Sunday, February 19, 2017

பன்னீருக்கு வந்தால் துரோகமா?





இப்பொழுது ஒரு சில அதிமுகவினர் கிளம்பியிருக்கின்றார்கள், மருத்துவர் ராமதாஸ் உட்பட வேறு கட்சியினரும் உண்டு, பன்னீர் செல்வத்தை கண்டிக்கின்றார்களாம்


அதாவது பன்னீர் ஜெயா அடிமையாக இருந்துவிட்டு, சசி அடிமையாக இருமாதம் இருந்துவிட்டு இப்பொழுது குதிக்கவோ, எதிர்க்கவோ என்ன உரிமை இருக்கின்றது என பல கருத்துக்களை சொல்கின்றார்களாம்?


என்ன சொல்லவருகின்றார்கள், பன்னீருக்கு விசுவாசமில்லை, நல்லவர் என்றால் அந்த கால்களின் அடியிலே இருந்திருக்கவேண்டும் ஆக அவர் நம்பதகாதவர்





கொஞ்சம் சிந்தியுங்கள்

கலைஞரால் அரசியலுக்கு இழுக்கபட்டு, அவரால் ஒரு இடம் ஏற்படுத்திகொடுக்கபட்ட ராமசந்திரன் என்ன செய்தார்?

கட்சி ஆட்சிக்கு வரும் வரை, அது பெரும் சக்தி ஆகும் வரை அங்குதான் இருந்தார். தனக்கான பெரும் பதவிகள் கிடைக்கவில்லை என சொல்லித்தான் தனி கட்சிகண்டார்

பன்னீர் செய்தது துரோகம் என்றால் , அக்கட்சியின் நிறுவணர் ராம்சந்திரன் செய்தது என்ன?

பன்னீரை சாடும் முன் அந்த ராமசந்திரனை அல்லவா சாடவேண்டும்?

1972 முதல் 1982 வரை அதிமுகவில் கால்வைக்காத ஜெயலலிதா அடுத்த 5 ஆண்டுகளில் கட்சியினை உடைக்கும்பொழுது அமைதியாக இருந்தவன் எல்லாம், 20 வருடம் கட்சிக்காக உழைத்த பன்னீரை சாடுகின்றார்களாம்

ராமசந்திரன் செய்தால் சரி, ஜெயா செய்தால் சரி ஆனால் பன்னீர் செய்தால் அது தவறா?

ராமசந்திரனுக்கும், ஜெயாவிற்கும் எதிர்ப்பு எண்ணம் வந்தால் அது புரட்சி

பன்னீருக்கு வந்தால் துரோகமா?

என்னதான் நியாயமோ, என்னதான் இவர்கள் கருத்தோ?




 

 



 

No comments:

Post a Comment