Thursday, February 16, 2017

வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற போயஸ் விசுவாசிகளுக்கு ஏக சோகம்




Image may contain: one or more people and close-up


 அதிமுக சிக்கலில் கிடப்பதில் யாருக்கெல்லாம் வருத்தமோ இல்லையோ, வைகோ சீமான், நெடுமாறன் போன்ற போயஸ் விசுவாசிகளுக்கு ஏக சோகம்


பெரும் வருத்தம் அவர்களுக்குத்தான்


சீமானவது பன்னீர் வாழ்க என தாளம் மாறுகின்றார், நெடுமாறன் மகா சோகம்,





வைகோ வாயே திறக்கமாட்டாராம்

வைகோவின் காமெடிகளும், இன்று அவர் அரசியல் அனாதை ஆக்கபட்டிருப்பதும் சொல்லி தெரியவேண்டியதில்லை, அவர் பெயரினை சொன்னாலே சிரிப்புத்தான் வரும்

ஆனால் கொஞ்சம் சிந்திக்கலாம்

ஸ்டாலினுக்கு போட்டியாக நான் வந்துவிடுவேன் என்றுதான் கலைஞர் என்னை விரட்டினார் என அடிக்கடி சொல்வார் வைகோ

ஒருவேளை கலைஞர் இவரை விரட்டாமல் இருந்து, ஏதோ ஒரு வழியில் இன்று திமுக இவரிடம் சிக்கி இருந்தால் என்னாயிருக்கும்?

திமுக எனும் பெரும் கட்சியினை, மியூசிய காட்சிபொருளாக மாற்றி இருப்பாரா இல்லையா? நிச்சயம் அதனை சீரழித்து, இல்லாமலே ஆக்கியிருப்பார்,

ஆக இவரை விரட்டியதால் திமுக தப்பியது, அவ்வளவு ஆற்றல் உள்ளவர் இன்று மதிமுகவினை மூன்றாம் கட்சியாக நிறுத்தியிருந்தால் கூட கலைஞரை சந்தேக பார்வை பார்க்கலாம்

கலைஞர் இவரை விரட்டியது மிக மிக சரியான முடிவு என காலம் சொல்லிவிட்டது

4 பேரை வைத்து மேய்க்க தெரியவில்லை, இவருக்கு திமுக தலைவராகும் ஆசை இருந்ததாம், அதில் போட்டியாம், கொடுக்கவில்லை என்பதால் கோபம் வேறாம்

இனி திமுக ஆதரவு இன்றி பஞ்சாயத்து தலைவர் கூட ஆகமுடியாத நிலைக்கு சென்றுவிட்டார் வைகோ.













 


 

No comments:

Post a Comment