Wednesday, February 15, 2017

அடுத்த இன்னிங்க்ஸுக்கு தமிழகம் ரெடி..







பெங்களூர் புறப்பட்டார் சசிகலாImage may contain: 2 people, people standing


"அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்





அதுவொரு அழகிய நிலா காலம்,
நினைவினில் தினம் தினம் உலா போகும்

தங்க சுரங்கங்கள் சேர்ந்து சென்னையில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்"










ஜெயா சமாதியில் அடித்து சத்தியம் செய்துவிட்டு கிளம்பினார் சசிகலா


அதனை பார்க்கும் பொழுது சபதத்தில் அடித்தது போல தெரியவில்லை,


மாறாக "என்னை இப்படி உள்ளே தள்ளிவிட்டு நீ மட்டும் நிம்மதியாக உறங்குகின்றாயா?.. விடமாட்டேன்" என்ற கோபத்தில் அடித்தது போல அல்லவா இருந்தது.




ஜெயா சமாதியிலே இந்த அடி அடித்தவர், முன்பு ஜெயா தலையில் இப்படி அடித்து தன் சத்தியத்தினை நிரூபிக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்


பாவம்தான் ஜெயலலிதா, விசுவாசத்திற்காக எவ்வளவு வாங்கினாரோ?


ஆத்தாடி...என்னா அடி..


என்னது இப்பொழுது ராமவரம் தோட்டமா?


எம்ஜிஆர் சிலைக்கும் 2 அடி கிடைக்கட்டும், கேட்டால் சபதம் என சொல்லி சமாளித்துகொள்ளலாம்







ஜெயா அப்பல்லோவில் சேர்க்கபட்ட அன்று 27 சிசிடிவிக்கள் செயலிழக்கபட்டன, ஜெயா ஸ்ட்ரச்சர் சென்ற வழி எல்லாம் ரத்தம்


ஜெயா வீட்டில் வேலைபார்த்த இரு பெண்களை விசாரிக்க வேண்டும் : மனோஜ் பாண்டியன்


ஓஹோ..பல விஷயங்கள் கிளரபடுகின்றன,




அடுத்த இன்னிங்க்ஸுக்கு தமிழகம் ரெடி..






















போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு என்ன நடந்தது, அதற்கடுத்து அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்களிலும் என்ன…





TAMILWIN.COM





 







அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமனம்: சசிகலா அறிவிப்பு


ஒரு குற்றவாளி, அதுவும் பொதுவாழ்க்கைக்கு தடை விதிக்கபட்ட குற்றவாளி தன் கட்சியில் ஒருவரை பதவிக்கு நியமிக்கின்றாராம்


நிச்சயமாக தீர்ப்புபெற்ற பின்பு ஒருவர் பொதுவாழ்வில் எல்லா தார்மீக கடமைகளையும் இழந்துவிடுவார் என்பது இயல்பான விஷயம், இன்னொரு கட்சி என்றால் அப்பொழுதே சசிகலாவினை நீக்கி இருப்பார்கள்




இது என்றுமே ஒரு காமெடி கட்சி அல்லவா? இப்பொழுது உச்சகட்ட காமெடி நடக்கின்றது


குற்றவாளியால் அடையாளம் காட்டபடும் ஒருவன் எப்படிப்பட்டவனாக இருப்பான் என சொல்ல வேண்டியதில்லை


சசிகலா பொதுசெயலாளர் ஆனதிலே பெரும் குழப்பம், அக்குழப்பத்தின் அடுத்த குழப்பமாக இந்த அறிவிப்பு


இதனை காட்டி இன்னும் 20 பேர் பன்னீர் பின்னால் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.






எடப்பாடி பழனிச்சாமி கவர்னரிடம் கொடுத்த ஆதரவு லிஸ்டில் போலி கையெழுத்து


இப்போதுள்ள எம் எல் ஏக்களின் போலி கையெழுத்தென்ன?


இவர்கள் எம்ஜிஆர் , அண்ணா கையெழுத்தினையே சேர்த்திருக்கலாம்




ஆளுநர் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது






 சசிகலா, எடப்பாடி மீது கடத்தல் வழக்கு பதிவு : தப்பி வந்த எம்எல்ஏ புகாரில் போலீசார் நடவடிக்கை


பின்ன எம் எல் ஏவினையே கடத்தியிருக்காங்க சார், எம்புட்டு தைரியம் இருக்கணும்..






இனி தேர்தலில், அதிமுக வேட்பாளர்கள் வாக்கு கேட்டு நிற்பதை கலைஞர் நலமாக இருந்தால் எப்படி கலாய்பார் தெரியுமா?


வோட்டா? உங்களுக்கா? எதற்கு கூவத்தூரில் கூத்தடித்து கூடிவிளையாடவா?





 










No comments:

Post a Comment