Thursday, August 3, 2017

கஸ்தூரி.. சிவாஜி சிலை.. திருமாளவன்.. அன்புமணி.. விஜயபாஸ்கர்

மானியம் ரத்துக்கு பதிலாக அமைச்சர்களின் சலுகைகளை ரத்து செய்யலாம்: கஸ்தூரி கருத்து


இப்படி நல்ல கருத்துக்களை சொல்லும் கஸ்தூரியினை வாழ்த்தலாம், இதனை அப்படியே அந்த நிர்மலா சீத்தாராமன், பொன்னார் காதுபட சொல்லுங்கள்






சிவாஜி சிலை இடமாற்றம் : செய்தி


அந்த தியாகி சோபன்பாபு சிலை ஏன் அங்கேயே இருக்கவேண்டும், அதனை எடுத்து மெரீனா பறக்கும் குதிரை சிலை முன்னால் வைத்தால் என்ன என யாரும் கேட்க கூடாது






பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் புறக்கணிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு


முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மட்டும் புறக்கணிக்கபடவில்லையா மிஸ்டர் திருமா?


மாநில கட்சிகள் ஆளும் எந்த மாநிலத்தை தேசிய கட்சி அரசுகள் கண்டு கொண்டிருக்கின்றன?




என்னவோ புதிதாக கண்டுபிடித்தது போல பேசிகொண்டிருக்கின்றார்






என் கேள்விக்கு ஸ்டாலின் நேரடியாக பதிலளிப்பதில்லை : அன்புமணி வேதனை


மிஸ்டர் லவ்பெல் , நீங்கள் நாம் தமிழர் கட்சி அலுவலகம் செல்லுங்கள், அங்கு சைமன் என்றொருவர் இருப்பார். அவரிடம் பிரச்சினையினை சொல்லுங்கள். அவர் சொல்வார்


உங்களுக்காவது துரைமுருகன் பதிலளித்தார், நான் எவ்வளவு கத்தியும் கோபாலபுரத்து தெரு நாய் கூட பதில் ஊளை இடவில்லை




ஆக கிடைத்ததை நினைத்து சந்தோஷபடுங்கள் மிஸ்டர் லவ்பெல்,


ஏதோ பெரியமனதுகாரராக இருக்கின்றபடியால் துரைமுருகன் பதிலளித்துவிட்டார் அவ்வளவுதான்.






அமைச்சர் விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில் குவாரி பரிவர்த்தனைகள் - வருமான வரித்துறை தகவல்


இதில் என்ன அதிசயம்?


முன்னாள் தலைவரின் சமையல்காரி கட்சியினை தலைவியாக நடத்தும்பொழுது, அமைச்சரின் சமையல்காரர் அவருக்கு பினாமியாக இல்லாமல் இருந்தால்தான் அதிசயம்.




சமையல்காரர்களுக்கு இது பொற்காலமான ஆட்சி.






மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் இல்லாததால் 20கிமீ நடந்துசென்ற கர்ப்பிணிப்பெண், நடுரோட்டில் பிறந்த குழந்தை இறப்பு : செய்தி


பஞ்சகவ்யம் குறித்த அறிவியல் ஆராய்ச்சிகளுக்கான பஞ்சகவ்ய ஸ்டீர்ங் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது : நாடாளுமன்றத்தில் தகவல்


இப்போழுது படிக்கலாம் வந்தே மாதரம்..










No comments:

Post a Comment