Tuesday, February 21, 2017

குடும்ப அரசியல் ...

எம்ஜிஆர் இருக்கும் வரை அதிமுக குடும்ப கட்சி அல்ல, அக்காலம் வரை திமுகவும் குடும்பகட்சி அல்ல, இளம்வயதிலே கட்சிபணிக்கு வந்த முரசொலிமாறன் மட்டுமே கலைஞர் அருகில் இருந்தார்.


அதுவும் எம்ஜிஆரின் பிரிவிற்கு பின்னரே யாரையும் நம்பமுடியா கலைஞர் மாறனை நம்பினார். மாறனும் இறுதிவரை கலைஞருக்கு கட்சிக்காரனாக‌ தன் விசுவாசத்தை காட்டினார்.


குடும்ப கட்சி கலாச்சாரத்தை முதலில் தொடங்கியது ஜெயாவின் அதிமுக.


எம்ஜிஆரின் விசுவாசிகளை ஜெயா விரட்ட, சசிகலாவோ ஜெயாவின் விசுவாசிகளை விரட்டிவிட்டு தன் குடும்பத்தாரை கொண்டுவந்தார்


நடராஜன், திவாகரன் என முதல் அணி வந்தது, பாஸ்கரன், தினகரன்,சுதாகரன், இளவரசி என இரண்டாம் அணி வந்தது. வெங்கடேஷ், சிவகுமார் என மூன்றாம் அணி, விவேக் தலமையில் நான்காம் அணி வந்தது


இடையில் ராவணன் போன்ற கெஸ்ட் பிளேயர்களும் உண்டு.


இப்படி ஒரு பெரும் குடும்பத்திடமே தன் கட்சியினை ஒப்படைத்துவிட்ட ஜெயலலிதாதான், கலைஞர் குடும்ப அரசியல் செய்கின்றார் என சொல்லிகொண்டிருந்தார்


அவ்வளவு பரிதாபத்திற்குரியவர் ஜெயலலிதா, அதனை விட பரிதாபத்திற்குரியது அதனை நம்பிய தமிழகம்.


கலைஞரோ வைகோவின் புலிமிரட்டலால் அவரை விரட்டிய பின்பே ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுத்தார், ஸ்டாலினுக்கு பொறுப்பு வந்தாலும் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன்,பொன்முடி போன்றோருக்கும் கட்சி அதிகாரத்தில் ஒரு குறையுமில்லை, அது இன்றுவரை உண்டு


வைகோ செய்த குழப்பத்தில் அழகிரி, கனிமொழி போன்றோர் உள்ளே வந்தார்கள் எனினும் அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைத்தார் கலைஞர்


இன்று மாறன் பிரதர்ஸ், அழகிரி, கனிமொழி என அக்கட்சியில் ஏதும் குழப்பம் இருக்கின்றதா? வராது. காரணம் குடும்ப அரசியல் எனும் அடையாளத்தினை அது விரும்பவில்லை


எல்லா கட்சியிலும் சிக்கல் உண்டு, எல்லா கட்சியும் அரசியல் மயமானது, யாரையும் நம்பமுடியாது. ராகுல், அகிலேஷ், அன்புமணி, குமாரசாமி கவுடா என இந்தியா முழுக்க நிலை அப்படித்தான்


இந்தியா என்ன இந்தியா? கென்னடி குடும்பம், புஷ் மகன்,காஸ்ட்ரோ தம்பி என உலகம் முழுக்க அப்படித்தான், அரசியல் அம்மாதிரியானது


ஆனால் ஒருவரைத்தான் அனுமதிப்பார்கள், இல்லாவிட்டால் மகா சிக்கலாகிவிடும்


குடும்பத்தில் எல்லோரையும் உள்ளே விட்டுவிட்டால் அது பத்ம வியூகத்தில் நுழைவது போன்றது, உள்ளே நுழைவது எளிது ஆனால் உடைத்து வெளிவருவது மகா சிரமம்


கலைஞர் அந்த ராஜதந்திரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார், குடும்பத்தாரை மிக அழகாக வெளியேற்றிவிட்டு ஸ்டாலினை மட்டும் தலைவராக்கி வைத்துவிட்டார்.


