Thursday, February 23, 2017

மோடி முதல் குஷ்பு வரை....


என்னை கழுதை என விமர்சிக்கின்றார்கள் , ஆனால் நான் கழுதையாக அல்லும் பகலும் உழைப்பேன்: மோடி


யாருக்கு மிஸ்டர் மோடி? ஜக்கி போன்ற சாமியார்களுக்கா?






நிதி அமைச்சரானார் ஜெயகுமார்


கூவத்தூர் கொண்டாட்டத்தின் போது அப்போதைய மீன்வளதுறை அமைச்சரான இவர்தான் ரிசார்ட்டின் மீன் "நிதி"யினை ஏற்றிருந்தார் என செய்திகள் சொன்னது


மீனுக்கு "நிதி" கொடுத்தவரை "நிதி "அமைச்சராகவே நியமித்துவிட்டார்கள்.




அவ்வளவு சுவையான மீன்களை கொடுத்திருப்பாரோ???


இப்பொழுது எமக்கு ஒரு சந்தேகம்


முன்பு மீன்வளதுறை அமைச்சராக இருந்தார் கட்சிக்காரர்களுக்கு மீனாக கொடுத்தார்


இப்பொழுது நிதியமைச்சராக இருக்கின்றார், அப்படியானால் இனி..


சே.. சே.. கண்டதையும் யோசிக்க கூடாது










கூடங்குளத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தம்


உலகின் எல்லா அணுவுலைகளும் வருடத்தில் 10 நாள் நிறுத்தபட்டால், இந்த கூடன்குள அணுவுலை வருடத்தில் 10 நாள் மட்டும் இயங்குகின்றது


இப்படி அணைத்து போட்டு விளையாட அது ஒன்றும் சமையலறை அடுப்பு அல்ல, அது அணுவுலை , ஓழுங்காக இயங்கும் பட்சத்தில் இப்படி எல்லாம் அடிக்கடி நிறுத்தமுடியாது என்பது அணு அறிவியல்





ஆக கைவிடபட்ட கட்டிடங்களில் சிலர் பாய்விரித்து சரக்கடித்து , வாயில் துண்டு பீடியுடன் சீட்டாடுவது போல அங்கு என்னவோ ஆடிகொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை.

அப்பல்லோ மருத்துவமனை நிகழ்வு மட்டுமல்ல, இந்த கூடன்குள அணுவுலையும் மகா மர்மமானது

இன்னும் என்னென்ன மர்மங்கள் தமிழகத்தில் இருக்கின்றதோ, மிக மிக மர்மமான மாநிலமாக தமிழகம் மாறிகொண்டிருகின்றது





 மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவு, குஷ்பூ பிரச்சாரம் செய்தும் வெற்றி கிட்டவில்லை


பிரபலமானவர்களுக்கு சொந்த ஊரில் மரியாதை இருக்காது என்பதை பரமன் இயேசுகிறிஸ்து அன்றே சொல்லியிருக்கின்றார்.


ஆக குஷ்பூ வருத்தபட அவசியமே இல்லை..








No comments:

Post a Comment