Thursday, February 23, 2017

மனிதனால் கிரகங்களை உருவாக்கிவிட முடியுமா?








Image may contain: outdoor and water























இந்த விண்வெளி மிக மிக பிரமாண்டமானது, அதன் எல்லையினை கண்டது கடவுள் மட்டுமே


அங்கு திசை, காலம், நேரம், கடிகாரம், காலண்டர் என எதுவுமில்லை, இவை எல்லாம் பூமியில் மனிதர்களுக்கானது, அங்கு எல்லாம் வேறுமாதிரி அ


பாரத ரிஷிகளும், யோகிகளும் மனதால் ஓரளவு விண்வெளியினை அனுமானித்தனர், அன்றே நவகிரகங்கள், உப கிரகங்கள், நட்சத்திர கூட்டங்களை எல்லாம் கண்டிருந்தனர்


ஆனால் அவர்கள் வந்திருந்த முடிவு, கோடிகணக்கான கிரகங்கள் உலகில் இருந்தாலும் மனிதன் வாழ முடியும் கிரகம் இந்த பூமி மட்டுமே. மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ்ந்தாலும் இந்த மானிட உடலால் அதில் வாழமுடியாது


நிச்சயமாக பூமி தவிர்த் கிரகங்களின் உயிர்கள் உண்டு, மனிதனை விட அபார சக்தி படைத்த உயிர்கள் உண்டு, ஆனால் மனிதனால் அக்கிரகங்களில் வாழமுடியாது


அதற்கு வேறுவித பரிணாமம் வேண்டும், இந்த உடல் இந்த பூமிக்கானது மட்டுமே என் தீர்மானித்திருந்தார்கள், ஏழு உலகம் உண்டெனவும் அதில் பல பரிமாணங்களுடன் உயிர்கள் வாழமுடியும் எனவும் சொல்லியிருந்தார்கள்


மனிதன் வாழ ஒரு பூமி போதாதா? மற்ற கிரகங்கள் எல்லாம் எதற்கு என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இருந்தது. எல்லா மனிதனும் ஒவ்வொரு காரியங்கள்க்காக பூமிக்கு வருவது போல, எல்லா கிரகங்களினாலும் ஒவ்வொரு பலன் உண்டு அது மனித மூளைக்கு புரியாது என்பது அவர்கள் வாதம்


அப்படி ரிஷிகளால் அளக்கபட்ட வானத்தை இபொழுது விஞ்ஞானம் கடந்த 50 ஆண்டுகளாக அளந்துகொண்டிருக்கின்றது


நம் முன்னோர்கள் சொன்ன நவகிரகத்தை வானுக்கு சென்று கண்டு ஆமாம் என்றது, இன்னும் தேடியது


சில வினோத பொருளை கண்டது, வினோத உயிரினங்களையும் கண்டது, பெரும்பான்மையானவை ரகசியம். மகா ரகசியம், விண்வெளி ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் காக்கும் ரகசியம் ஏராளம் உண்டு, பல சர்ச்சைகள் வரும் என்பதால் அவை ஒரு காலமும் வெளிவராது


சில மர்மங்களும் உண்டு, உதாரணம் நிலவுக்கு மனிதன் சென்றானா என்பதே பெரும் சர்ச்சை, அன்று அந்த தொழில்நுட்பத்தை வைத்துகொண்டு சாத்தியமா? என்றால் நிச்சயம் இல்லை, சரி இத்தனை தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் ஏன் அடிக்கடி செல்லவில்லை என்றாலும் பதிலிருக்காது


அன்று மனிதன் காலடி வைத்தது உண்மையென்றால், இன்று நிலவு சுற்றுலா சாத்தியமாயிருக்கவேண்டும் அல்லவா? ஆனால் இல்லை. ஏன் அன்றால் அப்பல்லோ (ஆம்ஸ்ட்ராங் சென்ற கலம்)


அப்பலோ என்றாலே மர்மம், அதுவும் ஒருகாலமும் விளங்கா மர்மம்


ஆனாலும் அடிக்கடி நாசா அறிவிப்புக்களை வெளியிடும், ஒன்று தாங்கள் எவ்வளவு தூரம் ஆராய்சி செய்கின்றோம் எனபதற்காக, இன்னொன்று உலக நாடுகளுக்கு தாங்கள் சொல்வதே விண்வெளி எனும் அரசியலுக்காக‌


அடிக்கடி ஏதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்


அப்படி நேற்று மகா முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றார்கள், அதாவது இன்னொரு சூரியனை கண்டிருக்கின்றார்களாம், அதனை 7 கிரகங்கள் சுற்றுகின்றதாம் , அதில் 3 பூமி போல இருக்கின்றதாம், அதாவது நீர், காற்று, வெப்பம் என மனிதன் வாழகூடிய அளவில் இருக்கின்றதாம்


சரி கண்டுபிடித்தாயிற்று அல்லவா? சென்று பார்த்தால் என்ன என்றால் அது கிட்டதட்ட 40 ஆயிரம் ஓளிஆண்டுகள் தொலைவில் இருக்கின்றதாம், அதாவது ஓளியின் வேகத்தில் 40 ஆயிரம் ஆண்டுகள் பயணிக்கவேண்டுமாம், போக 40 வர 40. ஆக 80 ஆயிரம் ஓளிஆண்டுகள்


நடக்குமா?


