Wednesday, February 15, 2017

திறடா கதவை, தள்ளுடா உள்ளே





சுப்ரீம் கோர்ட் செவிட்டில் அடித்து சொல்லியிருக்கும் பாயிண்டுகள் இப்படி இருக்கின்றது


* ஒரே நாளில் 10 கம்பெனி தொடங்கியிருக்கின்றார்கள், ஆனால் கம்பெனி ஒரு வியாபாரமும் செய்யவில்லை


*9 00 ஏக்கர் அரசு நிலத்தினை அரசு நிர்ணயிக்கும் விலையினை விட அடிமாட்டு விலைக்கு வாங்கியிருக்கின்றார்கள் என்றால் ஜெயா முதல்வராக செய்திருப்பது என்ன?





*சசிகலா , சுதாகரன், இளவரசி போன்றோர் ஒரு தொழிலும் செய்யவில்லை எனும்பொழுது இவ்வளவு பணம் எப்படி வந்தது?

உண்மை அதுதான், சசிகலா ஜெயா துணியினை துவைத்தார், சுதாகரன் சசிகலா துணியினை துவைத்தார், இளவரசி இருவர் துணியும் துவைத்தார், வேறு என்ன செய்தார்கள்?

ஜெயாவின் மதிய சாப்பாடை தானே செய்ததாக சசிகலவே சொல்லியாயிற்று

*எல்லா கம்பெனிகளும் போயஸ்கார்டன் வீட்டுபெயரில் பதிவு செய்யபட்டு பண பரிவர்த்தனை நடந்திருக்கும் பொழுது , ஜெயா தனக்கு தெரியாது என சொல்வது எப்படி ஏற்றுகொள்ளமுடியும்?

*ஜெயா சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்திருக்கின்றார், அதனை வெள்ளையாக்கும் பணியினை இவர்கள் கம்பெனி செய்திருக்கின்றது, மற்றபடி இவர்கள் ஒரு வியாபாரமும் செய்யவில்லை, ஒரு பைசா சம்பாதிக்கவும் இல்லை

*இவர்கள் மூவரும் ஜெயாவின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டிருப்பது நிரூபிக்கபட்டிருக்கின்றது, நட்பால் செயல்படவில்லை என்பதும் தீர்மானமாகின்றது

* தன்னை நம்பிய மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்திருக்கின்றார் ஜெயலலிதா, இது பெரும் நம்பிக்கை துரோகம், அவரது சொத்துமதிப்பு அவர் பதவியிலிந்த காலத்தில் 211% அதிகரித்திருக்கின்றது, இந்த நீதிமன்றம் இதனை மிக கடுமையான குற்றமாக கருதுகின்றது

# அதாவது வேலையே செய்யாமல், உருப்படியாக ஒரு கம்பெனி கூட நடத்தாமல் எப்படி உங்களுக்கு இவ்வளவு சொத்து வந்தது??

சொல்ல முடியவில்லை அல்லவா?

திறடா கதவை, தள்ளுடா உள்ளே என சொல்லியிருக்கின்றது

கலைஞர் மீது சர்க்காரியா கமிஷன் கேட்டபொழுது அவருக்கு சொல்ல பதில் இருந்தது

"மார்டன் தியேட்டர் சுந்தரம் காலத்திலே 1000 ரூபாய் வாங்கிய வசனகர்த்தா நான், அன்றே கார் வைத்திருந்த வெகு சில நபர்களில் நானும் ஒருவன், கலைவாணர் எனக்கு கொடுத்திருந்தார்

சென்னையில் என் வீட்டை தவிர என்ன கண்டீர்கள்? நான் ஊழல் செய்தேன் என்றால் இதோ நாட்டுகோட்டை செட்டியார்களிடம் நான் வட்டிக்கு வாங்கியிருக்கும் கடனை பாருங்கள்

மேகலா பிக்சர்ஸ் நஷ்டம் இது, நீங்களா கொடுப்பீர்கள்? நான் தானே கட்டவேண்டும்,

சொல்லுங்கள் கலைஞர் கடனாளி என ஊரெல்லாம் சொல்லுங்கள்"

அவ்வளவுதான் , சர்க்காரியா தலைதெறிக்க ஓடிவிட்டார், அவரால் என்ன நீருபிக்க முடிந்தது?

உண்மையில் கலைஞரை பலவீனபடுத்த அமைக்கபட்ட கமிஷன் அது, அவர்களால் முடியவில்லை

காரணம் அங்கே நீருபிக்க ஒன்றுமில்லை, அதன் பின் ராமசந்திரனை பிடித்து கட்சியினை பிளந்தது டெல்லி

சர்க்காரியா செய்ய முடியாததை குல்லா ராமசந்திரன் செய்தார்.

அதே டெல்லிதான் இன்று ஜெயா கும்பல் மீது பெரும் தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பியிருக்கின்றது, உயிரோடு இருந்திருந்தால் இதயதெய்வம், சிறை தெய்வமாக அழுது செத்திருக்கும்

ஆக நிரூபிக்கபட்ட ஊழல் எங்கே இருந்திருக்கின்றது என உலகிற்கே தெரிகின்றது

ஆனாலும் இங்கு கலைஞர்தான் குற்றவாளி என சொல்லிகொண்டே இருப்பார்கள்.




 

 



 

No comments:

Post a Comment