Tuesday, February 14, 2017

கலைஞர் உத்தமரா? ஜெயா மட்டும் ஊழல் செய்தாரா?

கலைஞர் உத்தமரா? ஜெயா மட்டும் ஊழல் செய்தாரா? அவர்கள் மீது மட்டும் தண்டனையா? என சிலபேர் கிளம்பியிருக்கின்றான்


ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பாருங்கள்


ஜெயா . சிறுதாவூர், ஐதரபாத், கொடநாடு என மாளிகைகளை கட்டினார்.




கொடைக்கானலில் ஜெயாவால் ஒரு ஹோட்டல் கட்டபட்டு பின் சிக்கலானது, ஆக இன்னும் தெரியாத மாளிகைகள் எத்தனையோ???


கலைஞர் மிக பொறுப்ப்பாக அன்று வள்ளுவர் கோட்டம் முதல் பின்னாளில் புதிய சட்டமன்ற கட்டிடத்தையும், அண்ணா நூலகத்தையும் கட்டினார்.


இதில் எது பொது சொத்து? எது தனியார் சொத்து?


சட்டமன்ற கட்டிடம் , அண்ணா நூலகம் இன்றும் அரசின் சொத்து.


ஜெயா கட்டிய அரண்மனைகள் என்ன அரசு சொத்தா? அது இன்று யாருடைய சொத்து?


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பார்கள்.


கலைஞரையும், ஜெயாவினையும் ஒப்பிட இந்த கட்டிடங்கள் போதும்.


யார் ஊழலிலும், சுயநலதிலும் மிகுந்தவர்கள் என்பதும், யார் பொதுநலத்திலும் தமிழக நலத்திலும் அக்கறை உள்ளவர்கள் என்பதும் நன்றாக விளங்கும்.


அப்படி கலைஞர் பொதுநலத்திற்காக கட்டிய சட்டமன்ற கட்டிடத்தையும் தன் சுயநலத்திற்காக தவிர்த்தவர் ஜெயலலிதா


கலைஞரின் அமைச்சர் இருக்கும் துறைக்கு வருமானம் குறைந்தால் அது ஊழல், 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி வராமல் , வெறும் 40 ஆயிரம் கோடி வந்தால், அது ஊழல்


1 லட்சத்து 75 ஆயிரமும் கலைஞர் அபகரித்தார் என ஊளையிடுவது


ஆனால் பாஜக ஆட்சியில் 4 லட்சம் கோடி வரவேண்டிய இடத்தில் 65 ஆயிரம் கோடி வந்தால் அது வருமான இழப்பு என கவலை மட்டும் படுவது.


நிதானமாக யோசித்தால் பல விஷயங்கள் புரியும். ஆனால் யோசிக்கவேண்டும் அல்லவா? செய்யமாட்டார்கள்.


பின் கலைஞர் பெரும் ஊழல்வாதி என சொல்லிகொண்டே இருப்பார்கள், எப்படி? என்றால் சொல்ல தெரியாது....



No comments:

Post a Comment