முரசொலி பவளவிழாவில் கமல் ரஜினி பங்கேற்பு
ரஜினி எப்படிபட்ட தமிழ் சொற்பொழிவாளர்?, எப்படிபட்ட திராவிட போராளி? அவர் எழுத்துக்களின் வன்மை என்ன? நிச்சயம் அவர் அங்கு இருக்கவேண்டியதுதான்.
கமலஹாசன் மாதம் மும்முறை முரசொலியில் திராவிட கோட்பாட்டை தன் பாணியில் எழுதிய எவ்வளவு பெரும் தூண். அவர் இருந்ததும் சிறப்பு
எப்படியோ இந்த மங்கூஸ் மண்டையன் மனுஷ்யபுத்திரனை அப்பக்கம் வராமல் விரட்டிவிட்டார்களாம், அதுவரை நல்லது.
கிட்டதட்ட அரைநூற்றாண்டாக முரசொலியில் தலையங்கம் எழுதிய உதயநிதி ஸ்டாலினை மறக்காமல் அழைத்திருந்தற்கு உடன்பிறப்புக்கள் சார்பில் நன்றி.
அது ஒரு பத்திரிகை என்றளவில் கூட சக பத்திரிகையாளர்களை, மூத்த பத்திரிகையாளர்களை அழைக்காமல் ஏதோ அரசியல் காட்டுவதாக நடத்தியதற்கு கோட்டான கோடி நன்றி.
அங்கிள் சைமன், எங்கய்யா சென்று தொலைந்தீர்?
கமலஹாசனின் திராவிட குரலை கேட்டீரா? எங்கே அந்த பாண்டே முன்னால் சென்று கமலஹாசன் "இனதுரோகி" அவர் "தமிழரே அல்ல" அவரை எதிர்க்கின்றோம் என சொல்லிபாருங்கள் பார்க்கலாம்
No comments:
Post a Comment