Saturday, February 18, 2017

அது சட்டமன்றமா? அல்லது குத்துசண்டை அரங்கமா?

மக்களிடம் இவர் தான் முதலமைச்சர், நாங்கள் எல்லாம் சும்மா, அவருக்காக வாக்களியுங்கள் என சொல்லி தேர்தலில் வாக்கு கேட்டு வருவார்களாம்


மக்களும் அவர் முதல்வராக ஆதரவு என வாக்களிப்பார்களாம், அவரும் முதல்வராவாராம்


ஆனால் அவர் செத்துவிட்டால் உடனே இவர்கள் 233 பேரும் அடுத்த முதல்வரை நாங்கள் தான் தேர்ந்தெடுப்பொம் என அவர்களுக்குள் அடித்துகொள்வார்களாம்




முதல்வரை மக்கள்தானே தேர்ந்தெடுக்க வேண்டும், நீங்கள் எப்படி? என்றால், அப்படியெல்லாம் இல்லை ரிசார்ட்டில் போட்டு அடித்தால் அவர்களாக ஒருவரை ஆதரித்தால் அவர்தான் முதல்வர் என சொல்லிகொள்கின்றார்கள்


பின் என்ன மண்ணாங்கட்டிக்கு மக்கள், பின் எதற்கு மக்களின் வோட்டு என கேட்டால் அது அப்படித்தான் என சொல்லிவிட்டு, சட்டமன்ற கதவுகளை மூடி கும்மாங்குத்து குத்திகொண்டிருக்கின்றார்கள்


அது சட்டமன்றமா? அல்லது குத்துசண்டை அரங்கமா?


பொது தேர்தலில் மக்கள் முதல்வருக்காக வாக்களிக்கவேண்டுமாம், அவர் செத்துவிட்டால் இவர்களாக ஒரு முதல்வரை தேர்ந்தெடுப்பார்களாம்


என்ன விசித்திரமான நாடோ தெரியவில்லை,


சபாநாயகராக சில்வர் ஸ்டோலனோ, மைக் டைசனோ இருந்திருந்தாலொழிய அமைதியான சட்டமன்றம் இன்று சாத்தியமில்லை


எத்தனையோ கூத்துக்களை செய்தவர்கள் சபாநாயகராக மைக் டைசன் அல்லது மல்யுத்த வீராங்கனை சாக்ஷி போன்றோரை நியமித்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்



No comments:

Post a Comment