Sunday, February 19, 2017

திமுக போராட்ட வரலாறு என்ன?





சமீபத்திய சட்டமன்ற நிகழ்வுகளை தொடர்ந்து, ஒருவித கட்டுகதை நிலவுகின்றது, அதனை விட பெரும் புரளி இருக்கமுடியாது


அதாவது தேர்தல் நடத்தி ஆட்சியினை கைபற்றவே திமுக சட்டசபையில் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தது என்ற கருத்து சில விஷமிகளால் பரப்பபடுகின்றது, வைகோ போன்ற காமெடியன்களும் , கூவத்தூர் கூகைகளும் அதில் முக்கியமானவர்கள்.


திமுக வரலாறு என்ன?





அது எங்கெல்லாம் போராட வேண்டிய தேவை இருந்ததோ, அங்கெல்லாம் போராடியது

கல்லகுடி, இந்தி எதிர்ப்பு , இடஒதுக்கீடு என போராடவேண்டிய காரியங்களுக்கு அது அன்றிலிருந்தே போராடியது.

ஆட்சிக்கு வந்தாலும் அது ஆட்சியினை காப்பாற்ற அநியாயத்தினை வரவேற்றதாகவோ, அக்கிரமங்களை ஏற்றுகொண்டதாகவோ ஒரு இடத்தில் காட்டமுடியுமா?

மிசா கொடுமைகளை அது அப்படித்தான் எதிர்கொண்டது, ஆட்சியினை இழக்க்க அது அஞ்சவே இல்லை, இந்திராவினை மிக தைரியமாக எதிர்கொண்டது

அன்றைய அறிமுக கட்சி அதிமுக எப்படி மிசாவினை எதிர்கொண்டது என்பது யாருக்காவது தெரியுமா? வெளியில் வந்தால்தானே எதிர்கொள்ள?

ஆனால் திமுக ஆட்சி இழந்தது

அதன் பின் எதிர்கட்சியான திமுக எல்லா நிலையிலும் நியாயமான காரணங்களுக்காக தன் எதிர்ப்பினை பதிவுசெய்துகொண்டே இருந்தது, திருச்செந்தூர் வைரவேல் உட்பட‌

அமைதிபடை அனுப்பாதே என சொல்லி போராடிய கட்சி திமுக, ராஜிவோடு சேர்ந்து அப்படையினை அனுப்பிய கட்சி அதிமுக‌

அகில இந்திய அளவில் ஈழமக்களுக்கு ஆதரவு திரட்டியது திமுக, நான் ஒருவன் ஆதரவளித்தால் போதாதா என புலிகளை திசை திருப்பியது அதிமுக‌

ராஜிவ் கொலையோடு திமுக ஈழவிவகாரத்தில் இருந்து ஒதுங்கிகொண்டது, அதுதான் செய்யவேண்டிய விஷயம்.

காரணமின்றி திமுக ஆட்சி பின் கலைக்கபட்டாலும் கூட, அது மக்கள் மன்றம் முன்பு சென்றதே அன்றி, தன் ஆட்சியினை காத்துகொள்ள டெல்லி முன் மண்டியிட்டு நிற்கவில்லை

திமுகவின் நியாயமான எதிர்ப்பில்தான் ஜெயா மீது சொத்துகுவிப்பு வழக்கு தொடரபட்டு இன்று நெடிய போராட்டத்தில் வெற்றியும் கிடைத்திருக்கின்றது

ஆக என்றுமே பதவிக்கும் , ஆட்சிக்கும் ஆசைபட்டு போராட்டங்களை நடத்தியது இல்லை திமுக, அதன் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது

அந்த வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் இன்றைய சசிகலா அதிமுக எம் எல் ஏக்களை சிறைவைத்து கொண்டுவந்து, அதுவும் ரகசிய வாக்கெடுப்பு கூடாது என நியாயமின்றி சொன்னபொழுதுதான் சட்டசபையில் நியாத்திற்காக போராடியது திமுக‌

அன்று ஜாணகி அணிக்கி எதிராக அநியாயமாக‌ ஜெயா அணி போராடியது நியாயம் என்றால், இன்று நியாயமான காரியங்களுக்காக திமுக போராடியது எப்படி அதர்மமாகும்

தமிழக போராட்ட களங்களை எடுங்கள், மக்களுக்காக ஒரு போராட்டத்தை அதிமுக நடத்தியிருக்குமா? ஒன்று? உருப்படியாக ஒன்றே ஒன்று

ஆட்சி இழந்தால் கொடநாட்டில் முடங்குவதும் பின் எப்படியாவது ஆட்சியினை கைபற்றி அறிக்கைவிடுவதுமே அவர்கள் ஸ்டைல்

என்று நியாயமான காரியங்களுக்காக அதிமுக போராடியது?

அவர்கள் போராட்டம் எல்லாம் எப்பொழுது நடந்தது? ஜெயாவிற்கு ஒன்று என்றால் நடந்தது, அவர் சிறையில் அடைக்கபட்டபொழுது நடந்தது

மற்றபடி என்று போராடினார்கள்?

ஆக நியாயத்திற்கான போராட்டம் என்றால் என்னவென்று தெரியாத அந்த கூகை கூட்டம், நியாயமனா காரியங்களுக்காக போராடும் திமுகவினை பார்த்து இல்லாத குற்றச்சாட்டுக்களை கூறுவதை எப்படி தமிழகம் ஏற்கும்?

அவர்கள் அறிந்தது அவ்வளவுதான் என சொல்லிவிட்டு தமிழகம் நகர்ந்துவிடும்.

கொஞ்சமும் வரலாறு தெரியாத அந்த ஜீவன்களை கொஞ்சம் பரிதாபத்தோடுதான் நோக்க வேண்டி இருக்கின்றது..




 

 



 

No comments:

Post a Comment