Wednesday, August 2, 2017

யூதன் என்றால் சும்மாவா?




No automatic alt text available.அலெக்ஸாண்டர் தொடருக்காக பல புத்தகங்களை புரட்டுகின்றேன், அதில் பைபிளின் பழைய ஏற்பாடும் ஒன்று, அவனை பற்றிய பல குறிப்புகள் அதில் 
உண்டு


பிரிவினை கிறிஸ்தவர்கள் பைபிளில் மக்கபே எனும் புத்தகம் இல்லை, அவர்கள் அப்படித்தான் தேவை இல்லை என்றால் கிறிஸ்துவின் ஆணிகளில் ஒன்றை கூட பிடுங்கிவிடுவார்கள்,





ஆனால் மக்கபே ஆகமம் தான் தானியேல் தீர்க்கதிரிசி சொன்னபடி அலெக்ஸாண்டர் வருகையினையும், அதன் பின் இஸ்ரேலிலும் அரேபியாவிலும் ஏற்படும் பாதிப்பினையும் சொல்கின்றது

இது அவர்கள் பிரச்சினை விட்டுவிடலாம், நமக்கு தேவை அலெக்ஸாண்டர்

மக்கபே ஆகம முதல் வசனம் எப்படி தொடங்குகின்றது "முதலில் மாசிடோனியாவிலும் பின் உலகெங்கும் அதிகாரம் செலுத்தினான் மகா அலெக்ஸாண்டர், அவன் போர் பல செய்து பலமிக்க கோட்டைகளை பிடித்து, அரசர்களை கொன்று, இந்து தேசம் வரை கொள்ளையடித்தான்

பூமி அவன் முன் அஞ்சி ஓடுங்கிற்று..."

இன்னும் ஏராளம் உண்டு, இப்போதைக்கு இந்த வரிகளை கவனியுங்கள், அலெக்ஸாண்டர் கொள்ளையடித்தான்.

ஆம் அலெக்ஸாண்டர் கொள்ளையடித்தான்

ஆனால் அதன் முன்புள்ள பக்கங்களை புரட்டுங்கள், கர்த்தர் எதிரிகளை முறியடித்து இஸ்ரேலை ஜோசுவா என்பவருக்கு புற இனத்தவர்களை விரட்டிவிட்டு கொடுத்தார்.

அதன் பின் எதிரிகளை பிடித்து தாவீதிற்கு கையளித்தார்

சாலமோன் அரசரின் ஆட்சியில் எல்லா அரசர்களும் அவருக்கு பணிந்து பரிசுகளும் காணிக்கையும் அனுப்பினர் , கடவுள் அந்தளவு அவனை ஆசீர்வதித்திருந்தார்

அதாவது அலெக்ஸாண்டர் செய்தால் அதன் பெயர் கொலை, கொள்ளை, ஆனால் தாவீது செய்தால் கர்த்தர் கொடுத்தார்.

அலெக்ஸாண்டர் கப்பம் பெற்றால் அது மிரட்டல், சாலமோன் பெற்றால் அது ஆசீர்வாதம்

எப்படி எல்லாம் வார்த்தைகளை பதமாக பயன்படுத்தியிருக்கின்றார்கள்?

யூதன் என்றால் சும்மாவா?













 






No comments:

Post a Comment