Tuesday, February 21, 2017

அரசியலில் திரை நடிகர்கள்....




இந்த பிறவி அல்ல, இனி ஏழேழு பிறவியிலும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது உலகிற்கே தெரிந்துவிட்டது.


விஜயகாந்த் அரசியல் சூதில் சிக்கி மல்லாக்க கிடக்கின்றார், இனி அவர் எழுந்துவருவது எல்லாம் அலாவுதீன் பூதம் வந்தால்தான் முடிகின்ற காரியம்


அதனால் கமலஹாசனை அரசியலுக்கு இழுத்துவிடுவது என சிலர் தீர்மானம் செய்திருப்பது போல தெரிகின்றது


அதில் மகா முக்கியமான பொறுப்பினை சுப்பிரமணியன் சாமி ஏற்றிருக்கலாமோ என்னமோ


கமல்ஹாசனை மிக சீரியசாக சீண்டி பார்க்கின்றார்.


தமிழகத்தில் முதன் முதலாக ஒரு ஆச்சரியம் நிகழ்ந்திருக்கின்றது, அந்த அண்ணா காலத்திலிருந்து திரையுலகம் முதல்வர்களுக்கு பணிந்து கிடக்கும், அதுவும் ராமசந்திரன் அடக்கியே வைத்திருந்தார்


ஒரு பாடல் கூட அவரை மீறி வெளிவராது எனும் நிலை, திரையுலகம் அவரிடம் அடங்கி கிடந்தது


கலைஞர் புன்னகையிலே அந்த திரையுலகத்தை கட்டுக்குள் வைத்திருந்தார்


ஜெயா எப்படி வைத்திருந்தார் என்பதற்கு விஜய் படங்கள் முதல் சரத்குமாரின் டண்டனக்கா வரை ஏக எடுத்துகாட்டுகள்


திரைப்படம் மூலம் அரசியலுக்கு வந்தவர்கள், அவ்வழியே ஒருவர் தனக்கு போட்டியாக வந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்


அப்படிபட்ட காலங்களில் தமிழக முதல்வர்களுக்கு முதல் வாழ்த்து திரையுலகில் இருந்துதான் வரும், நடிகர் சங்கம் , இயக்குநர் சங்கம், விநியோகிஸ்தர் சங்கம் என வரிசையாக வந்து வாழ்த்துவார்கள்


முதல்முறையாக பன்னீர் செல்வத்திற்கோ , பழனிச்சாமிக்கோ திரையுலகில் இருந்து ஒரு வாழ்த்துமில்லை, சசிகலாவினையும் திரைதுறையினர் ஒதுக்கி வைத்தது குறிப்பிடதக்கது


எப்படி இந்த மாற்றம்?


நிச்சயமாக புரியவில்லை, இன்னும் புரியாதது சித்தார்த், சூரியா , கமல் என வரிசைகட்டி அடிக்க்கின்றார்கள்


கொஞ்சம் யோசித்தால் மாநில அரசினை விட பெரும் சக்தி ஒன்று தமிழக திரைதுறையினருக்கு ஆதரவு என்பது மட்டும் தெரிகின்றது, இல்லையென்றால் இப்படி இறங்கமாட்டார்கள்


மக்கள் சக்திக்கு திரைதுறையினர் அஞ்சும் காரியமாக இருக்கலாம்


ஆனாலும் முழுவதுமாக சொல்லமுடியவில்லை


பச்சை தமிழன் பழனிச்சாமி முதல்வராலும் இன்னும் பாரதிராஜா கூட ஆதரிக்காதது ஆச்சரியமாக இருக்கின்றது


ஏன் இப்படி ஆனார்கள்? சசிகலாவின் கரங்கள் சினிமாவில் உண்டு, பாதிக்கபட்ட தயாரிப்பாளர்கள் உண்டு, அப்படி உண்டு, இப்படி உண்டு, என ஏகபட்ட ஹேஸ்யங்கள்


ஆனால் எமக்கு தோன்றுவது ஒன்றே ஒன்றுதான்,


அதாவது அண்ணா முதல் ஜெயா வரை எல்லோருமே சினிமாக்காரர்கள், விஜயகாந்த் வரை சினிமாக்காரர் அதனால் நம்ம தொழிலாளி எனும் மகிழ்ச்சி சினிமாகாரர்களிடம் இருந்திருக்கலாம்


ஜெயா இருந்தவரை அபபடி பெருமைபட்டிருக்கலாம்


அதில் பல சலுகைகளும் கிடைத்திருக்கலாம்..