இனி அதற்கு ஸ்பெஷல் ராக்கெட் அனுப்புவார்களாம்


அருகில் இருக்கும் நிலாவிற்கு கூட இப்போதிருக்கும் தொழில்நுட்பத்தால் மனிதர்களால் அடிக்கடி செல்லமுடியாது, செவ்வாய் கிரகம் இப்போதைக்கு சாத்தியமே இல்லை , இன்றைய நிலையில் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ரோபோவிற்கு ஹலோ பேசினாலே பதில்கிடைக்க 30 நிமிடம் ஆகும்


நாசாவின் அறிவிப்பு விண்வெளி உலகில் ஒருவித பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது, பூமியினை போன்ற கிரகங்கள் கண்டுபிடிக்கபட்டதில் மகிழ்ச்சி


எப்படி அதனை அடைவோம், எப்படி திரும்புவோம் என்பதெல்லாம் அடுத்த பிரச்சினை, ஒன்றை கண்டடைந்துவிட்டோம் என மகிழ்ச்சி


ஏன்? இத்தனை ஆராய்ச்சி


இந்த பூமியில் தட்டுபாடான கனிம பொருள்கள் வெளிகிரகத்தில் இருந்தால் கொண்டுவரலாம், ஹீலியம் வாயு போன்றவற்றை கொண்டுவரலாம், பூமியினை சுரண்ட வேண்டாம் மாறாக கிரகங்களை சுரண்டலாம்


இன்னொன்று பூமிக்கு சிக்கலென்றால், பூமியொத்த கிரகமென்றால் அபபடியே மானிட அந்த கிரகத்திற்கு பறக்கலாம், அங்கே கோடுபோடலாம், அரசியல் செய்யலாம், இன்னும் ஏராள அழிச்சாட்டியம் செய்யலாம்


இதற்காகத்தான் இவ்வளவு ஆராய்சிகள்


இன்னொரு பூமி கண்டுபிடித்தாகிவிட்டது அங்கு சூரியன் நீர், வெப்பம் எல்லாம் இருக்கின்றது என்கிறது நாசா, அங்கு ஈர்ப்புவிசை எப்படி? நடக்க முடியுமா? சுவாசிக்க முடியுமா? அது குடிநீரா? என அடுத்த ஆராய்ச்சியினை அது தொடருமாம்


தொடரட்டும், அப்படி அங்கு மனிதன் வாழமுடியும் ராக்கெட்டில் ஏறுஙகள் என் சொன்னால் யார் முதலில் நிற்பார்கள்? கை நிறைய காசு இருந்தும் செல்ல இடமில்லாமல் இருக்கும் அந்த 122 எம் எல் ஏக்கள் நிச்சயம் போவார்கள்


தமிழர்களுக்கு இடம் பிடிக்க சின்னம்மா அனுப்பினார்கள் என அழகாக சொல்வார்கள்


நாசா இப்படி அறிவிக்கும், அறிவித்துவிட்டு அதுபோக்கில் இருக்கும், ஆனாலும் ஏன் அறிவிக்கின்றது


நிச்சயம் இன்றுள்ள தொழில்நுட்பத்தில் அடையமுடியாது, நாம் இலக்கினை காட்டிவிடுவோம், என்று சாத்தியமாகின்றதோ அன்று மனிதகுலம் போகட்டும்


மனிதனால் கிரகங்களை உருவாக்கிவிட முடியுமா? முடியாது. இருக்கும் கிரகங்களை புதிதாக அறிந்துகொள்ளவேண்டியதுதான்


நாசா சொல்லிவிட்டது , எங்கே காட்டு என்றால் படத்தினை காட்டுவார்கள், நம்பமுடியாது என்றால் நீயே சென்று பார்த்துகொள் என்பாகள், உலகிற்கும் வேறு வழி இல்லை நம்பித்தான் ஆகவேண்டியிருக்கின்றது


இந்த விண்வெளி சிக்கல், பூமி அழிவு, கிரகங்கள் பற்றி ஏராள விஷயம் உண்டு, ஆனால் ரிஷிகள் சொன்னது ஒன்றே ஒன்றுதான்


"உலகினை படைத்த ஆண்டவனே அதனை காக்கவும், மாற்றி அமைக்கவும் சக்தி உள்ளவன், மனிதன் அவற்றைபற்றி கவலைபடுவதோ கடுமையாக ஆராய்வதோ ஒரு பலனையும் தராது


விண்வெளியில் கோடான கோடி கிரகங்கள், கோள்கள், நட்சத்திரங்கள் சுற்றி திரிகின்றன. ஒன்றின் பாதையில் ஒன்று குறுக்கிடாது, அப்படி குறுக்கிட்டால் விண்வெளி என்றோ நாசமாயிருக்கும், அது அது அதற்கு விதிக்கபட்ட பாதையில் இம்மி பிசகாமல் பயணிக்கின்றது


மனிதன் கோள்களிடமிருந்து கற்றுகொள்ளவேண்டிய விஷயம் இதுவே, மதமோ மொழியோ இனமோ எதுவோ, அவனவன் பாதையில் அவனவன் செல்வானானல் இவ்வுகலமும் அவ்வளவு அமைதியாக இருகும்


ஆம் கோடான கோடி கிரகங்கள் பிரமாண்டமாக சுழன்றாலும் ஒரு சத்தமும் இல்லா பேரமைதி விண்வெளியில் நிலவுகின்றது, அப்படி ஒரு அமைதி அது, பேரமைதி, அது கடவுளின் அமைதி


பூமிக்கு தேவையும் அப்படி ஒரு அமைதி"


விண்வெளியினை ஆராய்வது இருக்கட்டும் இந்த பூமியினையே மானிட குலம் இன்னும் முழுக்க ஆராயவில்லை அதன் விசித்திரங்களை அறியவிலை என்பதுதான் பெரும் விசித்திரம்.




 

No comments:

Post a Comment