Wednesday, February 22, 2017

மிஸ்டர் பண்ருட்டியின் காமெடி பேச்சு...

ரகசிய வாக்கெடுப்பு என்பது கட்சிதாவல் சட்டத்திற்கு எதிரானது : பண்ருட்டி ராமசந்திரன்


அதாவது அன்னார் சொல்லவருவது என்னவென்றால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் உறுப்பினர்கள் எதிர்கட்சிக்கு வாக்களித்துவிடுவார்களாம்


மிஸ்டர் பண்ருட்டி, இது என்ன ஸ்டாலின் மீதா நம்பிக்கை வாக்கெடுப்பு? உங்கள் கட்சிக்கு முதல்வர் மீதுதானே வாக்கெடுப்பு, இதில் எப்படி கட்சிதாவல்?


ஆக அன்னார் ஏதோ பேசவேண்டும் என்பதற்காக பேசியிருக்கின்றார்


எம்ஜிஆர் காலத்து நபர் இவர், ஜெயா சசி இல்லாத அதிமுகவில் உரக்க பேசும் வாய்ப்பு கிடைத்தவுடன் மனிதர் எதனையோ பேசிவிட்டார் பாவம்


ஆனாலும் திமுக, அதிமுக, தேமுதிக, மறுபடியும் அதிமுக என எல்லா கட்சிகளையும் சுற்றிவிட்டு (இடையில் சில கட்சிகளும் உண்டு) எல்லா கட்சி வேட்டியினையும் பீரோவில் அடுக்கிவிட்டு, இன்று கட்சிதாவல் சட்டம் பற்றி எல்லாம் இவர் பேசுகின்றார் அல்லவா?


இதுதான் பெரும் காமெடி...

No comments:

Post a Comment