அதிமுக நிலை என்ன? ஜெயா ஒரு முகமூடி பொம்மை விட்டுவிடலாம், தன் இறுதி நிமிடங்களை கூட தனிமையில் கழிக்கும் அளவிற்கு அவர் நிலை இருந்திருக்கின்றது


சசிகலா குடும்பம்தான் கட்சி மேலிடம். அக்குடும்பத்தில் இன்று எல்லோரும் கட்சிக்குள்தான் இருக்கின்றார்கள், கிட்டதட்ட 25 பெயர்கள் அடிபடுகின்றன‌


எந்த கட்சியும் துணைபொதுசெயலாளர் என ஒரு அல்லக்கையினைதான் நிறுத்தும், நாங்கள் சமத்துவமானவர்கள் என உலகிற்கு சொல்ல‌


ஆனால் அதிமுக துணைபொதுசெயலாளர் தினகரன் என்றவுடனே அரசியல் ஆட்டம் புரிகின்றது


திவாகரன் ஆளுநரை சந்திக்க செல்கின்றார், வெங்கடேஷ் என்பவரும், சிவகுமார் என்பவரும் தனி தனி ஆலோசனைகளில் இருக்கின்றார்கள்


அக்கட்சி மக்கள் வெறுப்பினை சம்பாதித்திருக்கும் இந்நிலையில் சசிகலா பெரும் சூழ்நிலை கைதியாக நிறுத்தபட்டிருக்கின்றார்.


பன்னீரை ஆளவைத்துவிட்டு வெகுநிதானமாக் கட்சியினையும் ஆட்சியினையும் கைபற்ற சசிகலாவால் முடிந்திருக்கும், அருமையான வாய்ப்பு இருந்தது


ஆனால் ஏதோ நிர்பந்தம் அவருக்கு இருந்திருக்கின்றது, நீங்கள் இருக்கின்றீர்களா இல்லை உங்களை விரட்டிவிட்டு நாங்கள் இருக்கட்டுமா என்ற அளவிற்கு அவருக்கு நெருக்கடிகள் இருந்திருக்கலாம்


இல்லாவிட்டால் இவ்வளவு அவசரம் தேவையே இல்லை..


குடும்ப கட்சி என்றால் என்ன? குடும்பத்தினை மொத்தமாக கட்சிக்குள் விட்டால் என்னாகும் என்பதை அதிமுக சொல்லிகொண்டிருக்கின்றது,


அது குடும்ப அரசியல் கேட்டினை இன்னும் உலகிற்கு சொல்லும்


ஆனால் திமுக அந்த அடையாளத்தினை துடைத்துவிட்டது


திமுகவினை குடும்ப அரசியல் கட்சி என சொன்ன அதிமுக அந்த குடும்ப அரசியலில் சிக்கி மூழ்க தொடங்கியாயிற்று


கலைஞரை குடும்ப அரசியல் என வசைபாடிய ஜெயாவின் கட்சி குடும்ப அரசியலால் வீழ்ந்துகொண்டிருப்பது காலத்தின் கோலம்


குடும்ப அரசியல் விசித்திரமான கடும் சிக்கல், எளிதாக எல்லாம் தீர்க்கமுடியாது. கட்சி, பாசம், குடும்பம், உறவு என பல சிக்கல்களை தாண்டி முடிவெடுப்பது மகா சிரமம்


அந்த வித்தை கலைஞருக்கு மட்டும் தெரியும், வேறு யாருக்கும் தெரியாது என்பதால் அதிமுகவினை இனி யாரும் எளிதில் காப்பாற்றிவிட முடியாது

No comments:

Post a Comment