Wednesday, February 15, 2017

பெரும் சாதனை ஒன்றை இந்திய விண்வெளிதுறை செய்திருக்கின்றது




No automatic alt text available.


தமிழக குழப்பங்களை விடுங்கள், இது காமெடி ரகம். சிரிக்கலாம் அவ்வளவுதான்


பெரும் சாதனை ஒன்றை இந்திய விண்வெளிதுறை செய்திருக்கின்றது


104 செயற்கைகோள்களை இந்திய ராக்கெட் விண்வெளியில் நிறுத்தியிருக்கின்றது, பெரும் சாதனை இது





1960களில் அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளியில் சாதித்தபொழுது நாம் நடை கூட பழகவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக நாம் விண்வெளிக்கு செல்லும் பொழுது 1970கள் ஆனது

அவர்கள் ஒலிம்பிக்கில் ஓட துவங்க, நாமோ நடைபழகிகொண்டிருந்தோம்.

சதிஷ் தவானும், அப்துல் கலாமும் கண்ட தோல்விகள் கொஞ்சமல்ல, ஆனால் போராடினார்கள்

மறக்கமுடியாத மாமனிதர்கள் அவர்கள்.

நமக்கொரு செயற்கைகோள் இல்லாமல், பாகிஸ்தானுடன் எல்லாம் (அமெரிக்க உபயம்) நாம் பகிர்ந்துகொண்ட கொடுமையான காலம் இருந்தது.

அயராத உழைப்பினில் முன்னேறினோம், ஆனாலும் கிரையோஜெனிக் போன்ற நுட்பங்கள் கிடைக்காதவாறு அமெரிக்கா செய்த இடைஞ்சல் கொஞ்சமல்ல‌

எப்படியோ நாமே செய்தோம், இன்று பெரும் சாதனையும் படைத்துவிட்டோம்.

ஓரிரு ராக்கெட்டுகளை விண்வெளியில் நிறுத்த தடுமாறிகொண்டிருந்த நாம், இன்று 104 ராக்கெட்டுகளை அசால்டாக நிறுத்தி ராட்சத பலம் பெற்றுவிட்டோம்

வெறும் ராக்கெட் விடுவதில் என்ன இருக்கின்றது? கழிப்பறை இல்லாத தேசத்தில் இது என்ன பெருமை என சில பதர்கள் கேட்கலாம்

அடுத்த யுத்தம் என்பது விண்வெளி பலமின்றி சாத்தியமில்லை, ஒரு நாட்டின் வெற்றி அதன் விண்வெளி பலத்திலேதான் நிர்ணயிக்கபடும் காலம் இது

அதனால்தான் எல்லா நாடுகளும் முண்டு பிடித்து விண்வெளி ஆராய்சிக்கு கொட்டி கொடுக்கின்றன‌

இதோ நாமும் பெரும் இடம் பிடித்துவிட்டோம், இதன் மூலம் விண்வெளியிலும் இந்திய ஆதிக்கம் உண்டு, யுத்தம் செய்யும் பலமும் உண்டு என உலகிற்கு சொல்லிவிட்டோம்

உலகநாடுகள் எல்லாம் மகா ஆச்சரியமாகவும், சில பொறாமையாகவும் பார்த்துகொண்டிருக்கின்றன‌

இந்த தேசத்திற்கு அந்த பெரும் இடத்தை பெற்றுதந்த விஞ்ஞானிகளை வணங்கி வாழ்த்துகின்றோம்

உங்களால் இத்தேசம் பெருமை கொள்கின்றது

வந்தே மாதரம்











 


 

No comments:

Post a Comment