Tuesday, February 28, 2017

ஹைட்ரோ கார்பன் திட்டம்...




ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பெரும் சர்ச்சை வெடிக்கின்றது


தமிழகம் என்னவோ பூமியினை தோண்டாத மாநிலம் என்பது போலவும், முதன் முறையாக தோண்டபோகின்றார்கள் என்பது போல பெரும் குரல்கள்


ஆபத்தான திட்டங்களை என்றோ கொண்டுவந்தாகிவிட்டது, கல்பாக்கமும், கூடங்குளமும் ஒரு வகை உறங்கும் எரிமலைகள்.


இந்த செயற்கை எரிமலைகளால் வாழ்விழந்த மீணவர்கள் எண்ணிக்கை என்ன?


நெய்வேலி சுரங்கங்கள் பிரசித்தி பெற்றவை, அது ஒரு விவசாய கிணற்றில் இருந்தேதான் தொடங்கபட்டது என்பதும் வரலாறு, சுற்றுபக்கம் அத்தனை விவசாய நிலங்களையும் அது வளைத்தது, ஆனால் இன்றுவரை இயங்கிகொண்டுதான் இருக்கின்றது.


மீத்தேன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் என சொல்லிகொள்கின்றார்கள், ஏற்கனவே கல்குவாரிகள் எனும் பெயரில், கிரானைட் குவாரிகள் எனும் பெயரில் எத்தனை பெரும் பள்ளங்களை உருவாக்கி, அதில் சுற்றுபுற நிலத்தடி நீர் பாதிக்கபட்டிருக்கின்றது என்பது தமிழகத்தின் பல இடங்களில் தெரிகின்றது


1000 கிணறுகளுக்கான நீரை ஒரு கல்குவாரியின் அதள பாதாள பள்ளம் உறிஞ்சி கொண்டு வீணாக்குகின்றது


அதே டெல்டா பகுதியில் நரிமணம் உட்பட்ட பகுதிகளில் நெடுங்காலமாக எரிவாயு உற்பத்தி செய்யபட்டுகொண்டுதான் இருக்கின்றது


அதே டெல்டாவின் பெரும் பகுதிகளில் இந்த உற்பத்தி நடந்துகொண்டுதான் இருக்கின்றது


ஆக இவை புதிதல்ல‌


ஆனால் புதிதாக அனுமதிக்கபட்டிருக்கும் இடங்கள் மக்களின் வாழ்வாதாரமாக இருந்தால், அவர்களுக்கு சோறுபோடும் இடமாக இருந்தால் அதனை தவிர்க்கலாம்


மத்திய அமைச்சரும், இன்னும் பொறுப்பானவர்களும் அதனைத்தான் சொல்கின்றார்கள்,


டெல்டா பகுதி காக்கபடவேண்டும் சரி, ஆனால் கல்குவாரிகளால், தேரிகாட்டு மணல் குவாரிகளால் பாதிக்கபட்டவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா?


அவற்றினால் வாழ்வாதாரம் கெட்டவர்கள், நிலத்தடி நீரினை குடிநீர் கம்பெனிகளும், குவாரிகளும் உறிஞ்சுவதால் தெருவுக்கு வந்த விவசாயிகள் தமிழகத்தில் ஏராளம் உண்டு


அதுவும் பள்ளிகளுக்கு நீச்சல் குளத்திற்காக பெரும் போர்வெல் அமைத்து அக்கம் பக்கம் விவசாயிகளை நடுரோட்டில் நிறுத்தும் கொடுமைகளும் உண்டு


தொழிற்ச்சாலை எனும் பெயரில் ரசாயாண‌ கழிவு நீரை பூமிக்கடியில் அனுப்பி அக்கம்பக்கம் இருக்கும் விவசாயிகளை எல்லாம் அழிக்கும் கொடுமைகளும் இங்கும் உண்டு


ஆக மீத்தேன் மட்டும் விவசாயிகளை அழிப்பது போலவும், மற்ற இம்மாதிரியான திட்டங்களை கண்டுகொள்ள கூடாது என்பது எப்படி சரி?


