Friday, February 17, 2017

கிளைமேக்ஸை நோக்கி பரபரப்பு நகர்கின்றது...

நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்


கிளைமேக்ஸை நோக்கி பரபரப்பு நகர்கின்றது, பழனிச்சாமி கோஷ்டி ஒன்றும் பெரும் பலத்தில் இல்லை, 8 பேர் வோட்டை மாற்றினால் தீர்ந்தது விஷயம்


அதாவது அமைச்சரவை அறிவிக்கபட்ட நிலையில் அதிருப்தி எம் எல் ஏக்கள் சிலர் நிச்சயம் இருப்பார்கள், கொடுப்பதை வாங்கிவிட்டு பட்டை நாமம் சாத்தலாம் எனும் திட்டம் சிலருக்குள் ஓடிகொண்டிருக்கும்




ரிசார்ட் எம் எல் ஏக்களை முழுமையாக நம்ப முடியாது, அங்கிருந்தே தப்பியவர்கள் மத்தியில் தப்ப முயற்சித்துகொண்டு முடியாமல் அமைதி காப்பவர்கள் எத்தனையோ தெரியாது


இன்னும் அவர்கள் சுதந்திரமாகவில்லை என்பது இன்னொரு விஷயம்.


இது பழனிச்சாமி கோஷ்டிக்கும் தெரியாததல்ல, இன்னும் காங்கிரஸ் 8 எம் எல் ஏக்களின் நிலை தெரியாது, நம்புங்கள் அப்படி 8 பேர் உண்டு, நாம் தான் தேர்ந்தெடுத்தோம்


அவர்கள் என்ன நிலைப்பாடு என தெரியவில்லை, திருநாவுக்கரசர் 8 வோட்டையும் அவரே போட ரெடி, ஆனால் முடியாதல்லவா?. இன்னும் குழப்பம் நிறைந்த கட்சி அது


இது போக முஸ்லீம் லீக் வோட்டும் உண்டு


திமுகவின் எம் ஏல் ஏக்களை வளைக்கும் வைபமும் நடக்கலாம், ஆனால் திமுக ஒதுங்கிகொள்வதாக அறிவித்துவிட்டது


8 எம் எல் ஏக்கள் எதிர்கொடி தூக்கினால் பழனிச்சாமிக்கு பட்டைதான் அல்லது சிலர் வாக்களிக்க வராமல் போனாலும் அதே சிக்கல்


அதே நேரம் பெரும்பாலன எம் எல் ஏக்கள் வன்முறையில் இறங்கிவிட்டாலும் அவ்வளவுதான், ஆட்சி காலி


பெஞ்சில் அடித்து சத்தியம் செய்தாலும் போதும், உரக்க கத்தி ஒரு நாடகம் ஆடினாலும் போதும், 356 எனும் கத்தி இறங்கிவிடும்.


என்ன இருந்தாலும் ஏதும் பெரும் சிக்னல் கிடைக்காமல் ஆளுநர் பழனிச்சாமியினை அழைத்திருக்கமாட்டார் என்பது அரசியல் புரிந்தோருக்கு புரியும்.


நாளை சனிக்கிழமை, அரசியல் சனி யாரை பிடிக்கபோகின்றார் என தெரியாது.


ஆனால் தமிழகத்தை அவர் பிடித்து வெகுகாலம் ஆகின்றது என்பது மட்டும் உண்மை



No comments:

Post a Comment