Thursday, February 2, 2017

தமிழக தலைவர்கள் வாய்மொழி..

பழைய கள் - புதிய மொந்தையே மத்திய பட்ஜெட்: கி.வீரமணி


இவர் மட்டும் அதர பழைய‌ கள்ளான திராவிட கொள்கை, பகுத்தறிவு என அரசியல் செய்யலாமாம், பிஜேபி அரசு பழைய காங்கிரஸ் பட்ஜெட்டை காப்பிபடித்தால் அது தவறாம்..






சட்டமன்றம் இன்றைக்கு அதிமுகவின் துதிபாடும் மன்றமாக மாறி விட்டது: மு.க.ஸ்டாலின் கண்டனம்


அதிமுக ஆட்சியில் அது அப்படித்தானே இருக்கும், எம்ஜிஆர் காலத்திலிருந்து ஜெயாகாலம் வரை அது பாட்டுமன்றமாகத்தானே இருந்தது


மனிதருக்கு என்னவோ ஆகிவிட்டது போல, திடீரென எதனையோ பார்த்தது போல சொல்லி கொண்டிருக்கின்றார், இது காலம் காலமாக நடக்கும் கச்சேரி என்பது யாருக்கு தெரியாதது?





இதில் இவர் என்ன "இன்றைக்கு" என புதிதாக கண்டுபிடித்துவிட்டார்?





பன்னீர் செல்வம் முதல்வராக தொடர ஆதரவளிப்போம் : திமுக துரைமுருகன்


சசிகலாவிற்கு இது எப்படி இருக்கும் என சொல்லி தெரியவேண்டியதில்லை


இன்னொரு கோணத்தில் ஸ்டாலின் முதல்வர் என்பதை துரைமுருகன் கூட ஏற்றுகொள்ளவில்லை என்பது புரிகின்றது





ஆக ஒரே நேரத்தில் சசிகலாவினையும், ஸ்டாலினையும் கடுப்பேற்றியிருக்கின்றார் துரைமுருகன்.





ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு மத்திய அரசின் நடவடிக்கைதான் காரணம்: விஜயகாந்த் பேட்டி


இனி மாநிலகட்சிகள் அன்னாரை தேடாது, தேசிய கட்சிகள் பக்கம் சாய்வதுதான் அவருக்கு நல்லது என்பது அவர் முடிவு, அதனால் இனி மத்திய அரசினை பாராட்டிகொண்டேதான் இருப்பார்


ஆனாலும் ஜல்லிகட்டு நடக்க தமிழக மக்களின் எழுச்சிதான் காரணம் என்ற உண்மையினை கூட சொல்லமுடியாத அளவிற்கு அவருக்கு என்ன நெருக்கடி?




ஒன்றுமேயில்லை


தேர்தலில் தன்னை மூலையில் தள்ளிய மக்கள் மீது அவருக்கு ஒரு கோபம் இருப்பது சகஜம் தான்.அதனை இன்னும் அவர் மறக்கவில்லை போலும்


மறக்க கூடிய அடியா அது?








No comments:

Post a Comment