Monday, February 20, 2017

சசி கலா : ராம் கோபால் வர்மாவின் புதிய திரைப்படம்

https://youtu.be/g2G0AXZtIbI

 

சசிகலாவின் உண்மை முகத்தை திரைப்படமாக எடுக்க போவதாகவும் அது மக்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் எனவும், (அதில் ஏது அதிர்ச்சி? )


அப்படத்தில், ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்த உண்மையான உறவு என்ன என்பதை பற்றி கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா


இந்த படத்தினை மட்டும் அவர் உள்ளதை உள்ளபடி எடுத்துவிட்டால், சினிமாவால் சீரழிந்த தமிழகம் சினிமாவால் விழிப்பு பெற்ற நிலை வந்துவிடும்




அதில் அப்பல்லோ மர்மமும், கூவத்தூர் கொடுமைகளும், தனபாலின் அழிச்சாட்டியமும் நிச்சயம் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்


காமெடிகளுக்கு பஞ்சமே இல்லை அம்மா சமாதி காட்சிகளை காட்டும் பொழுதெல்லாம் 100% காமெடி உறுதி


அமைச்சர்கள் குனிந்து நிற்கும் காட்சிகள், ஹெலிகாப்டருக்கு வணக்கம் செலுத்தும் காட்சி, அம்மா படகில் சென்றால் இவர்கள் ஆற்றுக்கு அடியில் படுத்து வணக்கம் செலுத்தும் காட்சிகள் 200% காமெடி


அதுவும் ஜெயா சிறையிடபட்டபொழுது அவருக்கு அவர்கட்சியினர் வைத்த பேனர்களும், அவர்கள் செய்த அழிச்சாட்டியங்களும் டிரம்பினை கூட சிரிக்க வைத்துவிடும்


உலகம் முழுக்க படம் சக்கை போடு போடபோவது உறுதி, அதுவும் பெண் அதிபர் பெண் தோழி சர்ச்சையில் சிக்கிய தென்கொரியாவில் மட்டும் 100 நாள் ஓடும்..


நிச்சயமாக இது ஜெயா கதை படம்தான், ஆனால் படத்தின் ரியல் ஹீரோ மற்றும் வில்லன் யாரென்றால் நிச்சயம் கலைஞர் கருணாநிதி


அவரை சொல்லாமல் எப்படி ஜெயாவின் கதையினை சொல்லமுடியும்?


அப்படி ஒரு படத்தினை மட்டும் எடுத்துவிட்டால், ராம் கோபால் வர்மாவிற்கு பெரும் நன்றிகடனை தமிழகம் கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி


அவருக்கு சிலை கூட வைக்கபடும் அளவிற்கு பெரும் நன்றிகடன் அது


மனிதர் உள்ளதை எடுப்பாரா? பார்க்கலாம்..


பல முக்கிய பாத்திரம் வருவதால் படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம்?


"அலிபாபாவும் இரு திருடிகளும்


ஒரு சிறையில் இரு மலர்கள்


இருவர் கள்ளம்", "அவர்கள் அப்படித்தான்"


இப்படி ஏதும் பரப்பரப்பு டைட்டில்களை வைத்தால் இன்னும் பரபரப்பாகும்






No comments:

Post a Comment