Sunday, February 26, 2017

அரசியலில் எல்லாம் சாத்தியம்....




சில மர்ம காரியங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன, சில விஷயங்கள் புகைகின்றன, இந்த புகையினை அப்படியே முகர்ந்து பார்த்தால் சில விஷயங்கள் புரியலாம்


தீபக் என்பவர் கொந்தளிக்கின்றார், ஆனால் தீபா அவரை சந்தேகமாக பார்க்கின்றார்


களத்தில் நடராஜன் பகிரங்கமாக குதித்தபின் இன்னும் களம் வித்தியாசமாகின்றது


பழனிச்சாமி ஒரு மாதிரி முணுமுணுக்கின்றார், அவருக்கு சிக்கல் என சில தகவல்கள் வருமாறு பார்த்துகொள்ளபடுகின்றன, அதே நேரம் தினகரன் எல்லோரும் கட்சிக்கு வரவேண்டும் என அறிவிப்பு செய்கின்றார்


சசிகலா புஷ்பா போன்றோர் இன்னும் ஒதுங்கியே இருப்பதும் கவனிக்கதக்கது


தினகரன் அழைப்பு விடுத்த இரு நாட்களில் பன்னீரின் வசனங்கள் மாறுகின்றது, ஒரு அதிரடியான வசனங்களும் இல்லை. ஏதோ சொல்லவந்தவர் கூட தடுமாறி நிறுத்திகொண்டார்


தீபா கட்சி என அறிவித்தபின் அது இன்னும் சூடுபிடிக்கின்றது,


பன்னீரின் பேச்சுக்கள் இன்னும் மாறுகின்றதை கவனிக்கலாம்.


ஜெயாபடம் தொடர்பாக ஸ்டாலினை கண்டிக்கின்றார், அதிமுகவினை ஸ்டாலினால் அழிக்கமுடியாது என்கின்றார், அதாவது சசிகலா, தினகரன் சொன்னதையே பன்னீரும் சொல்கின்றார்


அதாவது  பன்னீர் அவர்களோடு நெருங்குகின்றார்


வியூகங்கள் எங்கோ நன்றாக வகுக்கபடுகின்றன, மறுபடியும் பன்னீரை முதல்வராக்கி கட்சியினை வலுவாக்கும் முயற்சிகள் நடப்பது புரிந்துகொள்ள முடிகின்றது


பன்னீர் விரைவில் அங்கு சென்று சரண்டராகலாம், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன‌


அரசியலில் எல்லாம் சாத்தியம்....










கிரிகெட்

ஸ்டீவ் கீபே சுழலில் இந்திய அணி சிக்கி படுதோல்வி

இந்த கீபேயின் பயிற்சியாளர் ராம் என்பவர் தமிழராம், ஆக ஒரு தமிழனின் மறைமுக உழைப்பில் இந்திய அணி வீழ்த்தபட்டிருக்கின்றது

அப்படி இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் கொம்பினை சீவிய தமிழர் ஒருவேளை அங்கிள் சைமனின் கட்சிக்காரராக இருப்பாரோ?




 

 



 

No comments:

Post a Comment