Monday, February 20, 2017

குமாரசாமி செய்த குழப்பத்திற்கு தமிழக அரசு ஏன் நஷ்ட ஈடு கேட்க முடியும்?





ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு செலவுக்காக 12.4 கோடியினை கேட்கின்றது கர்நாடக அரசு


ஜெயா சொத்துகுவிப்பு வழக்கில் கைபற்றபட்ட 21 கிலோ தங்கம், ஏகபட்ட வெள்ளி, இன்னும் வைரம், வைடூரிய அட்டிகைகள், 10,500 பட்டு சேலைகள் (அப்படித்தான் செய்திகள் சொன்னது), பல ஆயிரம் செருப்புகள், தங்க வெள்ளி பாத்திரம் என ஏராளம் உண்டு


திருவனந்தபுர பத்மநாபசாமி கோவிலுக்கு முன்பு பெரும் புதையல் போயஸ் கார்டனில்தான் கைபற்றபட்டது, அதுதான் நெடுநாள் சாதனையாக இருந்தது





சமீபத்தில்தான் பத்மநாப சாமி முந்திகொண்டார்..

அவை எல்லாம் என் தாத்தா சொத்து என ஜெயா சொன்னதை சிரித்துகொண்டே முறைத்தது நீதிமன்றம்

இன்றும் அந்த பொருட்கள் கன்னடத்திலே பாதுக்காக்க படுகின்றன, அந்த 10,500 பட்டு சேலைகளையும் செருப்பினையும் விற்றால் கூட இன்று எளிதாக 12.4 கோடி கிடைக்கும்

அதுவும் சின்னம்மா உடுத்திய சேலை, செருப்பு என ஏலம் விட்டால், விசுவாசத்தை காட்ட எத்தனை நூறுகோடி என்றாலும் ஏலம் எடுக்க அமைச்சர்கள் ரெடி

இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் தமிழக அரசிற்கு கன்னடம் ஏன் பில் அனுப்புகின்றதோ தெரியாது.

ஆனால் குமாரசாமி செய்த குழப்பத்திற்கு தமிழக அரசு எங்கு போய் நஷ்ட ஈடு கேட்க முடியும்?

அக்குமாரசாமி மட்டும் குழப்பவில்லையென்றால் இன்று தமிழகம் இந்த கூத்துக்களை கண்டிருக்குமா?

எவ்வளவு பெரிய நஷ்டத்தினை அந்த குமாரசாமி உருவாக்கிவிட்டார்.

அதற்கு கன்னட அரசு எத்தனை ஆயிரம் கோடி கொடுத்தாலும் தகுமா?




 

 



 

No comments:

Post a Comment