Sunday, February 19, 2017

உலகம் தமிழக அரசியலை கவனிக்கின்றது...





உலகம் எப்படி தமிழக அரசியலை கவனித்து வைத்திருக்கின்றது என்பதற்கு இலங்கை முன்னாள் தளபதி பொன்சேகா சொன்னதே சாட்சி


அப்படித்தான் "தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள்" என முன்பே சொல்லியிருந்தார், இப்போதைய நிகழ்வுகள் அதனை நிரூபித்திகொண்டே இருக்கின்றன‌


அடிமைகளின் அழிச்சாட்டிய அரசியலை பார்த்தபின் உலகம் அதனை ஒப்புகொண்டு சிரிக்கின்றது, ஆனால் அது சீரியசாக பார்க்கும் விஷயம் ஒன்று நடக்கின்றது





அதாகபட்டது அதிமுகவில் சசிகலா கும்பல் போலவே வடகொரியா நாட்டிற்கு பிடித்த்த துன்பம் அதிபர் கிம், இங்காவது தேர்தலில் மாற்றலாம், அங்கு தேர்தல் எல்லாம் வாய்ப்பே இல்லை

ஆனால் தேர்தலில் வாய்ப்பிருந்தும் தமிழகம் ஏன் அடிமையாய் இருக்கின்றது என வடகொரியர்கள் தமிழர்களை பார்த்துதான் ஆறுதல் அடைகின்றார்களாம், பார்த்தீர்களா நம்மால் வடகொரிய எனும் அடிமை மக்களுக்குத்தான் எவ்வளவு ஆறுதல்?

சரி வடகொரியாவிற்கு என்ன?

ஒன்றுமில்லை, முன்பு ராக்கெட் அணுகுண்டு என மிரட்டி சில நாடுகளிடம் பெறுவதை பெற்றுகொண்டிருந்த வடகொரிய அதிபருக்கு டிரம்ப் வடிவில் சிக்கல் வந்திருக்கின்றது

உண்மையில் டிரம்புடன் மோத சீனா அஞ்சுகின்றது, வடகொரியாவின் உயிர்நாடியான நிலக்கரி வியாபாரத்தை சீனா நிறுத்தியே விட்டது, இது டிரம்பிற்கு சீனா ஒதுங்குவதை காட்டுகின்றது

இப்படி பல நாடுகள் ஒதுங்க, தனி ஆளானா வடகொரியா சீறிகொண்டிருக்கும் பொழுதுதான், அந்த அதிபர் குடும்பத்தின் நபர், அதாவது அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரன் மலேசியாவில் கொல்லபட்டிருக்கின்றார்

இது அவரை அவர் சகோதருக்கு எதிராக திருப்பிவிட உளவுதுறைகளின் தோல்வியில் நிகழ்ந்த கொலையா? அல்லது வடகொரிய அதிபரே விளையாடினாரா? என ஏகபட்ட கேள்விகள்

இவர் ஏன் செத்தார்?, எதற்காக கொல்லபட்டார்? அதுவும் தைவான் செல்லும் வழியில் மலேசியாவில் கொல்லபட்டது ஏன்? என ஏகபட்ட கேள்விகள்

உடனே உடலை ஒப்படையுங்கள் என வடகொரியா சீறுகின்றது,

இது எங்கள் நாட்டில் நிகழ்ந்த மரணம், முழு போர்ஸ்ட்மாட்டமும் முடிந்து , சாவுக்கான அறிக்கை தயாரிக்கபட்ட பின்னரே அனுப்பமுடியும் என மலேசியா பதிலளித்திருக்கின்றது

எங்கள் நம்பகதன்மையினை உலகிற்கு சொல்லவேண்டும், எங்கள் நாட்டில் என்ன நடந்தாலும் அதனை முழுக்க விசாரித்து உலகிற்கு உண்மையினை சொல்லும் கடப்பாடு எமக்கு உண்டு, எம் நற்பெயர் எமக்கு முக்கியம் என்கின்றது மலேசியா.

ஏற்கனவே வடகொரியா மீது கோபத்தில் இருக்கும் உலகம், மலேசியாவிற்கே ஆதரவளிக்கின்றது, அதனிடம் நியாமும் இருக்கின்றது

வடகொரியா கோபத்தின் உச்சியில் இருக்கின்றது

இனி என்ன செய்யும்?

அந்த ஒரே ஒரு அரைகுறை ராக்கெட்டை மலேசியாவினை நோக்கி நிறுத்தி பயமுறுத்துமோ?

செய்யாது, காரணம் அருகிலிருக்கும் நாடுகளை கூட அவர்களின் ராக்கெட் சென்று தாக்குமா என்பதே பெரும் சந்தேகம்.

அதனால் அது ஏதாவது அதன்போக்கிலே சொல்லிகொண்டே இருக்கும்..




 

 



 

No comments:

Post a Comment