அடுத்த எம்ஜிஆர், அடுத்த ஜெயா என்ற கனவுகள் இருந்திருக்கலாம்


இன்றோ பன்னீர், பழனிச்சாமி, சசிகலா என சினிமா தொடர்பில்லாதவர்கள் வருவதனால் இவர்களுக்கு கோபம் இருக்கலாம், அதனால் புறக்கணிக்கலாம்


சினிமாவிலிருந்து தமிழக அரசியல் பிரிக்கபடுவதால் ஒருவித வன்மம் இருக்கலாம், சினிமா கட்டுபாடு இல்லா அரசியல் தங்கள் தொழிலினை கட்டுபடுத்தலாம் எனும் அச்சம் இருக்கலாம்.


அதனால் அந்த அரசியலில் சினிமா பிடி தளர்வது சிலருக்கு பிடிக்காமல் சினிமா பிரபலங்களை தூண்டலாம்


எப்படியோ தமிழக அரசியலில் சினிமா பிடி தளர்வது நல்லது, சினிமாவும் அரசியலும் தனி தனியாவது மிக நல்லது


இனி இரண்டும் பிரியட்டும், சினிமா அரசியலை கட்டுபடுத்துவது ஒழியட்டும், நல்ல அரசியல் உருவாகட்டும்


(ஆனால் குஷ்பூ முன்னமே அரசியலுக்கு வந்துவிட்டதால், எம்மை பொறுத்த்தவரைக்கும் அவருக்கு இது பொருந்தாது :) )


சினிமாகாரர்களின் சமீபத்திய முணுமுணுப்பு சாதரணமானது அல்ல, பிண்ணணியில் பெரும் திட்டம் இருக்கலாம்


தமிழக அரசியல் 1967ல் இருந்து தமிழ் சினிமாகாரனுக்கு எனும் குத்தகை முடியும் நேரம் என்பதால் ஒரு முணுமுணுப்பும் கோபமும் வருவதாக தோன்றுகின்றது.


அப்படி உண்மையில் தமிழக நலன் முக்கியம் என்றால் என்றோ சசிகலாவின் பெரும் ஊழலுக்கு ஊற்றுகண்ணான ஜெயலலிதாவினை அடித்து விரட்ட கிளம்பியிருப்பார்கள்


செய்தார்களா? இல்லை


பின் இப்பொழுது மட்டும் ஏன்?


ஊழல்வாதிகளின் ஆட்சி தேவையில்லை என மொத்தமாக கிளம்புகின்றார்களா? இல்லை


முன்பு எத்தனை பிரச்சினைக்கு மொத்தமாய் குதித்தார்கள், இப்பொழுது மன்னார்குடி கும்பலுக்கு எதிராய் மொத்தமாய் கொந்தளித்தால் என்ன? செய்யமாட்டார்கள்


அதே தான் சினிமாகாரன் முதல்வராக இல்லாத கோபம் அவர்களில் நன்றாக தெரிகின்றது..


அதற்காக இனி பழனிச்சாமியோ, தீபாவோ பன்னீரோ, தினகரனோ சசிகலாவோ நடிக்க செல்லவா முடியும்?


இங்கே அவர்கள் நடிக்கும் நடிப்பிற்கு என்ன குறை கண்டார்கள்?


ஒருவேளை தங்களை விட சசிகலாவின் அதிமுகவினர் மிக நன்றாக நடிக்கின்றார்கள் எனும் கோபம் இந்த சினிமாக்காரர்களுக்க்கு இருக்கலாம்..




 

 



 

No comments:

Post a Comment