் எவ்வளவு நாள் நீடிக்கும்?


அவர்களுக்கான நாள் நெருங்கிகொண்டிருக்கின்றது, எந்த வாய்ப்பிலும் திருந்தாவிட்டால் அப்படித்தான்..







வாக்கெடுப்பு என சொல்லிவிட்டு தான் ஒரு சசிகலா எடுப்பு என சபாநாயகர் அறிவித்துவிட்டார்


அவர் அப்படித்தான் பழனிச்சாமி வெற்றி என உலகிற்கு சொல்லியிருக்கின்றார், அதன் அர்த்தம் தான் ஒரு சசிகலா அடிமை என்பதே..


இதனை சசிகலா தரப்பு 122 எம் எல் ஏக்கள் ஏற்றுகொள்ளாலமே அன்றி திமுகவும், ஸ்டாலினும், காங்கிரசும் ஏன் மொத்த தமிழ்நாடும் எப்படி ஏற்றுகொள்ளமுடியும்?




வாக்காளர்கள் எல்லாம் ரகசியமாக வாக்களிக்கும் நாட்டில் எம் எல் ஏக்கள் மட்டும் அப்படி வாக்களிக்க கூடாது என்பது என்ன விதி?


இதனை கேட்ட திமுக உறுப்பினர்கள் தாக்கபட்டிருக்கின்றார்கள், அங்கோ பழனிச்சாமி ஜெயா சமாதியில் சிரிக்கின்றார், பக்கத்தில் சின்னம்மா வாழ்க என கோஷம் வேறு


இதுவரை முணுமுணுத்த தமிழகம் கொந்தளிக்க தொடங்கியிருக்கின்றது


பழனிச்சாமிக்கு வாக்களித்த எம் எல் ஏக்கள் இனி தொகுதி திரும்புவது சிரமம், "தம்பி எரி தழல் கொண்டு வா.." என சீறதொடங்கிவிட்டது தமிழகம்


இனி அவர்கள் அரசியல் அனாதைகளாக சென்னையிலே இருந்துகொள்ள வேண்டியதுதான்


தமிழகம் பொங்க தொடங்கியாயிற்று, விரைவில் இது பெரும் எதிர்ப்பாக மாறும்


கட்சி அபிமானங்களை தாண்டி இது சசிகலா குடும்பத்திற்கு எதிரான பெரும் போராட்டமாக வெடிக்கும்


உண்மை அதிமுகவும், திமுகவும் காங்கிரசும் இன்னபிற கட்சிகளும் இணைந்து ஆர்பரிக்குக்கும்


அது தமிழக மக்களின் எதிர்ப்பு அன்றி வேறு என்ன?


ஆளுநர் தமிழக நிலை கட்டுபடுத்தா முடியாத அளவிற்கு மோசமாகும் முன்னால் விழித்துகொள்வது நல்லது


மக்கள் சக்தியினை கட்டுபடுத்துவது என்பது சாமான்யமான விஷயம் அல்ல, ஆளுநரும் மத்திய அரசும் தங்கள் கடமையினை செய்ய வேண்டிய நேரமிது


தமிழக மக்கள் மனது அவர்களுக்கு புரிந்தபின்னும் விபரீதங்களை தவிர்க்க அவர்கள் உடனே களத்தில் இறங்குவது நல்லது


இல்லையானால் வரலாறு காணாத கொந்தளிப்பினை அவர்களுக்கு தமிழ்கம் காட்டும்


நிலமை அப்படித்தான் சென்றுகொண்டிருக்கின்றது


முணுமுணுத்த மக்கள் களத்தில் இறங்கி கொண்டிருக்கின்றார்கள்..



No comments:

Post a Comment