மணல் கொள்ளை, கனிம மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கல்குவாரி இன்னபிற தொழிற்ச்சாலை, வியாபார குடிநீர் என எத்தனை காரியங்களால் விவசாயம் அழிகின்றது?


அதனை எல்லாம் பேசாமல் மீத்தேன் மட்டும் அழித்துவிடும் என்றால் , அதனை மட்டும் தடுக்கவேண்டும் என்றால், மற்ற பகுதியில் இருப்பவர்கள் எல்லாம் ஏமாளிகளா?


இன்று நெடுவாசலில் கத்தும் அரசியல்வாதிகளில் ஒருவனாவது இதனை பேசியிருப்பான்?


டெல்டாவில் வாழ்பவன் மட்டும்தான் விவசாயி, மற்ற பகுதியில் வாழ்பவன் எல்லாம் சும்மா வெம்போக்காக நிலத்தினை பார்த்துகொண்டிருக்கின்றானா?


தடுத்தால் எல்லாவற்றையும் தடுக்கவேண்டும் அல்லவா?


செய்கின்றார்களா? அல்லது செய்வார்களா?


மக்களை பாதிக்காத, அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்காத வகையில் சில காரியங்களை செய்யலாம்.


இது பொறுப்பான அதிகாரிகள், மிக பொறுப்பாக செயல்படவேண்டிய விஷயம், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்


இதில் சிலர் மத்திய அரசை எதிர்த்தும், தனி நாடுதான் தீர்வு எனவும் பேசிகொண்டிருக்கின்றான்


இந்தியா எனும் நாட்டில் இருப்பதால் இவ்வளவு தூரமாவது பேசமுடிகின்றது, தனிநாடு என சென்றோமானால் வல்லாதிக்க நாடுகள் அடிக்கும் அடியில் ஈராக் போலவோ, லிபியா போலவோ ஆகிவிடுவோம்


அவர்கள் மீத்தேனை அள்ள வந்தால் நிலமை அவ்வளவு மோசமாக செல்லும், சின்னஞ்சிறு தமிழ்நாடு அந்த வல்லூறுகளுக்கு தப்பமுடியாது, இது உலக யதார்த்தம்


நசுக்கி விடுவார்கள்


ஆக இதற்கெல்லாம் தனிநாடு என்பவனை அந்த மீத்தேன் குழியிலே தள்ளுவது நாட்டிற்கு நலம்


ஏற்கனவே எரிவாயு எடுக்கும் பகுதியில் சில புதிய இடங்களை அனுமதித்திருக்கின்றார்கள், அது மக்களுக்கு இடைஞ்சல் என்றால் அது நிறுத்தபடட்டும்


சரி, இதில் மோடி ஓழிக என்றெல்லாம் கோஷங்கள் வருகின்றன, ஆனால் முதல்வர் பழனிச்சாமி என்பவர் பற்றி சத்தமே இல்லை


அப்படி ஒரு முதல்வர் இருப்பதையே தமிழகம் மறந்துவிட்டது போல‌


என்ன தமிழகமோ, இதுவே கலைஞர் முதல்வர் என்றால் மத்திய அரசின் திட்டத்திற்கு நடவடிக்கைக்கு எல்லாம் அவரே பொறுப்பு, டெல்லிக்கு ஜார்ஜ் புஷ் வர, ராஜபக்சே வர‌ கலைஞர் எப்படி அனுமதிக்கலாம் எனும் அளவிற்கு பொங்குவார்கள்


ஆனால் அவரை தவிர வேறு யாராவது முதல்வர் என்றால் அவ்வளவுதான், பாயினை விரித்து படுத்துகொண்டு மத்திய அரசு ஒழிக என சொல்லிவிட்டு தூங்கிவிடுவார்கள்


நாட்டின் இயக்கத்திற்கு சில காரியங்கள் நிச்சயம் தேவை, ஆனால் அவை மக்களை பாதிக்காதவாறு இருப்பது மிக அவசியம்


போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் என மத்திய அமைச்சர்கள் சொல்வது நல்ல விஷயம்


நல்லது நடக்கட்டும், நாடு செழிக்கட்டும்




 

 



 

No comments:

Post a Comment