Wednesday, February 22, 2017

ஆளாளுக்கு எதனையாவது பிடித்து இழுத்து....






வரலட்சுமி, லீனா மணிமேகலை வரிசையில் இன்று "என் கையினை பிடித்து இழுத்தார்கள்" நிகழ்ச்சியில் இடம்பெறுவது பாடகி சுசித்திரா


அதாவது அம்மணி ஒரு இரவு பார்ட்டிக்கு சென்றதாம், அங்கு தனுஷ், சிம்பு என பலர் இருந்தார்களாம், அங்கு தனுஷ் தலமையில் இரு கும்பல் இவரின் கையினை பிடித்து கும்பலாக இழுத்தார்களாம்


அதுவும் கையில் ரத்தம் கட்டும் அளவிற்கு இறுக்கி பிடித்தார்களாம்..





சிம்புவும் கண்டுகொள்ளவே இல்லையாம், வேடிக்கை பார்த்தாராம்..

இப்படி புலம்பியிருக்கின்றார் பாடகி சுசித்ரா

ஏம்மா சுசித்ரா, அந்த இம்சைகளில் ஏதாவது ஒன்று இருந்தாலே வில்லங்கம், இதில் இரண்டும் இருக்கும் இடத்திற்கு நீ ஏன் சென்றாய், அப்படி நள்ளிரவில் பாட என்ன அவசியம்

அந்த ஆந்தை கூட்டத்தில் குயிலுக்கு என்ன வேலை?

சிம்புவும் ஓடிவந்து தடுக்க இவர் என்ன நயன் தாராவா? எப்படி எதிர்பார்க்கலாம்

என்னதான் எதிரி என்றாலும் திமுக, அதிமுக இடையே ரகசிய இழை மதுவிவகாரத்தில் ஓடுவது போல, பிகர் விஷயத்தில் தனுஷுக்கும் சிம்புவிற்கும் ஓடுவது தெரியாதவரா இந்த பெண்?

அய்யோ பாவம்.

ஆக இன்றைய "என்னை கையை பிடித்து இழுத்தார்கள்" நிகழ்ச்சியில் பாடகி இடம்பெற்றுள்ளார் என்பதை தமிழகம் அறிந்திருக்கின்றது

எது எப்படியோ, இம்மாதிரி சர்ச்சைகளை முன்பு கமலஹாசன் குத்தகைக்கு எடுத்திருந்தார், அந்த ஏரியா அவருக்கானது

தனுஷ் அந்த இடத்தினை அடித்து பிடுங்கிகொண்டிருக்கின்றார், விரைவில் தனுஷ விட‌ கமலஹாசன் எவ்வளவு நல்லவர் தெரியுமா? என அவரை பெரும் உத்தமனாக சித்தரிக்கும் செய்திகள் வரலாம்

அந்த காரியத்தை தனுஷ் செய்துகொண்டிருக்கின்றார்

நாளைய "என்னை கையினை பிடித்து இழுத்தனர்" நிகழ்ச்சியில் யார் கலந்துகொள்வார் என்பது தெரிந்துகொள்ள தமிழகம் காத்திருகின்றது

சட்டசபையில் சபாநாயகர் என் கையினை பிடித்து இழுத்தார்கள் என அழுகின்றார், எதிர்கட்சி தலைவர் சட்டையினை பிடித்து இழுத்தார்கள் என அழுகின்றார்

என்ன மாநிலமோ, ஆளாளுக்கு எதனையாவது பிடித்து இழுத்து சர்ச்சையாக்கிகொண்டே இருக்கின்றனர்.




 




கொசுறு

ஜப்பானில் கர்ப்பிணிகளுக்கு இலவச டாக்ஸி சேவை தொடக்கம் : ஜப்பானிய டாக்ஸிக்காரர்களுக்கு பல நாடுகள் பாராட்டு


இது என்ன பிரமாதம்?


நமது ஆட்டோக்காரர்கள் என்றோ "பிரசவத்திற்கு இலவசம்" என அறிவித்து , ஆட்டோ பின்னால் எழுதியும் வைத்துவிட்டார்கள்.





ஜப்பானியர்களுக்கு வழிகாட்டியவர்கள் நமது ஆட்டோக்காரர்கள்

சல்யூட் தமிழ்நாடு ஆட்டோஸ்...






 



 

No comments:

Post a Comment