Thursday, February 16, 2017

மக்களாட்சியிலும் ஒரு மன்னர் ஆட்சி, மன்னார் குடும்ப ஆட்சி





முன்பெல்லாம் மன்னர்கள் காலத்தில் அம்மன்னர்கள் பக்கத்து நாடுகளில் சென்று கொள்ளையடிக்க வேண்டும், அதாவது வம்பிழுத்து போரில் வென்று, இரக்கமே இன்றி கொள்ளையடித்து தன் மக்களுக்கு கொடுக்க வேண்டும்


இதுதான் வரலாற்றின் எல்லா அரசர்களும் செய்தார்கள், அலெக்ஸாண்டர் இதில் ஒருபடி மேலே சென்று கொள்ளையடிப்பதை தன் சிப்பாய்கள் வைத்துகொள்ளலாம் என ஊக்கபடுத்தினான், அவனின் பெரும் வெற்றிக்கு இந்த தந்திரமும் காரணம்


பலமன்னர்கள் தங்கள் ராஜ்யங்களை பிரித்துகொடுத்தும் தன் பணியாளர்களை ஊக்கபடுத்தினார்கள்.





அதாவது கொள்ளை அடிக்க வழிகோலுபவன் தலைவன், அவன் எப்படிபட்டவன் என்றால் என்ன? நாம் பிழைக்க வழி சொல்கின்றான், போதும். மன்னன் வாழ்க, அவன் குடை வாழ்க, குதிரை வாழ்க, வாழ்க வாழ்க

இக்கொடுமை எல்லாம் முடிந்துதான் நாகரீகமான மக்களாட்சி தோன்றிற்று

ஆனால் தமிழகம் எப்படி திரும்புகின்றது?

ஆட்சி எனும் பொறுப்பு யாரிடம் இருந்தால் என்ன? கொள்ளையடித்து அவர் சிக்கினால்தான் என்ன? நமக்கெல்லாம் அந்த பணம்தானே சிக்கி இருக்கின்றது, நாம் அவரால்தானே வாழுகின்றோம், அதனால அவர் உலகம் காரிதுப்பும் காரியம் செய்தால்தான் என்ன?

நமக்கு அவரே தெய்வம்,அவரும் கொள்ளையடித்தார், நம்மையும் கொள்ளையடிக்க அனுமதித்தார், இன்னும் அடிக்கலாம்

ஆக அவருக்கொன்று என்றால் அழுவோம், அவருக்காய் வாழ்வோம்

அப்படித்தான் கொள்ளை தலைவிக்கும் சுற்றி நின்று அழுகின்றார்கள், கொள்ளைகாரியின் சமாதியில் கதறுகின்றார்கள்

மக்களாட்சி சமூகம் என்றால் கொள்ளைகாரி முடி கூட மிஞ்சியிருக்க கூடாது

ஆக‌ நாகரீகமான மக்களாட்சி முறையினை மறுபடி மன்னர் அல்லது ராணி ஆட்சிக்கு மாற்றிகொண்டிருக்கின்றது தமிழகம்

மக்களாட்சியிலும் ஒரு மன்னர் ஆட்சி, மன்னார் குடும்ப ஆட்சி என்பது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்

ஆனாலும் அக்கால மன்னர்கள் அடுத்த நாட்டினைத்தான் கொள்ளையடித்து தன் நாட்டில் கொட்டினார்கள்

இவர்களோ தன் சொந்த நாட்டை கொள்ளையடித்து தன் கூட்டத்திற்கு கொடுக்கின்றார்கள்

இன்னும் என்னென்ன காட்டுமிராண்டி காலங்களுக்கு எல்லாம் தமிழகம் திரும்ப போகின்றதோ தெரியவில்லை









வடகொரிய அதிபரின் சகோதரன் மர்ம கொலை, வடகொரிய அரசின் செயல் என சந்தேகம்

உலகின் மிக மோசமான நிலையிலுள்ள நாடுகளில் வடகொரியாவும் ஒன்று, மிக கடுமையான சர்வாதிகாரத்தில் அந்நாடு பாதிக்கபட்டுள்ளது, மிக பரிதாபத்திற்குரியவர்கள் அம்மக்கள்

அது என்ன பரிதாம்


அங்காவது அரசு மர்ம கொலை செய்கிறது, இங்கு அரசை இயக்கும் முதலமைச்சரே மர்ம்மாக சாகின்றார், ஒரு செய்தியும் வெளிவரவில்லை

தமிழக நிலை வடகொரியர்களை விட மகா மோசமாயிற்று, ஒருவேளை நம்மை பார்த்து வடகொரியர்கள் ஆறுதலைடைய கூடும்





 

 



 

No comments:

Post a Comment