Wednesday, February 15, 2017

அம்மா காட்டிய வழியம்மா....





இன்னும் அம்மா காட்டிய வழியில் இயங்க வேண்டும், அம்மா கண்ட கனவினை நிறைவேற்றவேண்டும் என கொஞ்சமும் யோசிக்காமல் அக்கட்சி சொல்லிகொண்டே இருக்கின்றது


பன்னீரோ, பழனிச்சாமியோ கூவத்தூர் கோயிந்தசாமியோ அந்த கோஷத்தை விடவில்லை விடவும் மாட்டார்கள்


உச்சநீதிமன்றம் மிக கடுமையாக ஊழல் வழக்கில் அவர்களை தண்டித்தபின்னும், இறந்த ஒரே காரணத்திற்காக ஜெயா சிறைசெல்லாமல் தப்பித்தபின்னும் இப்படியே சொல்லிகொண்டிருப்பது எப்படி?





கலைஞர் எழுதிகொண்டிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார்

"இன்னும் அம்மா வழி நடப்போம் என்றால் அது ஆம், நாங்கள் ஊழல் வழிக்கு செல்கிறோம் என பகிரங்கமாக சொல்வது அல்லவா?

அம்மா கனவினை தொடர்வோம் என்றால்? இன்னும் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்து குவிக்க கனவு காண்கின்றோம் என அர்த்தம் அல்லவா?

ஆக இவர்கள் அம்மையாரின் வழியில் ஊழலும், கொள்ளையும் நடத்த திட்டமிட்டு செயல்படுகின்றார்கள், அதனை பகிரங்கமாகவும் சொல்கின்றார்கள்

அம்மையார் காட்டியவழி அதோ பெங்களூர் சிறைக்கு சென்றிருக்கின்றது,

அம்மையாரின் கனவு நொறுக்கபட்டிருக்கின்றது, அது ஆபத்தான கனவு, காண கூடாத கனவு
என்பதை இவர்களுக்கு சொல்வது யார்?

இனியாவது உங்கள் வார்த்தைகளை மாற்ற கூடாதா? தமிழகம் இதனை கேட்டு சிரிப்பாய் சிரிக்கின்றது"




 

 



 

No comments:

Post a Comment